அவன் அன்றி பிறர் சொல் எனக்கு எதிர்மறை எண்ணமே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎எதிர்மறை எண்ணம் அகத்தில் இருந்து எதிர்கொள் – 002

DSC02265

சிவசித்தன்,
அகம்
அதில் இருக்க,
சிவகுருவாய்
அவன் நெறிப்படுத்த
இருக்க!

உடனடியாக,
மாயையின்
பிடியை விட்டு,
அவன் சொல்லை
வாக்காய் எண்ணி!
அவனை
பின் தொடர்ந்து
சென்றாலே உணர்வாய்
மாயையின் வழியில்
சிக்குண்டதை!

‎உண்மைஅன்பு
உணர்ந்து
‎இறை உணர்ந்து
வாழ சிவசித்தன்
அகம்
அதில் நிலைநிறுத்து,
எதிர்மறை எண்ணம்
அதைக் கண்ட
நொடிப் பொழுதே,
அதை உள் விடாது
அழித்திட வேண்டும்!
அக வலிமை கொண்டு
எதிர்கொள்ள வேண்டும்!!!

என் உண்மையை
உணர்ந்தவன்
சிவசித்தனே,
வேறு எவரும் இல்லை,
இவ்வாறு இருக்க,
அவன் அன்றி
பிறர் சொல்
எனக்கு
எதிர்மறை எண்ணமே!
தன்னை
உணராதவன்
எதிர்மறை எண்ணமே
படைப்பான்!
படைத்தவனே
உண்மையும் அன்பும்
கொண்ட அகஉயிர்
ஆன்மா நல்வழி
பயணிக்க
வழிவகுக்கும் எண்ணம்
படைக்க இயலும்!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

‎சுவாசம் ஆனவனே, வாசியானவனே, என் அவனே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎சிவசித்தன் திருநாமம் எழுதி உணர்ந்தவை.

20131206_070413_1

சிவசித்தனே,
உன் திருநாமம் அதை
எழுத்தாய் வடிக்க வடிக்க
அகம்
வெற்றிடமானதே!

வெற்றிட நிலை அதில்
உன் திருநாமம் அதை எழுதியே
‎காற்றும் ‎வாசியும் உடல் அதில் செயலாவதை
உணர்ந்தே,
கழிவான வாய்வு ஏப்பமாய் உடல் பிரிந்தே
தேகமானதே!

‎தேகம் ஆன ஆலயத்தில்
‎அகம் எனும் கருவறையில்
உன்னை எண்ணியே உன் திருநாமம் ‎எழுத
என் வல கை பாரமாய் ஆனதே
‎நெற்றி ‎சுளிமுனை இயக்கினாயே!

‎மொழி அது எழுத்தின்
வடிவிலும் உன்னை உணர்கிறேன்
‎சிவசித்தனே!
‎சுவாசம் ஆனவனே,
வாசியானவனே,
என் அவனே!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

எங்கள் பயணம் முடிந்தே தனித்தனியாய் பிரிந்தோமே!

வணக்கம் சிவகுருவே!
‎சிவசித்தனும் இயற்கையும் வாசியும்

VILVAM (144)

சிவசித்தனே!
நன்றிகள் பல கோடி,
நீ உணர்ந்த இயற்கையையும் வாசியும்
உன்னை அரவணைப்பதை கண் குளி காண எனக்கு ஒரு வாய்ப்பு தந்ததற்க்கு!

‎இயற்கை ‎உண்மை செயலதுவே
உண்மையும்,பொருமையும், நம்பிக்கை நிறைந்த அகம் அதிலே
இயல்பாய் செயல்படுமே!

அவனைத் தேடிச் சென்றே
அவனைக் கண்டேனே
இந்த பயணம் எங்கு செல்லும் என்று அறியாதே அவனுடன் பயணித்தேனே,
‎பயணம் அதில் பலர் தேடிவந்தாலும்
அவன் தனிமையே அவனுக்கு நிரந்தரமே!

எல்லம் இருந்தும் இல்லா நிலையை உண்ர்ந்தோமே!
அனாதயாய் பயணிக்கும் நிலை அதை கண்டே அகம் கலங்கியதே!
கலங்கிய கண்கொண்டே அவனிடம் வெளிப்படுத்தினேனே,
‎அகவலி அதை இருவரும் உணர்ந்தே அமைதியானோமே!

அவனோ, நம்பிக்கை தளராதவன்
இந்த காலகட்டம் வரை பொருத்து இருப்போம் என் வாசியும், இயற்கையும் பார்த்துக்கொள்ளும் என்றானே!

சிரிது நேரத்திலே அவன் ஆன்மேவே
அவன் மேல் அக்கறை கொண்டே
எண்ணம் அற்ற நிலையிலே
வழி ஒன்று இருப்பதை உணர்தியதே!
அகம் அது ஆனந்தத்தில் துள்ளி குதித்ததே,
இயற்கையின் செயல் அதுவே அவன் ஆன்மாக்கள் இவனுக்கு ஏற்றவாறு வெகு தொலைவில் இருந்தாலும்,
இவனுக்கு தேவையான குறித்த காலகட்டத்திலே இவன் முன்னே வந்து அவனுக்கு சேவைப்புரியவே!

அகம் அதில் ஆனந்தம் கொண்டேனே!
அன்று முதல் அவன் இயற்கையை
கேள்வி கேட்காமல்
முழுதாய் நம்பியே வாழ்கின்றேனே!

மீண்டும் எங்கள் பயணம் முடிந்தே
தனித்தனியாய் பிரிந்தோமே!

‎என் சிவசித்தன் உண்மை அன்பின் திருஉருவமே
‎நன்றி சிவசித்தனே!