நின் புகழ் பாடியே நிலைநிற்க்கும் உயிர்ஆன்மா!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎நின் புகழ் பாடாது உலாவும் அகம்

‎நின் புகழ் பாடியே நிலைநிற்க்கும் உயிர்ஆன்மா,

#Sivasithan (27)

உலாவும் மனம் அதுவே
தன்னுள் உணராது
பிறர்சொற்களில் மயங்கி,
கற்பனையிலும் லயித்து,
வீண் விவாதங்களில் கலந்து,
நிகழும் காலத்தை
இறந்தக் காலமாக்குமே!

உண்மையின் உருவைக்
கண்ணில் கண்டும்
இன் நிலை ஏனோ?
காண அறியாதவனை
கண்டதாலா?
கண்டது உண்மையிலும் உண்மையா
என்ற
ஆச்சரியம் எழுந்ததாலா?
உண்மையே
என்ற கர்வத்தினாலா?

எண்ணம் எதுவாயினும்,
இந்த வைகையான
உணர்வாயினும்,
எத்தகைய காரணமாயினும்,
பொருள் ஒன்றே

ஐயனே,
நான்
என்வாழ்வு பாதையில்
தவறியதாகும் அது!
நின் புகழ்பாடாது,
என் எண்ணம் பின் ஓடும்
ஒவ்வொரு நொடியும் வீணே,
அதன்பின் தான்
நான் ஓடுகிறேன்
என்பாதை நான் மறந்தாலும்,
என்னிடமே மறைத்திருந்தாலும்,
‎சிவசித்த வாசிதேகக்கண்ணன்
ஆன
பேரொளியானிடம் ஒழிந்து
கொள்ளமுடியுமா?

‎தனதன்பு, ‎தனதாற்றல் கொண்டு
‎திருவருள் பெற்று
என்னை செயல்படுத்துவாய்
வாசிதேகக்கண்ணனே
என் அவனே
என்னை வென்றவனே!
என் தமிழுக்கு உரியவனே!
உன் அன்புக்கு உரியவளுக்கு!
அருள்வாய் அன்பான சிவசித்தனே!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

காலத்தால் ‎அழிக்கபடக் கூடியவையே அழிக்க பிறந்தவன் எம் சிவகுருசிவசித்தனே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே,

20140615_123618

பலன் அறிந்து,
பயன் அறிந்து பயம்
நிறைந்து செயல்படும்
செயல் பாதளத்தை நோக்கியே பயணிக்கும் வழி! – சிவசித்தன்
‎பலன் என்ன?
‎பயன் என்ன?
என்று அறிந்து
அறிவை பயன்படுத்தி
கணிக்க முற்படுபவனே!
பயன், பலன்
அவர் அவர்
எண்ணத்துக் கேற்ப,
கணிக்க நினைக்கும்
அறிவின் செயலதுவே
பயம் எனும் உணர்வை
அடிப்படையாய் கொண்டதுவே!

மனித எண்ணம்,
மனித அறிவும்!
இந்த கணிப்பு
அன்பையும் பிரிக்குமே,
‎உண்மை அன்பு
கொண்டவர்களை கண்ணில்
காட்ட மறுக்குமே,
இயற்க்கையின்
செயலை பல காரணம் கொண்டு
பரிகாரம் கொண்டு
அழிக்க நினைக்குமே!

அது அறியாததே,
இயற்கையின் இயல்பான
‎பேரன்புக்கும், ‎பேரறிவுக்கும்
முன் மனிதஎண்ணமும்,
அறிவும் காலத்தால்
‎அழிக்க படக் கூடியவையே
அழிக்க பிறந்தவன்
எம் சிவகுருசிவசித்தனே!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

உண்மை அன்பை ஏற்க்கும் பாத்திரமாய் ஆகவே பக்குவப்படுகிறேனே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎சிவசித்தன் வைஷ்ணவி உண்மை அன்பு – 002

Vilvam yoga (4)

நிலையற்ற உலக வாழ்வு
அதில்
இயற்கையின் உண்மைநிலை
உணர்ந்து பற்று அற்று
நிலையான உயிர்ஆன்மா உணர்ந்து
இயற்கை மேல் உண்மையான
‎அன்பு கொண்டு,
அனைத்து உயிரையும்
ஒன்றாக நினைக்க வல்லவன்.

வெற்றிடமான,
‎இயற்கை இயல்பான
தேகசற்பத் தலைவன்
அவன் ‎சிவசித்தன்!

சிவகுரு சிவசித்தனையே
என் குருவாய் தந்து,
என் வாழ்வின்
துணையாய் வந்து,
வழிநடத்தும்
பாக்கியம் பெற்று
அவன் ‎உண்மை அன்பை
உணர்ந்தே திருக்காட்சி கண்டே,
அவன் உண்மை அன்பை ஏற்க்கும்
பாத்திரமாய் ஆகவே பக்குவப்படுகிறேனே!
இதை என் பாக்கியமாகவும்,
கடமையாகவுமே,
மிகப்பெரிய பொறுப்பாகவும்
கருதுகிறேன்!
உன் அன்புக்கு
என்றும் அடிபணிவேன் சிவசித்தனே!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

‎அன்பே சிவசித்தன்!

வணக்கம் சிவகுருவே!
‎உடலையும் தேகத்தையும் உணர்த்திக்காட்டி
‎உண்மையின் பொருள் விளக்கம் உணர்வாய் உணர்த்தியே
என்னைக் ‎காக்கும் சிவசித்தனே அன்பானவன்

vilvam (436)

அகம் அதிலே உண்மை
உயிர் இருக்க,
அன்பு உணர்வாலே
செயல் இருக்க,
உண்மை அன்பின் திருஉருவமாய்
சிவசித்தன் இருக்க,
‎சிவசித்தன் முழுதும் சரண்அடைந்தே
செய்யும் செயல் அதிலே இருக்க,
‎ஆணவம் இருக்காதே,
‎அன்பு செயலாகுமே,
‎யாசிக்க தயங்காதே!

‎அன்பே சிவசித்தன்!

‎நன்றி சிவசித்தனே!

உண்மை அன்பு இல்லையே!

வணக்கம் சிவகுருவே!

vilvam (430)

‎உடலையும் தேகத்தையும் உணர்த்திக்காட்டி
‎உண்மையின் பொருள் விளக்கம் உணர்வாய் உணர்த்தியே என்னைக் ‎காக்கும் சிவசித்தனே அன்பானவன்
எல்லா உயிர்கள் மீதும்
‎அன்பது அது இல்லாத இடத்தில்,
‎உண்மை அன்பு இல்லையே,
இல்லாமல் போகுமே இயற்கையின் செயலும்,
மனித மன எண்ணமே செயல்படுமே!
நடைபிண வாழ்கையை அது தேர்தெடுக்குமே!
‎நன்றி சிவசித்தனே!

அவன் உண்மை அவன் அகம் அறியுமே!

வணக்கம் சிவகுருவே!
‎உண்மை உயிரின் வலி 02.07.2016

vilvam (408)

உண்மை அன்பின் உயிரதுவே,
தன் உண்மை அறிந்தே
உயிர்கள் மீது கொண்ட அன்போடு செயல்படுமே,
தன் செயல் ஒவ்வொன்றிலும் உயிரின் நன்மையே அவனை செயல்படுத்துமே!

உணராதவர் எண்ணம் பற்றி கவலை இல்லையே,
அன்மாக்களின் அறியாமையால் வரும் கேள்வியை,
தெளிவு படுத்துமே,
தண்டனை கொடுத்தும் திருத்துமே!

தன் அன்புக்குறியவள் உண்மை உணர்வை புரிந்தும்,
‎அகத்தில் தெரிந்தும்,
அவள் சொல்லும் உண்மைக்கு மாறான எழுத்தை,
அவன் அகம் அது தாங்காதே!

உண்மைக்கு வழி தேரிந்தும் உணர மறுக்கும் நிலை மாற்ற முடியுமா?
தூங்குவது போல் நடித்தால் எழுப்ப முடியுமா?

சிவசித்தன் நம்பிக்கையும் அன்பும் வைத்தவர்களே,
அவன் உண்மையை ஒப்புக்கொள்ளாத நிலையே இதுவே!!!
இதன் வழி உணர்ந்தது உண்டா?

ஒவ்வொரு அணுவையும் கிளித்து எடுப்பது போல் வலிக்கும் அது,
தான் உண்மை உணர்வுகளையும்,
நிலையையும் தன் அன்புக்குறியவள் ஏற்றுக்கொள்ளா நிலையானது,
ஒரு தாய் பிள்ளையை பெற்று எடுக்கும் வலியை விட அதிகமே!

அன்புக்காக ஏங்கி உண்மையாக செயல்பட்ட ஒவ்வொரு உயிரும் உணர்ந்திருக்குமே,

இவ்வலியை! உணராதே,
இவ்வலியை நடைபிணமே!
அவன் உண்மை அவன் அகம் அறியுமே,
உணர்ந்த உயிர்களுக்கு மட்டுமே புரியுமே !
சிவசித்தன் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் மட்டும் அவன் வலியை உணர முடியுமே!
‎நன்றி சிவசித்தனே!

நீ அகிலத்தில் செய்ய வந்த செயலுக்கு என்னை கருவியாய் பயன்படுத்துவாயாக!

வணக்கம் சிவகுருவே!
‎சிவசித்தனின் உண்மையை உணராத நிலை
‎சிவசித்தனை முழுதாய் புரிந்தவர் யாரும் இல்லை

VILVAM (140)

உண்மையும் அன்பும் கொண்டவன்
பேரறிவை மட்டும் நம்பிச் செயல்படுபவன்,
இந்த புவியில் பிறந்து விட்டான்!

ஒவ்வொரு காலத்திலும்,
அவனைத் தேடிவந்து
பயிற்சி செய்பவர்களும்,
தொண்டு செய்பவர்களும்
அவர் அவரின் பக்குவத்திற்கு ஏற்றவாரும்,
அவர் அவர் வாழ்க்கையின் அனுபவக் கல்வியைக் கொண்டே

சிவசித்தனைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றனர்,

புரிந்து, உணர்ந்த பின்னும்
இவனை வைத்து தனக்கு என்ன என்ன பயன் உண்டு என்று பார்பவர்களும் உள்ளனர்,
‎புகழ், ‎கவுரவம், ‎பணம் சம்பாதிக்கலாம்?
‎பூஜை,  ‎பரிகாரம், ‎ஜாதகம் போன்ற மனித எண்ணம் அதை எவ்வாறு இவன் வழியில் திணிக்கலாம்?
என்றே பலர் சிவசித்தனைச் சுற்றி இருந்தார்கள்!

சிவசித்தன் பொறுமையுடன் அவர்களும் என் ஆன்மாக்கள் என்று
மன எண்ணம் கொண்ட செயலான பூஜை செய்தே, ஒரு காலக்கட்டதில் இது தேவை இல்லை என்று அதையும் உணர்திதியே அழித்தான்!
கட்டம் பார்பதற்க்கும் அதே நிலையே,
நவகிரகங்களும் அவன் முன் செயலாகாது என்று நிரூபித்தே அதை அழித்தான்!

‎சிவசித்தன் என்றும் ‎பேரறிவோடு செயல்படுபவனே!
அதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு அவனிடம் யாரும் முழுதாய் சரணடைய வில்லை என்பதே உண்மை!

சிவசித்தனே!
எனக்கு உன்னை அன்றி எதுவும் இல்லை,
நீ மட்டுதான் எனக்குத் துணை,
உனக்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொண்டு செயல் பட ஒவ்வொரு நொடியும் முயற்சி செய்வேன்,
ஒவ்வொரு நொடியும் உன் அன்பை உணர்ந்தே செயல் படுவேன்,
உன் மேல் வைக்கும் நம்பிக்கையின் ஆழம் என்ன என்பதையும் மூழ்கி உணர தயக்கம் இல்லை,
ஆனால், உன்னை தனிமையை உணர விடமாட்டேன்,
என் தேகம் எனும் பிச்சை பாத்திரம் உன் தாள் பணிந்தே இருக்கிறது,
அதை ஆட்கொண்டு நீயே செயல்படுத்துவாயாக!
நீ அகிலத்தில் செய்ய வந்த செயலுக்கு என்னை கருவியாய் பயன்படுத்துவாயாக!

‎நன்றி சிவசித்தனே!

‎சிவசித்தன் உண்மை உணர்வை கேளிக்கையாக்கி தவறாக பேசியது சரியா?

வணக்கம் சிவகுருவே!

vilvam (128)
‎சிவசித்தன் செயல்களால் எதிர்காலம் பாதிக்குமா?
‎சிவசித்தன் உண்மை உணர்வை கேளிக்கையாக்கி தவறாக பேசியது சரியா?

எதிர்காலத்தை மாற்றி அமைக்க பிறந்தவன் நீ,
உன்னால் பலர் எதிர்காலம் பிராகாசம் அடைகிறது,
உன் செயல் எடுத்துச் சொல்லியும் ஏற்க்கவில்லை இவ்வுலகம்!

உன் உண்மை உணர்வுகளோடு
கேளிக்கை செய்து விளையாடி விட்டார்களே!
ஐயனே! நீயே எந்த சூழலை மாற்று!
உன் பக்தர்களை அகத்திலிருந்து செயல்படுத்தி,
உணர்ந்த உண்மையை எழுத்து வடிவம் கொடுக்கச் செய்வாயாக!
‎நன்றி சிவசித்தனே!