அகஆலயத்தின் கருவறையில் ‎ஆதியாய் அலங்கரித்தாய்!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

‎சிவசித்தனே துணை!

மெய்தவ ‎சிவசித்த வாசியால்
‎தேகமே விருந்தளித்தாய்!

மெய்மொழிந்த மெய்ஒலி ‎சிவசித்த திருநாமத்தால்
‎தேகசற்ப்பமதை மீட்டெடுத்தாய்!

மெய்கண்ட திருகாட்சியால் மெய்யொளியாய்
‎தேகஅகத்தே பூரணமாய் நிறைந்திட்டாய்!

மெய்வாசம் தானறிய ‎தனதாற்றலால்
‎தனதறிவை பேரறிவாக்கி உள் நிறைந்திட்டாய்!

மெய்அன்பை ‎தனதன்பால் உணர்த்தி
அகஆலயத்தின் கருவறையில் ‎ஆதியாய் அலங்கரித்தாய்!

மெய்அகம் தான் கொண்ட ‎மெய்நாதனே
என் அணுவெல்லாம் உன்னிடம் தஞ்சமே!

தன்னொளி காட்டியே கண்ணொளியால்
மெய்யொளி உணர்த்தி என்றும்
எம் மெய்யில் உறைந்த ‎சிவசித்தனே
நின் மெய்பாதம் சரணடைகிறேன்.

‎சிவசித்தனே உண்மை!

நன்றி சிவசித்தனே!!!

உணவுக்கட்டுப்பாடு ஒழுக்கநெறி கட்டுப்பாடு…

உணவுக்கட்டுப்பாடு ஒழுக்கநெறி கட்டுப்பாடு#Sivasithan (6)

 

உண்ணும் உணவுதன்னை உண்ணும் வேளைதன்னில் பற்களில் நன்கரைத்து உமிழ்நீரை நன்கு சுரக்கவிட்டு பின்னே விழுங்க வேண்டும். உண்ணும் தருணமதில் கவனம் முழுவதையும் உண்கின்ற உணவதிலே வைத்து உண்ணும்பொழுது அதாவது மனமும் உடலும் ஓர்செயலை ஒருமித்து செய்யும்பொழுது அந்த வேதனை முழுமையடைகிறது. இப்படி உண்ணும்பொழுது நன்கு உணவும் சீரணமடைந்து செரிக்கப்படுகிறது.

ஓர் ஆலயத்திலோ அல்லது மடங்களிலோ சென்று நேரம் தவறாமல் தூய்மைப்படுத்தி அங்குள்ள விக்ரகங்களைக் கழுவி பூசை செய்தால் மட்டும் இறையுணர்வைப் பெற முடியாது. உன் உடம்பெனும் ஆலயத்தில் மூன்று வேளை உணவதனை சிவகுரு சிவசித்தன் விதித்த காலமதில் தவறாமல் உணவுண்டு குறிப்பாக அவர் கோடிட்ட உணவுதனை உண்டால் அது நன்கு அரைக்கப்பட்டு மூன்று வேளையும் கழிவை உடலானது தானாகவே அகற்றிவிடும்.

தேகமும் தூய்மைபெறும். தெய்வமும் நம் தேகத்தில் குடியேறும். நாம் ஒவ்வொரு தெய்வத்தையும் தேடிச்சென்று உடலை வருத்தி, விரதமிருந்து, எதையும் செய்யத் தேவையில்லை. அப்படிச் செய்தாலும் இறை உணர்வை பூரணமாய் அடைய முடியாது. இதுவே எம்சிவகுரு சிவசித்தன் கூறும் அருளுரை. உண்கின்ற உணவின் அளவுமுறை அதாவது சிவகுரு அருளிய அளவுக்குக் கூடினாலோ, குறைந்தாலோ கட்டாயம் பாதிப்பு ஏற்படும்.


 

சகலமும் சிவகுரு சிவமது அவருள்ளே!

ஆதியும் சிவகுரு! அந்தமும் சிவகுரு!

சிவசோதியும் சிவகுரு! சீவமுக்தியும் சிவகுரு!

ஓங்கார மந்திரத்தின் கருபொருளும் சிவகுரு!

தீயோரை நல்லோராக்கும் தீட்சையும் சிவகுரு!

இயற்கையோடு இயைந்துள்ள இணக்கமே சிவகுரு!

இறைசக்தியின் பேராற்றல் கொண்டவரே சிவகுரு!


 

உம் அங்கமதில் செயல்படும் அணுவிற்கேற்ப அளவோடு உண்ணுவதால் உணவு அரைக்கப்பட்டு பூரணமாய் வெளியேறும் மெய்க்கூற்றை உணரலாம்.

“அளவோடு உண்டால் நலமோடு வாழலாம்”

என்பதே வாசிதேக சிவகுரு சிவசித்தனின் கூற்று!

உம் காயமதில் சளியது சார்வது எதனாலே? கழிவது வெளியேறாமல் முழுவதும் மலமாக மாறுகின்ற மாற்றமே சளியாக சேருகிறது என்ற உள்கூற்றை அறியாமல் மருந்து, மாத்திரை தேடாதே! சிவசித்தனின் வாசி பயின்று உடல் தேக்கத்தை வெளியேற்றி நலமோடு வாழலாமே!

வாசிதேக குருகுலத்தில் சிவசித்தனின் ஆசனத்தை செய்பவர்க்கு அணுவின் செயல்பாடு அதிகரிக்கும். அவ்வணுவின் செயல்பாட்டால் உம் அணுவின் செயல்பாட்டை உணரலாமே ! வாசி கலையிலே!

 

காலம் அறியாது உண்ட உணவு கழிவாகும்! அக்கழிவானது உடம்பதினில் மலமாகும் அம்மலமதுவே! தேகமதில் தேக்கமுற்று சளியாக உருவெடுத்து சரீரத்தை சீர்குலைத்து சிதைத்துவிடுகிறது. காலம் தவறாது உண்டால் ஞாலமதில் நலமோடு வாழலாமே.

 

சிவகுரு சிவசித்தனின் காலம் அறிந்து உண்ட உணவானது காயமதில் முறையாக செரிக்கப்பட்டு, மலமாகப் பிரிக்கப்பட்டு முழுக்கழிவும் வெளியேறுவதை முழுமையாய் உணர்ந்திடலாம் உயிர்கலையை பயிலும்போது இவ்வுணர்வை உணர்ந்திடலாம்.

 

  • தேகத்தில் தேங்கும் சளியின் மூலமது மலமே!

 

  • காலம் அறிந்து உண்ட உணவு தங்காது கழிவாக தேகமதில்!

 

  • உடலின் உள்ளுறுப்பில் உறைந்த உம்கழிவையும் ஓடச்செய்யும் சிவகுரு வாசியிலே!

 

  • பிணியென்று சொல்பவர்களே! உணவுண்ணும் பணிதன்னை ஒழுங்குசெய்! எல்லாமே நலமாகும்!

 

  • கழிவற்ற உடலே கடவுள் உறையும் சுத்த தேகம் மானிடரே!

 

  • மலமது எளிதாக வெளிசெல்ல வாய்வழி உண்ணும் உணவை அளவாக்கு!

 

 

சிவசித்தன் வழிசென்று வழியறிந்து ஆசனம் செய்பவர்க்கு காயமதில் வலி காணாமல் போகுமே!


 

ஏட்டுக்கல்வி அறியானும் எம் ஆசான்

சிவகுரு சிவசித்தனின் உடல் கூட்டதனை

சுத்தம் செய்து தேகத்தூய்மை தருகின்ற

உயிர்கலையை கற்றவன் நிச்சயம்

பெற்றிடுவான் உயர்வுதனை! கயவனையும்

தூயவனாய் மாற்றும் சிவசித்தனின் வாசிகலையே!

 

சிவச்சுடராம் சிவசித்தனின் வாசிதேகக்

கலையது வாழ்க்கைத் துணையன்றோ !

வாசிதேகத்தை உண்மையாக நாள்தோறும்

கடைபிடிப்பவர்களை கடவுள் போல்

கணப்பொழுதும் காத்து நிற்குமே எந்நாளும்!

நவகோளும் நன்மை அளிக்குமே எப்போதுமே!

 

தேகமே பெருங்கோயில் உள்உறையும் தெய்வமோ

வாசியப்பா! சிந்தையதில் சிந்தியப்பா!


 

சிவசித்தனின் வாசிதேகக் கலையொரு

தேகக் கழிவகற்றி தெய்வம்

உணர வைக்கும் தெய்வீகக் கலையன்றோ!

அஞ்ஞானம் அழிந்து மெய்ஞானம்

மலர்ந்து! சொல், செயல் என்று

செல்லும் இடமெல்லாம் சிறப்படைவார்கள்

சிவசித்தனின் சிவகலையாம் வாசிகலை பயில்பவர்களே!


 

அறிந்தேன் ஆதியதை அகமுள்ளே!

சிவசித்தனைத் தொழுவேன் எந்நாளுமே!

அசைவமுண்டு ஆசனங்கற்றுத் தரும் தேகக்கூடம்

பலவுண்டு அவனியிலே! மாறாக சைவமதில்

நிலைநின்று சிவமுணர்த்தி தேகக்கூட்டதிலே

தெய்வம் உணர்த்தும் உயிர்க்கலையே

எம் சிவசித்தனின் வாசிதேகக்கலையாகும்.

அறியா மானிடா! அறிந்துகொள் சிந்தாமணி சிவசித்தனை

வாசியறியார்க்கு எம் ஆசான் மனிதரன்றோ!

வாசி அறிந்தவர்க்கு ஆதியின் அம்சமன்றோ சிவசித்தன்!


 

மனிதன் பிறப்பொற்ற நாள் முதல்

இறக்கும் காலம்வரை உடலிலே உலாவும்

சுவாசம் தனை பிராணனாய் பெருக்கி

வாசியாய் உணர வைத்து உணர்த்திய

வாசியினை சிவமாய் அறிய வைக்கும்

செயலே எம் ஆசான் சிவசித்தனின் வாசிகலையாகும்!


 

கருலிங்க மேனியனே! எம் அங்கமதில்

உறைந்து உள்ளொளிரும் உள்ளொளியே!

புறக்கோயில் பல இருந்தும் எம் அகக்

கோவிலில் அமர்ந்து அருளும் சிவமாகிய

வாசியே போற்றி! அவ்வாசியை எமை

அறிய வைத்த சிவசித்தொளியாய் ஒளிரும்

சிந்தாமணி சிவசித்தனே போற்றி! போற்றி!

எவரும் உணர்த்தா மெய்யுணர்வை உள்ளூட்டிய

சித்தியே சிவகுரு சிவசித்தன்!


 

ஆதியை அறிந்து அடி பணிந்தே அகமுள்ளே!

என் தவம் செய்தேனோ! இவ்வுணர்வை யாம்

அறிவதற்கு! தவம் ஏதும் செய்திடல்லை!

சிவசித்தன் வாசிகலையாலே கண்டுணர்ந்தேன்

காயமுள்ளே இத்திருக்காட்சியை நாள்தோறுமே!

இதை அறியாது நட்டகல்லில் தேடுகிறார் நமச்சிவத்தை!


 

சிவகுரு வாக்கை திருவாக்காய் எண்ணியே

குருநாதர் திருநாவால் உதிர்கின்ற

வார்த்தைகளை கடமதிலே உள்ளேற்றி

உயிர்க்கலையை பயின்றிட்டால் வாசியின் உள்ளொளி

உய்த்திடுமே! இதை உணர்ந்திட்டர் பலருண்டு

ஸ்ரீவில்வ வாசிதேகக் கூடமதிலே!

ஆதியை அறிவோன் அறிவான்! அனைத்தையும்

அறியச் செய்தார் ஆதியை சிவசித்தன்!


 

திங்களும் சூடி திரிசடை முடிந்து

அங்கமதில் புலித்தோலை பூண்ட

பூதாதிபதியனே! உமை உண்மையாய்

உணர உயிர்க்கலையின்றி வேறு வழியில்லை

இவ்வுலகமதில்! இறைசித்தர் சிவசித்தனின்றி

வேறொரு சித்தியில்லை இதை உணர்த்துதற்கு!

மும்மாயை அகன்று முச்சுடரை அறிய

சிவசித்தன் அருள்வார் வாசிவழியே!


சிவகுருவின் பக்தன்,

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001