உயிர் ஆன்மாக்களை உண்மை அன்பு உணர்ந்து வாழவைப்பவன்!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!

20140603_142147

சிவசித்தன் தனியானவன்!
‎அனைவருக்கும் அவன் சிவகுருவே!
‎உணர்ந்தவருக்கு சிவசித்தன்.

‎மக்கள் துயர் துடைக்க வந்தவன்
அவன்,
‎தீயதை அழிக்க அக்னியில்
‎தவம் புரிபவன்!
‎உயிர் ஆன்மாக்கள்
‎உண்மை அன்பு தந்து
ஆனந்தமாய் வாழவைப்பவன்!

பற்று அற்றவனாய்
தனித்து நின்று,
உயிர் ஆன்மாக்களை
உண்மை அன்பு உணர்ந்து வாழவைப்பவன்!

அவன் ‎தனியானவன்!
அனைவரும் அவனை
சிவகுருவாய் ஏற்றாலே,
அவர் அவர் வாழ்வில்
வந்த பயன்கள் நிறைவடையுமே!

உங்கள் உணரவும்,
‎தனதன்பு, ‎தனதாற்றல்,
‎தனதருள் உணர்ந்து
‎திருவருள் பெற்று வாழ்வும்
சிவசித்தனை உறவு
அற்றவனாய் பார்த்து
அவனை சிவகுருவாய்
ஏற்று சரணடைவதே
உண்மையான,
அன்பான,
‎இயற்கை இயல்பான
வாழ்வு வாழ வழியாகும்!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

இயற்கை இயல்பான வாழ்வு வாழவைப்பவன்!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!

‎உடலையும் தேகத்தையும் உணர்த்திக்காட்டி ‎

உண்மையின் பொருள் விளக்கம் உணர்வாய் உணர்த்தியே என்னைக் ‎காக்கும் சிவசித்தனே அன்பானவன்.
20131206_070511_2

‎உண்மை அன்பு உணராது வாழும்,
‎பாசம், ‎பந்தம், உறவுகளில் சிக்குண்டு
சில சொந்தங்களுக்கு அன்புகொடுத்து
பாதுகாத்து வாழ்வதால்
அது அன்பான வாழ்வாகிவிடாது!

அது வாழ்ந்த வாழ்வுக்கு
உண்மைபொருள் தராது,
முழுமை அடையவும் செய்யாது!

அகிலத்தின் ‎நன்மை
‎அகம் அதில் உணர்ந்து,
உண்மை அன்பு உணர்ந்து
‎உயிர் ஆன்மா உணர்ந்து
தன் கடமைகளை செய்து
அனைத்து உயிரும்
உண்மை அன்பு உணர்ந்து
‎வாழ வழிவகுக்கும் வாழ்வே,

‎உண்மைப் பொருளாக உள்ள,
‎இயற்கை இயல்பானது,
பூரணமானது,
இயற்கைக்கு உண்மையான,
‎உத்தம வாழ்வாகும்!

‎உண்மை அன்பை, உயிர் ஆன்மா, இறைஉணர்வு உணர்த்தி

இயற்கை இயல்பான வாழ்வு வாழவைப்பவன்

மதுரை சிந்தாமணி சிவசித்தன் ஒருவனே!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!