இயற்கை இயல்பான வாழ்வு வாழவைப்பவன்!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!

‎உடலையும் தேகத்தையும் உணர்த்திக்காட்டி ‎

உண்மையின் பொருள் விளக்கம் உணர்வாய் உணர்த்தியே என்னைக் ‎காக்கும் சிவசித்தனே அன்பானவன்.
20131206_070511_2

‎உண்மை அன்பு உணராது வாழும்,
‎பாசம், ‎பந்தம், உறவுகளில் சிக்குண்டு
சில சொந்தங்களுக்கு அன்புகொடுத்து
பாதுகாத்து வாழ்வதால்
அது அன்பான வாழ்வாகிவிடாது!

அது வாழ்ந்த வாழ்வுக்கு
உண்மைபொருள் தராது,
முழுமை அடையவும் செய்யாது!

அகிலத்தின் ‎நன்மை
‎அகம் அதில் உணர்ந்து,
உண்மை அன்பு உணர்ந்து
‎உயிர் ஆன்மா உணர்ந்து
தன் கடமைகளை செய்து
அனைத்து உயிரும்
உண்மை அன்பு உணர்ந்து
‎வாழ வழிவகுக்கும் வாழ்வே,

‎உண்மைப் பொருளாக உள்ள,
‎இயற்கை இயல்பானது,
பூரணமானது,
இயற்கைக்கு உண்மையான,
‎உத்தம வாழ்வாகும்!

‎உண்மை அன்பை, உயிர் ஆன்மா, இறைஉணர்வு உணர்த்தி

இயற்கை இயல்பான வாழ்வு வாழவைப்பவன்

மதுரை சிந்தாமணி சிவசித்தன் ஒருவனே!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

எங்கள் பயணம் முடிந்தே தனித்தனியாய் பிரிந்தோமே!

வணக்கம் சிவகுருவே!
‎சிவசித்தனும் இயற்கையும் வாசியும்

VILVAM (144)

சிவசித்தனே!
நன்றிகள் பல கோடி,
நீ உணர்ந்த இயற்கையையும் வாசியும்
உன்னை அரவணைப்பதை கண் குளி காண எனக்கு ஒரு வாய்ப்பு தந்ததற்க்கு!

‎இயற்கை ‎உண்மை செயலதுவே
உண்மையும்,பொருமையும், நம்பிக்கை நிறைந்த அகம் அதிலே
இயல்பாய் செயல்படுமே!

அவனைத் தேடிச் சென்றே
அவனைக் கண்டேனே
இந்த பயணம் எங்கு செல்லும் என்று அறியாதே அவனுடன் பயணித்தேனே,
‎பயணம் அதில் பலர் தேடிவந்தாலும்
அவன் தனிமையே அவனுக்கு நிரந்தரமே!

எல்லம் இருந்தும் இல்லா நிலையை உண்ர்ந்தோமே!
அனாதயாய் பயணிக்கும் நிலை அதை கண்டே அகம் கலங்கியதே!
கலங்கிய கண்கொண்டே அவனிடம் வெளிப்படுத்தினேனே,
‎அகவலி அதை இருவரும் உணர்ந்தே அமைதியானோமே!

அவனோ, நம்பிக்கை தளராதவன்
இந்த காலகட்டம் வரை பொருத்து இருப்போம் என் வாசியும், இயற்கையும் பார்த்துக்கொள்ளும் என்றானே!

சிரிது நேரத்திலே அவன் ஆன்மேவே
அவன் மேல் அக்கறை கொண்டே
எண்ணம் அற்ற நிலையிலே
வழி ஒன்று இருப்பதை உணர்தியதே!
அகம் அது ஆனந்தத்தில் துள்ளி குதித்ததே,
இயற்கையின் செயல் அதுவே அவன் ஆன்மாக்கள் இவனுக்கு ஏற்றவாறு வெகு தொலைவில் இருந்தாலும்,
இவனுக்கு தேவையான குறித்த காலகட்டத்திலே இவன் முன்னே வந்து அவனுக்கு சேவைப்புரியவே!

அகம் அதில் ஆனந்தம் கொண்டேனே!
அன்று முதல் அவன் இயற்கையை
கேள்வி கேட்காமல்
முழுதாய் நம்பியே வாழ்கின்றேனே!

மீண்டும் எங்கள் பயணம் முடிந்தே
தனித்தனியாய் பிரிந்தோமே!

‎என் சிவசித்தன் உண்மை அன்பின் திருஉருவமே
‎நன்றி சிவசித்தனே!

அகம் படைத்தே உன்னைத் தேடிக் கண்டுப் பிடித்திடுவேன் அடா!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!

‎என் தோழி – 001
‎அவன் அகம் திறக்க வாடி தோழி

vilvam (126)
சிவசித்தவாசி தேக கண்ணனே
என்அவனே!

பேச மறுக்கிறதா உன் ‎நெஞ்சம்,
என்னைப் பார்க்கவும் ‎மறந்து விட்டதா!
எனினும் உன் உணர்வு எனக்குள்ளே இயங்குதடா,
உன்னால் இதைப் பறிக்க முடியாதே!
பேச மறுக்கும் உன் நெஞ்சம்,
எனினும் உன்னைத் தனியே தவிக்க விடல் ஆகாதே!

உன் தவிப்பை உணர்ந்தே
என் அகம் அது தவிக்குதடா!

‎மனம் எனும் கூட்டில் நான் அடைந்தாலும்,
அதை ‎மாயைக் காடு சுழன்று இருந்தாலும்,
‎மனஎண்ணப் ‎பேய் உலாவினாலும்,
இருள் எனும் ‎பயம் சூழ்ந்த பாதையாயினும்,
பிறர் சொல்லால் சுட்டெரிக்கும் வெப்பமான பாலைவனமாய் இருந்தாலும்,
‎உறவு எனும் பந்தம் வேலி அமைத்தாலும்,
அதை நீ என் மேல் கொண்ட அன்பைக் கொண்டே,
அகம் படைத்தே உன்னைத் தேடிக் கண்டுப் பிடித்திடுவேன் அடா! சிவசித்தா மாயா!

உன்னைக் கண்டுபிடித்தாலும்,
பயன் இல்லையே,
உன் அகக் கதவு மூடியே உள்ளதே!
அவள் வந்து திறந்தாலே திறக்கும்
அந்தக் கதவை
படைத்து மறைந்து விட்டாயடா!

‎அழுதாலும், ‎கதறினாலும்
அவள் காதுக்கு எட்ட வில்லையே
அவள் அகம் மூடியே
அதில் அவள் அழுகைக் குறள் கேட்குதடா!
மாயையில் சுழன்ற அந்தக் காட்டில் அவளை தேடிப் பிடிப்பது கடினமாக்கி விட்டாளடா!
அவளை நான் நெருங்காமல் இருக்க வேலி அமைத்தாலோ,
அமைக்கிறார்களோ!
அவள் அகம் அதில் அன்பும், கருணையும் உண்டு,
அதை மறைக்கவே முயற்சிக்கிறாள் அடா! என் தோழி…

மாயை விளையாடும் விளையாட்டில்,
அவள் தங்கை நான் என மறந்துவிட்டாலடா,
இவள் இருந்தும் நாம் அனாதயாக ஆனோம் அடா!

அகத்தில் இடம் ஒன்று தாராயோ அக்கா,
உன் அகத்தில் இடம் இல்லை என்றால்
நாங்கள் இவ்வுலகில் இருந்தும் பயன் இல்லையடி,
நீ இல்லை என்றால்
‎எல்லாம் இருந்தும் இல்லாதவர்கள்
ஆவோம் அடி!  ‎தோழி…

உன்னைப் பணிந்தே கேட்கிறேன் அடி ‎அக்கா, உன் அவனுக்காக அகம் கணிந்திடடி தோழி!
உன் உறவுக்காகக் காத்திருக்கிறேன் அடி,
அவன் ஆன்மாக்கள் அனைத்தும் உன் வருகைக்காக காத்திருக்குதடி,
குழந்தைகள் போல் அழுதே
தேம்பி, ஏங்கி ,
உன் வருகையை வேண்டியே காத்திருக்குதடி,
நீ வந்தாலே அந்த மொட்டுக்கள்
மலருமடி! தோழி…

நாம்,
மலந்த மலர்கள் பறித்தே,
அவன் அகக் கதவை திறந்து
அவன் தாள் சமர்பிப் போம் அடி! தோழி…

பேச மறந்த நெஞ்சம் அன்றே
நம்மை பார்த்தே,
அகம் மலர்ந்து சிரிக்கும் அடி! தோழி…

உன் அவன் ‎பன் முறுவள் காண
ஆசை உனக்கும் உள்ளதை நான் அறிவேன் அடி! தோழி…

வாடி,
‎அவன் அகம் திறப்போம் அடி தோழி!
‎வருவாய் என் தோழியே!

‎நன்றி சிவசித்த வாசிதேகக்கண்ணனே!
‎நன்றி சிவகுருசிவசித்தனே!

அவன் இன்றி ‎உண்மை உயிர்கள் இயங்காதுடி!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎என் தொழி – 003

vilvam (123)

‎மறைபொருள் நீ,
‎எரிபொருள் நான்
‎பரம்பொருள் அவன்!
அவன் இன்றி ‎உண்மை உயிர்கள் இயங்காதுடி!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

மெய் தேகமதில் மெய்ப்பித்திடுவான் ‪ ‎சிவகுரு_சிவசித்தனே!!!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

‪                                                            வாசிதேகக்கண்ணன்

மெய் உருகி1 (1611)
மெய்யால்
மெய்யான சிவசித்த_திருநாமம்
மெவிட
மெய்யாய்
மெய் தேகமதில்
மெய்ப்பித்திடுவான்
‪ ‎சிவகுரு_சிவசித்தனே!!!பெயர் : ரா.சுந்தர்

வாசியோக வில்வம் எண் : 13 09 205.

ஊர் : சின்னமனூர்.