வணக்கம் சிவகுருசிவசித்தனே!
அவர்அவர் எண்ணம் அவருக்கே உரியது.
அவர் அவர் எண்ணம்
அவர் அவரையே அழிக்கும் – சிவசித்தன்.
உணர்வு தூண்டி,
எண்ணம் செயல்பட
வார்தைகள் மொழி கொண்டு உச்சரித்து
செயலாக்கவே!
ஆணவம், கோவம், பொறாமை,
கொண்டு
தீட்டிய எண்ணம் அது
சொல்லாய் எழுத்தாய்
அம்பு எய்தியே
பிற உயிர் துடிக்கும் வலி கண்டு ஆனந்தம்
கொள்ளும்
நிலை அதுவே நடைபிணம் அதின் செயலே!
உண்மையும் அன்பும் அற்ற
உயிர் ஆன்மா உணராத நிலை அதுவே!
எய்த அம்பு சென்று
தேகம் அதை துளைத்து
அணு அதை பிரித்து
வலி வேதனை தந்தாலும்
இது உயிர் ஆன்மா உணர்ந்த தேகமே
பிற உயிரின் உண்மை நிலை உணர்ந்த
கருணை கொண்டு மன்னிக்குமே!
கண்ணீர்ரும் வந்திடுமே
அந்த உயிரின் அறியாமை உணர்ந்தே
வருந்தி,
தன் உண்மை அன்பை உணராது செயல் படும் நிலை அதை கண்டே!
அம்பு விட்டவன்
தான் செய்த கர்மத்தின்
வினை அனுபவிக்கும் காலம் வருமே
வலியதை அகம் உணருமே
தன் எண்ணம் அதின் விளைவை
அனுபவிக்கும் நாளும் உண்டே!
அதுவே நடைபிண
மனித நடைமுறை வாழ்வாகும்!
கருணை கொண்ட உள்ளம் அதுவே
உயிர் உண்மை உணர்த்தவே
அன்பு கொண்டு செயல்பட்டுமே
என்றும் அகில நலன் வேண்டியே!
நன்றி சிவகுருசிவசித்தனே!