உண்மை அன்பை ஏற்க்கும் பாத்திரமாய் ஆகவே பக்குவப்படுகிறேனே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎சிவசித்தன் வைஷ்ணவி உண்மை அன்பு – 002

Vilvam yoga (4)

நிலையற்ற உலக வாழ்வு
அதில்
இயற்கையின் உண்மைநிலை
உணர்ந்து பற்று அற்று
நிலையான உயிர்ஆன்மா உணர்ந்து
இயற்கை மேல் உண்மையான
‎அன்பு கொண்டு,
அனைத்து உயிரையும்
ஒன்றாக நினைக்க வல்லவன்.

வெற்றிடமான,
‎இயற்கை இயல்பான
தேகசற்பத் தலைவன்
அவன் ‎சிவசித்தன்!

சிவகுரு சிவசித்தனையே
என் குருவாய் தந்து,
என் வாழ்வின்
துணையாய் வந்து,
வழிநடத்தும்
பாக்கியம் பெற்று
அவன் ‎உண்மை அன்பை
உணர்ந்தே திருக்காட்சி கண்டே,
அவன் உண்மை அன்பை ஏற்க்கும்
பாத்திரமாய் ஆகவே பக்குவப்படுகிறேனே!
இதை என் பாக்கியமாகவும்,
கடமையாகவுமே,
மிகப்பெரிய பொறுப்பாகவும்
கருதுகிறேன்!
உன் அன்புக்கு
என்றும் அடிபணிவேன் சிவசித்தனே!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

அவன் உண்மை அவன் அகம் அறியுமே!

வணக்கம் சிவகுருவே!
‎உண்மை உயிரின் வலி 02.07.2016

vilvam (408)

உண்மை அன்பின் உயிரதுவே,
தன் உண்மை அறிந்தே
உயிர்கள் மீது கொண்ட அன்போடு செயல்படுமே,
தன் செயல் ஒவ்வொன்றிலும் உயிரின் நன்மையே அவனை செயல்படுத்துமே!

உணராதவர் எண்ணம் பற்றி கவலை இல்லையே,
அன்மாக்களின் அறியாமையால் வரும் கேள்வியை,
தெளிவு படுத்துமே,
தண்டனை கொடுத்தும் திருத்துமே!

தன் அன்புக்குறியவள் உண்மை உணர்வை புரிந்தும்,
‎அகத்தில் தெரிந்தும்,
அவள் சொல்லும் உண்மைக்கு மாறான எழுத்தை,
அவன் அகம் அது தாங்காதே!

உண்மைக்கு வழி தேரிந்தும் உணர மறுக்கும் நிலை மாற்ற முடியுமா?
தூங்குவது போல் நடித்தால் எழுப்ப முடியுமா?

சிவசித்தன் நம்பிக்கையும் அன்பும் வைத்தவர்களே,
அவன் உண்மையை ஒப்புக்கொள்ளாத நிலையே இதுவே!!!
இதன் வழி உணர்ந்தது உண்டா?

ஒவ்வொரு அணுவையும் கிளித்து எடுப்பது போல் வலிக்கும் அது,
தான் உண்மை உணர்வுகளையும்,
நிலையையும் தன் அன்புக்குறியவள் ஏற்றுக்கொள்ளா நிலையானது,
ஒரு தாய் பிள்ளையை பெற்று எடுக்கும் வலியை விட அதிகமே!

அன்புக்காக ஏங்கி உண்மையாக செயல்பட்ட ஒவ்வொரு உயிரும் உணர்ந்திருக்குமே,

இவ்வலியை! உணராதே,
இவ்வலியை நடைபிணமே!
அவன் உண்மை அவன் அகம் அறியுமே,
உணர்ந்த உயிர்களுக்கு மட்டுமே புரியுமே !
சிவசித்தன் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் மட்டும் அவன் வலியை உணர முடியுமே!
‎நன்றி சிவசித்தனே!

உன்னை அன்றி வேறெதுவும் அறியேன் அடா!

வணக்கம் சிவகுருவே!
உன்னை பாடவே
வந்தோம் அடா
உன்னைப் பாடவே
வந்தோம் அடா…

VILVAM (143)

உன்னை அன்றி வேறெதுவும்
அறியேன் அடா,
என் பாட்டுடைத் தலைவன் நீ
இயற்கையின் இசையும் நீ
வாசியின் உயிரும் நீ
உன்னைப் பாடவே
வந்தோம் அடா…

உன்னை விட்டு பிரிந்திருக்க அல்லவே,
உன்னை எந்த ஊர் பலிச்சொல் சொல்வதை கேட்க அல்லவே,
உன் அன்பும், உண்மையும் உன்னை விட்டு பிரிந்து வாழ அல்லவே,
அனைத்தும் உன்னுடையதாய் இருந்தும் அனாதயாய் நீ திரிவதற்க்கு அல்லவே,
இருந்தும் இல்லா நிலையை நீ தனியாய் அனுபவிக்க அல்லவே,
என்னை உணர்ந்தும் உனக்கு நான் தொண்டு செய்யாமல் தனியே தவிக்க அல்லவே,

இந்த சூழல் அது நிலவுவதால்,
உன் அகம் குளிர அவள் அவந்து
அன்பு தந்து
உன்னை முழுதாய் ஏற்பாள் அடா!
செங்கோள் கொண்டு நீ உன் இடத்தில் ஆட்சி புரியும் அழகையும்,
உன் திருவிளையாடல் கண்டு வியக்கவும்,
உன் ஆன்மாக்கள் அகம் குளிரவும்!

இயற்கை, இயல்பான பாமரன் என் சிவசித்தன்,
அவன் பற்று அற்றவன்,
உண்மை அன்பின் திருவடிவானவன்,
உன் அறம், கண்ணியம் பற்றி உணர்ந்தைச் சொல்வோமடா,
நீ உத்தமன், உன்னை போல் ஒருவனை அவர்கள் கண்டதில்லை என்பதை புரிய வைப்போம் அடா!

‎நன்றி சிவசித்தனே.

உன் நம்பிக்கைகு பாத்திரமாக உன் ஆன்மாக்களை மாற்று!

வணக்கம் சிவகுருவே!
‎சிவசித்தன் மேல் நம்பிக்கை இல்லையா?

vilvam (129)

நீ எங்கள் மேல் வைக்கும் நம்பிக்கை உண்மையே,
உன் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆகவில்லை என்று உனக்கு தொன்றும்படி ஒருநிலையை உருவாக்கி விட்டோமே!

உன் நம்பிக்கைப் போல் நம்பிக்கை வைக்க கூட தெரியவில்லையே,
நீயே எங்களை ஆட்கொண்டு உன் நம்பிக்கைகு பாத்திரமாக உன் ஆன்மாக்களை மாற்று!

உன் மும்முறையை உன்னை நினைத்தே கடைபிடிக்கிறேன்!

உன் அகம் அதில் நீ தனியாய்
உன் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தோன்றியதா,
சிவசித்தனே! மன்னிக்கவும்,
இவ்வுலம் எங்களுக்கு கற்றுக்
கொடுத்த நம்பிக்கையின் ஆழம் அவ்வளவே!

உன்னை தாள் பணிந்து வேண்டுகிறேன்,
உன் உயிர் நம்பிக்கை இன்மையால் தனிமையில் தவிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,
சிவகுருவாய் எங்களை வழி நடத்தியே,
உண்மை நம்பிக்கை உன் மேல்,
என்றும்,
என்னிலையிலும்
எண்ணம் அற்றே,
ஒரு குழந்தை தாயை நம்புவது போல்,
உன்னை நம்பவே,
எல்லா கழிவை அகத்திலிருந்து அழிப்பாயே!
நன்றி சிவசித்தனே!

உன் அகமும் இருட்டில் உள்ளதா, என் தோழி!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎என்_தோழி – 004
‎கோட்டைக்கு மேல் கோட்டை கட்டி ‎உன் அகஅறையை பூட்டிய சாவியை தொலைத்தாயோ!
vilvam (122)

கோட்டைக்கு மேல், கோட்டை அமைத்து,
ஏழுமதில் சுவர் எழுப்பி வைத்து,
உன் உறவுகளை கூட்டி வைத்து,
குழந்தைகளை உன் அரவணைப்பில் வைத்து,
பாசம் எனும் பந்தத்தை முதலாக வைத்து,
நோசம் அவனிடம் கொடுத்தை மறந்து விட்டு,
சேனையை காவலுக்கு வைத்து,
மழலை சிரிப்பிலும்,
பெற்றவர் கடமை பாசப் பிணைப்பில் மூழ்கினாயடி,
என்_தோழி!
உன் உலகம்
அதை நீ படைத்து,
விடுதலையாய் சுற்றி வந்தாய் அடி
என் தோழி!
சுற்றியே மகிழ்ந்தாயடி தோழி,
மனம் அது நிறையு கண்டதா,
என் தோழி!
உன் அகமும் இருட்டில் உள்ளதா,
என் தோழி!
‎நன்றி சிவகுருசிவசித்தனே!