காலத்தால் ‎அழிக்கபடக் கூடியவையே அழிக்க பிறந்தவன் எம் சிவகுருசிவசித்தனே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே,

20140615_123618

பலன் அறிந்து,
பயன் அறிந்து பயம்
நிறைந்து செயல்படும்
செயல் பாதளத்தை நோக்கியே பயணிக்கும் வழி! – சிவசித்தன்
‎பலன் என்ன?
‎பயன் என்ன?
என்று அறிந்து
அறிவை பயன்படுத்தி
கணிக்க முற்படுபவனே!
பயன், பலன்
அவர் அவர்
எண்ணத்துக் கேற்ப,
கணிக்க நினைக்கும்
அறிவின் செயலதுவே
பயம் எனும் உணர்வை
அடிப்படையாய் கொண்டதுவே!

மனித எண்ணம்,
மனித அறிவும்!
இந்த கணிப்பு
அன்பையும் பிரிக்குமே,
‎உண்மை அன்பு
கொண்டவர்களை கண்ணில்
காட்ட மறுக்குமே,
இயற்க்கையின்
செயலை பல காரணம் கொண்டு
பரிகாரம் கொண்டு
அழிக்க நினைக்குமே!

அது அறியாததே,
இயற்கையின் இயல்பான
‎பேரன்புக்கும், ‎பேரறிவுக்கும்
முன் மனிதஎண்ணமும்,
அறிவும் காலத்தால்
‎அழிக்க படக் கூடியவையே
அழிக்க பிறந்தவன்
எம் சிவகுருசிவசித்தனே!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

பயனை மட்டும் அனுபவிக்க நினைப்பது ஏனோ?

வணக்கம் சிவகுருவே,

VILVAM (259)

‎குயிலை பிடித்து கூண்டில் அடைத்து பாட சொல்லும்உ லகம்,
‎மயிலை பிடித்து காலை உடைத்து ஆட சொல்லும் உலகம்,
‎சிவசித்தனின் உண்மையையும் உணர்வுகளையும் ஏற்காது அவன் கலையை கற்றுத்தர சொல்லும் உலகம்.
இயற்கையின் இயல்பதுவே,
இயல்பாய் உணர்ந்த உணர்வை,
அழகாய் குரல் கொண்டு, நடனம் கொண்டு, மொழி கொண்டு
உயிரினங்கள் வெளிப்படுத்துமே!

மனிதன் அவன் மன எண்ணம் கொண்டு இயற்கை இயல்பை மாற்றி,
‎சுய நலம் மட்டும் மனதில் கொண்டு,
பணம், செல்வன், சிற்றறிவு கொண்டு இயற்கையைத் துன்புறுத்தி தன் தேவையைத் தனிக்கிறானே,
அங்கு இயற்கை மேல்
‎அன்பு இல்லை,
‎அக்கறை இல்லை,
‎பணிவு இல்லை,
‎நன்றிக்கடன் இல்லை,
தொலைநோக்கு பார்வை இல்லை,

எனக்கு என்ன வேண்டும்?
அது கிடைக்க என்ன வழி?
யாரைப் பயன்படுத்தலாம்?
என்ற சிந்தனை மட்டுமே உள்ளது!

சிவசித்தன் அவன் அக உண்மை அன்பு உணர்ந்தால்,
மனிதனுக்கு எந்தத் துயரமும் இல்லை என்பதற்காக,
தன் கலையின் மூலம்
இறை உணர்வு உணர்த்தி,
வெற்றிடமான அகம் படைத்து,
இயற்கை உணர்வுகளை இயல்பாய் உணர்த்தியே!
நோய் அற்ற,
கவலை அற்ற,
உண்மை அன்பு நிறைந்த,
இயற்கையை உணர்ந்து,
‎மதித்து,
‎பணிந்து ,
‎யாசிக்க பழகி
‎பொது நலம் கொண்டு,
வருங்கால சந்ததியை கருத்தில் கொண்டு,
எல்லா உயிரின் உண்மை தேவையை உணர்ந்தே வாழும் வாழ்வைக் கொடுத்தானே!

அவன் வாழ்வின் உண்மையை ஏற்காத இவ்வுலகம்,
தனக்கு அவன் படைத்த கலையின் பயனை மட்டும் அனுபவிக்க
நினைப்பது ஏனோ?

குயிலை பிடித்து கூண்டில் அடைத்து பாட சொல்லும் உலகம்
மயிலை பிடித்து காலை உடைத்து ஆட சொல்லும் உலகம்
சிவசித்தனின் உண்மையை உணர்வை ‎உதாசினம் செய்து,
உண்மைக் கலை அவர்அவர் நலம் அதைக்கருத்தில் கொண்டும்,
சிவசித்தன் ‎அகவலியை மறந்தும் கலையை கற்றுத்தர சொல்லும் இவ்வுலகம்!

‎நன்றி சிவசித்தனே!

கோட்டைக்கு மேல் கோட்டை கட்டி ‎உன் அகஅறையை பூட்டிய சாவியை தொலைத்தாயோ!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎என் தோழி – 006
‎கோட்டைக்கு மேல் கோட்டை கட்டி ‎உன் அகஅறையை பூட்டிய சாவியை தொலைத்தாயோ!

vilvam (120)

அவன் உண்மையைப் அறிந்து கொள்ள யுகங்கள் வேண்டும் அடி,
அகம் அதில் உணர்ந்தால், நொடி போதும் அடி,
உன் அகம் உணர்ந்ததை கேட்டு செயல் படு அடி, என் தோழி!

‎இயற்கை உண்மையை எண்ணால் ‎மறுக்க, ‎மறைக்கமுடியாதடி,
என்னை எரித்தே இவ்வுளத்துக்கு ‎வெளிச்சம் போட்டு காமித்தேனடி,
இதை விட எனக்கு மறைக்க எதுவும் இல்லை அடி,  என் தோழி!

எங்கள் செயலுக்கு நாங்களும் இயற்கையும் காரணம் அடி,
எங்களை மட்டும் தண்டித்துக் கொள் அடி,
‎சிவசித்தன் சொல்லும் வாக்கும் அதுவே!
உன் கோபம் தனிக்க நாங்கள்
இரையாவோம் அடி, என்_தோழி!
எங்களைச் சேர்த்து வைத்த இயற்கையும் உன் சினத்திற்கு இரையாகும் அடி,
என் தோழி!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

1. அனுபவமே அறிவு என்பதை நீ உன்னை உணர்ந்தால் உண்மை புரியும் – சிவசித்தன்

2. பணம் உன்னை அழிக்கும். உன் அறிவு வேலை செய்யவில்லை,(காரணம் மனிதன் நடைபிணம் – ஆகையால் அறிவு உனக்கு வேலை செய்யாது) உன் பணம் தான் உன்னை ஆளுகிறது – சிவசித்தன்.

3. வழிகாட்டி இல்லாத நிலை தான், மனிதன் அறியாமைக்கு உண்மையான காரணம், அறியாமை என்றால் சொன்னால் சிலர் எனக்கு எல்லாம் தெரியும் என்பான். ஆனால் உனக்கோ உண்மையை உணர தெரியவில்லையே – சிவசித்தன்

sivssiththan 2 (27)

4. உன்னை அறியவைத்தேன், இயற்கையை அறியும் முன், எமை விட்டு விலகினாய்,
உன் உடல் அறிந்த என்வாசி அறியும் உன் ஆன்மா நிலைதன்னை,
நிலை தடுமாறினாய், மாயையால் உன் வசம் வாசியும் இருந்தும் அறியாமல்,

பல யுகம் கண்டு அறிவாய் எமை. (உன் ஆன்மா) – சிவசித்தன்.

5. தமிழன் என்றால் தமிழ் நாட்டில் தான் இருக்க வேண்டும். தமிழ்தான் பேசவேண்டும். தமிழ் மக்கள் வாழ்வில் முன்னேற வழிவகை செய்ய வேண்டும் – சிவசித்தன்.