அவன் அன்றி பிறர் சொல் எனக்கு எதிர்மறை எண்ணமே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎எதிர்மறை எண்ணம் அகத்தில் இருந்து எதிர்கொள் – 002

DSC02265

சிவசித்தன்,
அகம்
அதில் இருக்க,
சிவகுருவாய்
அவன் நெறிப்படுத்த
இருக்க!

உடனடியாக,
மாயையின்
பிடியை விட்டு,
அவன் சொல்லை
வாக்காய் எண்ணி!
அவனை
பின் தொடர்ந்து
சென்றாலே உணர்வாய்
மாயையின் வழியில்
சிக்குண்டதை!

‎உண்மைஅன்பு
உணர்ந்து
‎இறை உணர்ந்து
வாழ சிவசித்தன்
அகம்
அதில் நிலைநிறுத்து,
எதிர்மறை எண்ணம்
அதைக் கண்ட
நொடிப் பொழுதே,
அதை உள் விடாது
அழித்திட வேண்டும்!
அக வலிமை கொண்டு
எதிர்கொள்ள வேண்டும்!!!

என் உண்மையை
உணர்ந்தவன்
சிவசித்தனே,
வேறு எவரும் இல்லை,
இவ்வாறு இருக்க,
அவன் அன்றி
பிறர் சொல்
எனக்கு
எதிர்மறை எண்ணமே!
தன்னை
உணராதவன்
எதிர்மறை எண்ணமே
படைப்பான்!
படைத்தவனே
உண்மையும் அன்பும்
கொண்ட அகஉயிர்
ஆன்மா நல்வழி
பயணிக்க
வழிவகுக்கும் எண்ணம்
படைக்க இயலும்!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

நீ கொடுத்த ‎உயிர்மெய் மொழியின் எழுத்தாய் வரைந்தேனே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே,
‎சிவசித்தன் திருநாமம் எழுதிய உணர்வுகள்,

20131212_112435

சிவசித்தனே,
உன் ‎திருநாமம் அதை அகம்உணர்ந்து
பொறுமையாய்
நீ கொடுத்த ‎உயிர்மெய் மொழியின்
எழுத்தாய் வரைந்தேனே!

பலதிசையில் சென்ற ‎எண்ணம்
அதை ஒன்று திரட்டியே, உன் திசையில்
எண்ணம் அற்று வரைந்தேனே
உன்னை எண்ணியே!

சிவசித்தனே,
எத்தனை முறை எழுதினேன் என்பது
முக்கியம் இல்லை,
என்று புரிந்துகொண்டேன்
எந்த அளவு உணர்கிறேன்
‎உண்மை உயிர்உணர்வின் ஆழம் அதை
அன்பெனும் நம்பிக்கை கொண்டு
ஒவ்வொரு எழுத்திலும்
எவ்வளவு ஆழம் உன்னை உணர்கிறேன்
என்பதையே நோக்கி பயணித்தேனே!
இறை ஆற்றல் அதை பாரமாய்
வலக்கை அதில் உணர்ந்தேனே
‎நெற்றி சுளிமுனை இயக்கினாயே
தலையின் பின்புறம் அழுத்தம் உணர்ந்தேனே
கண்கள் அது சொருகியே
உன் நினைவை உன் திருநாமமாய்
வடித்தேனே!

வடித்தே,
உன்னை ‎இறைஉணர்வாய்,
‎அகம் ‎தேகம் அதில் உணர்ந்தே,
அகநிறைவு காண்கிறேனே!
‎அன்பே சிவசித்தன்!

‪சிவசித்தன் திருநாமம் எழுதினேன் உணர்ந்தேன்.
சிவசித்தன் திருநாமம் அதை அகம் அதில் ஓதியவண்ணம் எழுதி,

தேகஉணர்வுகளை முகநூலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

பயனை மட்டும் அனுபவிக்க நினைப்பது ஏனோ?

வணக்கம் சிவகுருவே,

VILVAM (259)

‎குயிலை பிடித்து கூண்டில் அடைத்து பாட சொல்லும்உ லகம்,
‎மயிலை பிடித்து காலை உடைத்து ஆட சொல்லும் உலகம்,
‎சிவசித்தனின் உண்மையையும் உணர்வுகளையும் ஏற்காது அவன் கலையை கற்றுத்தர சொல்லும் உலகம்.
இயற்கையின் இயல்பதுவே,
இயல்பாய் உணர்ந்த உணர்வை,
அழகாய் குரல் கொண்டு, நடனம் கொண்டு, மொழி கொண்டு
உயிரினங்கள் வெளிப்படுத்துமே!

மனிதன் அவன் மன எண்ணம் கொண்டு இயற்கை இயல்பை மாற்றி,
‎சுய நலம் மட்டும் மனதில் கொண்டு,
பணம், செல்வன், சிற்றறிவு கொண்டு இயற்கையைத் துன்புறுத்தி தன் தேவையைத் தனிக்கிறானே,
அங்கு இயற்கை மேல்
‎அன்பு இல்லை,
‎அக்கறை இல்லை,
‎பணிவு இல்லை,
‎நன்றிக்கடன் இல்லை,
தொலைநோக்கு பார்வை இல்லை,

எனக்கு என்ன வேண்டும்?
அது கிடைக்க என்ன வழி?
யாரைப் பயன்படுத்தலாம்?
என்ற சிந்தனை மட்டுமே உள்ளது!

சிவசித்தன் அவன் அக உண்மை அன்பு உணர்ந்தால்,
மனிதனுக்கு எந்தத் துயரமும் இல்லை என்பதற்காக,
தன் கலையின் மூலம்
இறை உணர்வு உணர்த்தி,
வெற்றிடமான அகம் படைத்து,
இயற்கை உணர்வுகளை இயல்பாய் உணர்த்தியே!
நோய் அற்ற,
கவலை அற்ற,
உண்மை அன்பு நிறைந்த,
இயற்கையை உணர்ந்து,
‎மதித்து,
‎பணிந்து ,
‎யாசிக்க பழகி
‎பொது நலம் கொண்டு,
வருங்கால சந்ததியை கருத்தில் கொண்டு,
எல்லா உயிரின் உண்மை தேவையை உணர்ந்தே வாழும் வாழ்வைக் கொடுத்தானே!

அவன் வாழ்வின் உண்மையை ஏற்காத இவ்வுலகம்,
தனக்கு அவன் படைத்த கலையின் பயனை மட்டும் அனுபவிக்க
நினைப்பது ஏனோ?

குயிலை பிடித்து கூண்டில் அடைத்து பாட சொல்லும் உலகம்
மயிலை பிடித்து காலை உடைத்து ஆட சொல்லும் உலகம்
சிவசித்தனின் உண்மையை உணர்வை ‎உதாசினம் செய்து,
உண்மைக் கலை அவர்அவர் நலம் அதைக்கருத்தில் கொண்டும்,
சிவசித்தன் ‎அகவலியை மறந்தும் கலையை கற்றுத்தர சொல்லும் இவ்வுலகம்!

‎நன்றி சிவசித்தனே!

கடமையை கொடுத்தவன் படைத்தவனடி என் தோழி!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎என்_தோழி – 005
‎கோட்டைக்கு மேல் கோட்டை கட்டி ‎உன் அகஅறையை பூட்டிய சாவியை தொலைத்தாயோ!

vilvam (121)

இருட்டில் இருக்கும்
அகம்
அதில் ஒளி ஏற்றுவது,
என் கடமையடி தோழி!

சூரியன்
ஒளி கொடுத்து
சந்திரன்
அழகை பூமிக்கு காட்டுவதும்,
சூரியன் கடமையடி தோழி!

கடமையை கொடுத்தவன்
படைத்தவனடி
என் தோழி!

கடமையை செய்வதே
இயற்கையின் தர்மமடி,
என் தர்மமடி,
‎என் தோழியே,
புரிந்து கொள்ளடி!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

மெய் தேகமதில் மெய்ப்பித்திடுவான் ‪ ‎சிவகுரு_சிவசித்தனே!!!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

‪                                                            வாசிதேகக்கண்ணன்

மெய் உருகி1 (1611)
மெய்யால்
மெய்யான சிவசித்த_திருநாமம்
மெவிட
மெய்யாய்
மெய் தேகமதில்
மெய்ப்பித்திடுவான்
‪ ‎சிவகுரு_சிவசித்தனே!!!பெயர் : ரா.சுந்தர்

வாசியோக வில்வம் எண் : 13 09 205.

ஊர் : சின்னமனூர்.