அனைத்தும் கடந்து அனைத்திலும் கலந்த சிவசித்தனே …

சிவகுருவே சரணம்
சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

098

அறிவை அறிவால் அறிந்து கற்க
உணராதோர்க்கும் உரைத்து எம்முடல்
உற்றபிணிதனை நீக்கி என்றும்
எளியோர் நெஞ்சினில் உறையும் சுடரே!

அனைத்தும் கடந்து அனைத்திலும் கலந்து
அனைத்துமாகி அனைவர்க்கும் அருளி
அன்பால் உணர்த்தி ஆழ்ந்து நின்று
அன்பினால் எம்மை ஆளும் அருளே!

ஒன்றும் இரண்டும் பலவும் கலந்து
ஒன்றாகி நிற்கும் விந்தையின் வித்தே
தெரியச் செய்து தெளியச்செய்து தெளிவினிலே
அறியச் செய்யும் அறிவின் சிவகுருவே!

வாசிக்குள் வளைந்து வாழ்ந்து வாசியால்
வாசியை வளைத்து வசமாக்கி
வாசியை வறியோர் தம் வாழ்வுக்களித்த
வாசியே எம் வாழ்வே!

எல்லாமும் உம்முள் கிடக்க வெளி
எல்லாமும் கடந்து எம் உள்ளே
எல்லாமும் ஆகி நிற்கும் எம்சிவகுருவே
எல்லோரும் வேண்டுவது உன் அருளே!

நன்றி.

 

பணிவுடன்,
சிவகுருவின் பக்தை,
க.சங்கரவடிவு,
வாசியோக வில்வம் எண்: 12 09 104