அகிலத்தின் காவலன் என்றே – என் அகத்தின் காதலன் என்றே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

அகமே தான் நீ இருக்க
அனைத்துமாய் நிறைந்திருக்க
அறிவது பேரறிவாய் உணர்ந்திருக்க
அங்கம் முழுவதும் வாசியாய் வசித்திருக்க
அறிந்தேன் ஆதிமுதலானவன்
அன்பின் பொருளான சிவசித்தனே
அகிலத்தின் காவலன் என்றே – என்
அகத்தின் காதலன் என்றே!

சிவசித்தனே துணை!

நன்றி சிவசித்தனே!!!

வாசியால் அறிந்தோம் பண்பையும், பகுத்தறிவையும்…

சிவகுருவே சரணம்

வாசியில் நான் உணர்ந்தது…

068

 

படைத்தாய் நோயற்ற உலகத்தை என் வாசியே

எடுத்தேன் புதுப்பிறவி உன்னால் என் வாசியே

கொடுத்தாய் வலிகளற்ற வாழ்வை என் வாசியே

தடுத்தாய் என் மெய்யுள் உள்ள பொய்யை என் வாசியே

ஏற்றினாய் என் அறிவை பேரறிவாய் என் வாசியே

மாற்றினாய் என்னை அகத்தில் அழகாய் என் வாசியே

போற்றினேன் என்றென்றும் உன் புகழை என் வாசியே

அறிந்தேன் உன்னால் மந்திரத்தின் மகிமையை என் வாசியே

அழிப்பாய் தவறு செய்தால் தண்டனையில் என் வாசியே

களித்தேன் நீ  எனக்களித்த நன்மையில் என் வாசியே

உன்னால் நான் உணர்ந்தேன்

சிவசித்தரையும், இறை உணர்வையும் என் வாசியே.

 

 

 

 வலிகளால் உடல் வருந்தும்போது

மருந்தாலும் தீரவில்லை, மந்திரத்தாலும் தீரவில்லை

பிணி தீர்க்கும் பிதாமகணாம்

எம் சிவசித்தரின், திருவடி நிழல்பட்டால்

நோயும், பேயைக்கண்டது போல் ஓடும்

வாதழும், பித்தமும், வயோதிகரை வாட்டும் பொழுது

வாசியை உணர்ந்து விட்டால்

வாலிபராய் மாறிவிட்டால்

வாசியால் அறிந்தோம்

பண்பையும், பகுத்தறிவையும்.

சிவகுரு சேவையில்,

த. பத்மாசினி

வாசியோக வில்வம் எண்: 1205126