சிவசித்தன் வாசியோகம்: விழி இருந்தும் வழி அறியாது

சிவகுருசிவசித்தர்ஆசியால்,

20140603_053004விழி இருந்தும் வழி அறியாது
உடல் சுமந்த கழிவை
தானே அறிந்து உண்மை வளர்த்த வாசியால்
காலம் வகுத்து கால் உள் தொடுத்து
உண்மை உயிரை உணர
தமிழ் வாசியை ஏற்ற வைத்து
என் மல உடம்பை மண உடம்பாய் மாற்றி
மண்டிட்டுக் கிடந்த என் உயிரை
உண்மையால் உயிர் பெறச் செய்து
உண்மை இதுவே என் உடலிலே
பல விளக்கங்கள் காட்டி
கட்டுண்டு கிடந்த என் சர்ப்பத்தை
மூவரி மந்திரத்தின் மூலம் – என்
மூலமே அறியாவண்ணம் ஆடவைந்து
உயிர் உண்மை அகமனை
அகத்தே காட்டி – அகிலமும்
உன் உடலிலே என உணர்த்தி
என் எண்ணத்தின் மூலமாய்
என் மனமதில் வீற்றிருக்கும்
விஸ்வரூபனே! நான் என
உணர்த்தி ஆத்மதரிசனம் பலமுறை
தந்து பிறப்பின் நோக்கினை உணர்த்தி
ஆதி அந்தமுமாய் ஆர்ப்பரித்து அற்புதங்கள்
நிகழ்த்தி எனை உய்ய வந்த உண்மையே
சிவகுருவே! சிவசித்தரே!

வாசியோக பக்தன்

ர.சுந்தர்

வாசியோக வில்வம் எண் : 13 09 205

சின்னமனூர்.தேனி மாவட்டம்.

சிவசித்தரின் பாமாலை|009|

சிவகுருவே சரணம்

உண்டு உறங்கி ஊன் பெருத்து
உன்னுள் இருக்கும் கருவறையை
கழிவறையாக, மாற்றி கண்ணீர்
சிந்தும் பேதைப் பெண்ணே
பிற ஊனின் சவத்தை உண்டு
சிதைக்கின்றாய், உன் உடலை
என் செய்வேன், விதி என்று கலங்காதே
வழி உண்டு நீ வாழ, சிந்தாமணி சீமையிலே
கருணாமூர்த்தியாம், எம் சிவகுருவே
மூர்த்தி சிறிதெனினும், கீர்த்தி பெரிதென
வீற்றிருக்கும் வில்வத்திருத்தலத்திலே
உண்மையைத் தேடி வரும்
உன் வாழ்வும் நலமடையும், வாசியாலே.

சிவசித்தரின் பாமாலை|005|

சிவகுருவே சரணம்
வாழ்த்துப்பாடல்

நாசி வலி நுழைந்து, கசடு பிணி களைந்து
ஊசி முனை தவத்தாலும்
உணர முடியாத உன்னதாம்
உடல் நலத்தை, என்னுள்
அறியச் செய்த எம் வாசி
வாழிய, வாழியவே
அள்ளக் குறையாத
அட்சயமாம், வாசியை
எமக்களித்து எள்ளளவும்
பயமின்றி எற்றமுடன்
வாழச்செய்த, சுயம்புவாம்
எம், சிவகுருநாதர், வாழிய வாழியவே
சிவனுறை, சிந்தாமணியில்
எழிலோடு வீற்றிருக்கும்
ஸ்ரீ வில்வத்திருத்தலம்
வாழிய வாழியவே.

சிவசித்தரின் பாமாலை|006|

DSC_0383சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

இறைசக்தியின் முழுவம்சமாய் குருவாய்

வீற்றிருக்கும் சிவகுரு சிவசித்தனின் திரு உருவம்

– தனை இல்லமதில் வைத்து திருச்சுடரேற்றி

சிவகுருநாதர் மந்திரத்தை முப்பது தடவை ஆழ்மனதில்

ஓதும்போது தீவினைகள் அண்டாது எதிர்மறை

சக்தியெல்லாம் இல்லமதில் இல்லாமல் போகுமே !

 

**********************

 

சித்தியிலே பெரிய ஞானசித்தி எம் ஆசான்

சிவகுரு சிவசித்தன் பிராணன் மூலம் அறிய

வைக்கும் சிவமாகிய வாசி சித்தியே ! இச்சித்தியினை

அறிந்தவர்க்கு எல்லாம் தெளிந்து உள்ளமது

ஒருங்குற்று ஆழ்மனது அமைதியுறுமே ! அவனியிலே

இதுபோன்ற வாசிசித்தி அளிக்கும் சிவசித்தனின்றி வேறுஇலர்!      

 

**********************

 

ஆயிரம் ஆலயங்கள் அமைந்தாலும் அந்த

ஆலயத்தில் பல பூஜைகள் செய்தாலும்

கிட்டாத புண்ணியத்தை, பெற முடியாத சித்தியினை

சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் கற்றவர்க்கு

கைக்கூடும் இது கால் அறிந்த மானிடர்கள்

அறியக் கூடிய அற்புத செயலன்றோ ! 

சிவகுருவின் பக்தன்

 – ம. சண்முக பாண்டியன்,

சிந்தாமணி,மதுரை.