மாத்திரை இன்றி பேரின்ப பெருவாழ்வு பெறலாம் என்பதை உணர்ந்து வருகிறார்கள்

வணக்கம் சிவகுருவே

     மதுரை தாசில்தார்நகர் RMR செல்வம் என்னும் பழைய பயிற்சியாளர் அவர்கள் நாளிதழில் வெளியான விளம்பரத்தை மைப்படுத்தி உண்மை நிலை புரியாமல் கூறியிருந்த வார்த்தைகள் மனதை புண்படுத்துவதாக இருந்தது. அவருடைய மனதில் மையத்தில் புதிய பயிற்சியாளர்களின் சேர்க்கை குறைவாக உள்ளதால், அதிக ஆட்கள் சேர்க்கவே விளம்பரம் கொடுக்கப்பட்டதாக தவறாக நினைத்து அப்படி பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

     இங்கு மாதாமாதம் புதிய பயிற்சியாளர்களை சேர்க்க முடியாமல் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சேர்க்கும் நிலையில் தான் மையம் உள்ளது என்பதை அவருக்கு உணர்த்த விரும்புகிறேன்.

     மேலும் இங்கு கடுமையான விதிமுறைகள் உள்ளது என்று தெரிந்தும் புதிய பயிற்சியாளர்களின் வருகை அதிகமாகவே உள்ளது. அதனை தினமும் நான் அனைவரும் கண்கூடாக பார்க்கிறோம்.

     ஏனென்றால் மக்கள் பல்வேறு விதமான உடற் தொந்தரவுகளுக்கு ஆளாகி எல்லா மருத்துவ முறைகளையும் பின்பற்றி பலன் கிடைக்காமல் இம்மையம் வந்தால் மருந்து, மாத்திரை இன்றி பேரின்ப பெருவாழ்வு பெறலாம் என்பதை உணர்ந்து வருகிறார்கள்.

     மேலும் தன்னை நாடி வருபவர்களின் உடற்குறைகளை நீக்கி, நல்வழிப்படுத்தும் சிவசித்தனைப் பற்றி தவறாகப் பேசியும், கேலி, கிண்டல் செய்யும் எவன் ஒருவனுக்கும் தண்டனை நிச்சயம் உண்டு என்றும், எம்முடைய சிவசித்தனின் வாசியும், இயற்கையும் உன்னையும், உன் குடும்பத்தையும் அழித்துவிடும் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

     மேலும் என்னுடைய சிறுவயதில் என் அம்மா எனக்கு அடிக்கடி சொல்லும் பழமொழி நினைவுக்கு வருகிறது. அது என்னவென்றால் “சந்திரனை பார்த்து நாய் குலைப்பது போல” அந்த நாயானது தன் வாய் வலிக்கும் வரை குலைத்துவிட்டு போகுமாம். அதனால் சந்திரனுக்கும் ஏதுமில்லை, அது தன்னுடைய பணியை (வெளிச்சம், குளிர்ச்சி) செவ்வனே செய்கிறது.

     இயற்கையில் சூரியன் சென்றவுடன் தான் சந்திரன் வெளியே வருகிறான். அதே போல் இங்கும் சூரியன் (ஹேமாவதி) வெளியே சென்றதும் சந்திரன் (இறையான்மா) வந்து விட்டது. அந்த சந்திரனைப் பார்த்து பல நாய்களும் தற்போது குலைத்து கொண்டு இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் நாம் எண்ணாமல் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

     மேலும் இயற்கையில் வானத்தில் (சிவசித்தன்) சூரியன், சந்திரன் மாறி மாறி வருவது இயல்பே. அதே போல் இங்கு உண்மையான நிகழ்வே நடக்கிறது. வானத்தில் (சிவசித்தனிடத்தில்) சூரியன், சந்திரன் ஆகிய இரண்டும் சேர்ந்தே உள்ளது. இதுவே இயற்கையின் நியதி. இம்மூன்றும் சேர்ந்தே இருக்கும். இதுவே உண்மையின் தத்துவம்.

நன்றி சிவகுருவே!பெயர்   : க. நீ. ஜெயச்சந்திரன்

வாசியோக வில்வம் எண்  : 14 09 003

வயது                     : 45