சிவசித்தரின் பாமாலை|006|

சிவகுருவே சரணம்

யாரும் அறியா எம் வலி,
யாக்கையும் அறியா எம் வலி,
யாரும் செய்யறம் இப் புவியிலே,
யாம் பெற்ற வலியை, நதியால் நீர் ஏற்று அறிந்தீரே!
யாசிக்கிறோம், உம் வழியில் நாம் செல்ல!
யாம் ஏற்போம் சிவகுருவே, உம் வலியை ஒரு
சிறு தொண்டனாய்!

சிவகுருவே சரணம்

சிந்தை நிறைஎங்கள் சிவகுருவே சிந்தமணியுரையோனே!
சீர் பெற்றோமே, சிவகுருவின் வசியோகத்தால்,
சிதலமடைந்த தேகமதை, செதுக்கினோமே, சிவகுருவின்
வாசியோகத்தால்,
சிற்றின்பத்தில் தோய்ந்த எங்களை வாசியல்,
சீற்படுத்தினரே எங்கள் சிவகுருவே,
கீழ் பெற்ற இவ்வுடம்பில், சிவம் அறிய வைத்தவரே.
எங்கள் சிவகுருவே,
சீலமெல்லாம் உன் புகழ் பரவ, வாசியால் வந்தனை
செய்து வாழ்ந்திட்டோமே!