சிவசித்தரின் பாமாலை|011|

சிவகுரு வாழ்க !

சிவகுருவே சரணம் !

 

இறப்பு :

 

துளியில் உருவெடுத்து பொறியில் பொடியாகும்

மானிடனே! இதற்கிடையில் பதியைத் தேடித் தேடிப்

பார்த்த கல்லின் உருவை எல்லாம் பாதம் தொட்டு

பணிந்தும் பதியதனை மதியதனில் பதிக்க முடியலையே!

உம் உடலதினிலே உத்தமனை உணர முடியலையே!

 

 

 

உருக்குலையும் உடலதனில் உருவில்லா வாசியை

உத்தமனாய் சிவகுரு சிவசித்தர் அருளிய விதிப்படி

இழுக்க இயங்கிடுமே இறையுணர்வது உம் தேகமதிலே!

பருவம் அடையும் வயதிலே பக்குவம் பெறவே!

அரூபமான வாசியத்தை அன்றாடம் இழுக்கவே

அனைத்தும் ஒழுங்குறுமே அறியாமை ஒதுங்கிடுமே!

 

விதியென்று ஏதுமில்லை உம்மதியதனை மழுங்க

வைத்துவிட்டு பதி செய்த விதியது என் குற்றம்

ஏதுமில்லை என்று ஒழுங்கில்லாது வாழ்ந்து

ஓய்ந்து மாய்ந்து போகும் மானிடனே!

மாயும் முன்னே உம் மதியதிலே மகாசொரூபர்

மதுரையம்பதியாரை மனதில் ஏற்று நீ மாயுமுன்

உம் காயமதிலே காலோடு சேர்ந்த கடவுளை உணர்வையே!

 

அறிவாசியை அறிவாய் அற்புதர் சிவகுரு சிவசித்தரை!

அறிவாசியை அறிந்திடுவாய் தன்னறிவே!

அறிவாசியை அரிதான அரூபனை அறிந்துடுவாய்

அறிவாசியை அங்கம் மாயும்முன் ஆதியை உணர்ந்திடுவர்

அறிவாசியை அகிலத்தை இயக்கம் வாசியையும்

வாசியை அருளும் வல்லோன் சிந்தாமணியாரையும் அறிவாயே!