சிவசித்தரின் பாமாலை|001|

  பாடல் :1

 

sivssiththan 2 (13)வாசியால் அணுவை அறிவாய்.

அணுவின் செயலை உடலால் அறிவாய்.

உடலால் உயிரை அறிவாய். இவையாவும்

சிவசித்தனின் வாசியிலே என அறியடா !”  

 

 அரியதோர் வாசி அதை நீ கற்று

அரியவனாய் வாழ அதை நீ யோசி !”

 

உன்னை அறியச் செய்வதும் வாசி – உன்னை

வாழ கற்றுக் கொடுப்பதும் வாசி”.

 

 மருத்துவத்தால் மங்குவது உன் குடல் !

வாசியால் மலர்வது உன் உடல் !”

 

நாம் வாழ செய்யும் வாசி !

நாமறியும்படி காட்டும் வாசி !”

 

இருகாலும் எமக்கு உணர்த்தி !

முக்காலில் இடை நிறுத்தி !

எக்காலும் நிலைப் படுத்தி !”

 

பாடல் :2

  

குருவே ஆதியுமானவர்.

குருவே அனைத்துமானவர்.

குருவே சத்தியமனாவர்.

குருவே அன்புமயமானவர்.

குருவே உண்மையானவர்.

குருவே நிலையானவர்.

குருவே கருப்பொருளானவர்.

குருவே வளியானவர்.

குருவே வாசியானவர்.

வாசியை உணர்த்திட்டவர் இறைவனே !”

  

பாடல் :3

 

மனமெனும் மானை மடக்கி !

அகமெனும் மலையை விலக்கி !

சுகமெனும் வாசியை துவக்கி !

தவமெனும் கலையை பழக்கி !”

 

பாடல் : 4

 

தேகத்திலே மெய்யுணர்ந்து !

புறத்திலே உண்மையுணர்ந்து !

இயற்கையிலே வாசியையுணர்ந்து !

உன்னிலே உன்னையுணர்ந்து !

சிவத்திலே சிவசித்தனையுணர்ந்து !

ஒளியிலே உள்ளொளியை உணர்வாய் !!!”

 

எல்லோரின் உடற்குறைகளை சொல்லும்போது

–          பித்தன் என்றார்கள் !

பணத்தை நாடாத போது

–          சுத்தன் என்றார்கள் !

உன்னிலே இறைவனை காணலாம் என்றபோது

–          பக்தன் என்றார்கள் !”

 

இவைகளை கண்டபோது எங்கள் குருவை நாங்கள்

சித்தன் என்றும் சிவசித்தன் என்றழைத்தோம் !

 

 எதையும் உருவாக்குவார் – எதையும் உரிமை கொண்டாட மட்டார்.

 

எதையும் செயலாக்குவார் – எதையும் எதிர்பார்பதில்லை.

 

எதையும் சாதனையாக படைப்பார் – எந்த புகழையும் நாடுவதில்லை.

 

எமது குருவின் கூற்று !

படைத்தவன் தன்னையே பார் !!!!”

சிவகுருவின் பக்தை

– G. மஞ்சுளா