சிவசித்தரின் பாமாலை|004|

சிவகுருவே சரணம்!

முவ்வரி மந்திரந் தனை உச்சரிக்கும்பொழுது
தன்னை யறியாது தன்னுடல் ஆடுதய்யா!
குண்டலினியை உணர முடியுதய்யா!
சுழுமுனை எனும் இயக்க ஆற்றலை
நெற்றிப் பொட்டில் உணர முடியுதய்யா!
கை விரல்கள் நெற்றியை விட்டு அகல மறுக்குதய்யா!
உடல் எங்கும் ஓர் காந்த சக்தி பரவுதய்யா!
மும்மலமும் (ஆணவம், கன்மம், மாயை) அகலுதய்யா!
ஐவகைக் கழிவும் அகலுதய்யா!
உடலானது நாகப் பாம்பினைப் போல
முன், பின், இட, வலமாக
படமெடுத்து ஆடுதய்யா!
மனமோ அளவில்லாப் பேரின்பத்தை அடையுதய்யா!
இவை யாவும் நிகழுதய்யா!
எம் சிவகுரு சிவசித்தரிடம் வாசி பயிலலே……
எம் ஸ்ரீ வில்வம் வாசியோக மையமதிலே……..

************************************************