அறிவுணர்த்தும் விழியும் ‎அன்புணர்த்தும் விழியும்

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

புலனது நசிந்தே
புறத்தோர் சொல்கேட்டே
புண்ணுடல் கொண்டேன்!
புகலிடம் தேடியே அலைந்தேன்!

பூங்கரம் நீட்டியே
புத்துயிர் தந்தானே ‎வாசியாலே!
புதுஅணு பிறந்ததே ‘
புவியில் வாழத் தகுதி கொண்டேன்
புல்லாங்குழல் மெல்லிய ராகமாய்
மெய் ‎சிவசித்த திருநாமம் கொடுத்தானே!
புதுராகமாய் தோடியாகி புலப்பட்டதே என் ‎அகதேகசற்ப்பம்!

நாளும் புது அணுக்கள் நாதனே
நின் வாசியின் பெருங்கருணையால்!
நாளும் செல்லச்செல்ல
என் ஆவிலும் அன்புணர்ந்தேன்!
ஆதியும் ‎சிவசித்தனே நீயே என்றுணர்ந்தேன்!

வாசியது நாளும் உள் செல்லச்செல்ல
உன் வாசம் கண்டு வசமானது
உன்னால் படைக்கப்பட்ட ‎அகமே!
நாடி நரம்பெல்லாம் என்
நாதனின் நாமமே!
நாளும் பொழுதும் அவன் எண்ணமே!
நாணம் கொள்ளுதே அவன்விழி காண்கையிலே!
‎அறிவுணர்த்தும் விழியும் ‎அன்புணர்த்தும் விழியும்
அழகாய் தான் கொண்டு
மெய்யுணர்த்தும் ‎வாசிவிழியை நெற்றியில்தான் கொண்டானே!

மெய்யுணர்த்தும் மெய்செயல் தன்
மெய் வாசியால் செய்திடவே!
மெய் ஆன்மாக்களும் அவன் வசமாகுதே!
இப்புவியதுவும் புத்துயிர் பெறுதே சிவசித்தானாலே!

‎சிவசித்தனே துணை!
நன்றி சிவசித்தனே!