வணக்கம் சிவகுருசிவசித்தனே!
உடலையும் தேகத்தையும் உணர்த்திக்காட்டி
உண்மையின் பொருள் விளக்கம் உணர்வாய் உணர்த்தியே என்னைக் காக்கும் சிவசித்தனே அன்பானவன்.
உண்மை அன்பு உணராது வாழும்,
பாசம், பந்தம், உறவுகளில் சிக்குண்டு
சில சொந்தங்களுக்கு அன்புகொடுத்து
பாதுகாத்து வாழ்வதால்
அது அன்பான வாழ்வாகிவிடாது!
அது வாழ்ந்த வாழ்வுக்கு
உண்மைபொருள் தராது,
முழுமை அடையவும் செய்யாது!
அகிலத்தின் நன்மை
அகம் அதில் உணர்ந்து,
உண்மை அன்பு உணர்ந்து
உயிர் ஆன்மா உணர்ந்து
தன் கடமைகளை செய்து
அனைத்து உயிரும்
உண்மை அன்பு உணர்ந்து
வாழ வழிவகுக்கும் வாழ்வே,
உண்மைப் பொருளாக உள்ள,
இயற்கை இயல்பானது,
பூரணமானது,
இயற்கைக்கு உண்மையான,
உத்தம வாழ்வாகும்!
உண்மை அன்பை, உயிர் ஆன்மா, இறைஉணர்வு உணர்த்தி
இயற்கை இயல்பான வாழ்வு வாழவைப்பவன்
மதுரை சிந்தாமணி சிவசித்தன் ஒருவனே!
நன்றி சிவகுருசிவசித்தனே!