சிவசித்தரின் பாமாலை|007|

சிவகுருவே சரணம்

DSC079401. கோல் ஏந்தும் கொற்றவரே! நில் கால் வாழ்கவே!
நின் செங்கோல் “காலாகி” பரத்தை அடைந்ததோ!
பரத்தை அடைந்ததினால் பரம்பொருள் ஆனீரோ!
நம் கோலுக்குள் நின் காலேற்றும் – சுடரொளியே,
நம் கோலுக்குள் நின் காலேற்றி இட, வலத்தை பிரித்து அறிந்தீரோ!
தீயதைக் கண்டு அதைக் களைந்து எடுத்தீரோ!
நம் கோலுக்குள் நின் காலேற்றியதால் “நான்” என்று ஆனீரோ!
நின் காலால், நம் கோலும் “நான்” ஏறியதோ!

2. ஒவ்வொரு ஆதாரமும் செயல்படுவதும் உம்மாலே!
உள் உறுப்புகள் இயங்குவதும் உம்மாலே!
கழிவுகள் அகழ்வதும் உம்மாலே!
உடல் உயிர் பெறுவதும் உம்மாலே!
உண்மை அறிவதும் உம்மாலே!
சுளிமுனை இயங்குவதும் உம்மாலே!
சுடரொளிப் பரவுவதும் உம்மாலே!
இயற்கையை அறிவதும் உம்மாலே!
இறைவனை உணர்வதும் உம்மாலே!

3. ஆதாரங்கள் பல உணர்த்தும் எங்கள் சிவகுருவே,
எங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவா!
அனைத்தையும் விட்டு விடு என்றாய்,
ஆதியும் அந்தமும் நீயாகினாய்!
அன்பே சிவம் என்றாய்,
அன்பால் படைத்தாய் புத்துலகை!
அறம் வளர்த்தாய் – எங்கள் இல்லறமும் நல்லறமே!
மெய்ப் பொருளை மெய்யாய் உணர்த்தும்,
– மெய் கண்ட சிவனாரே!

4. மெய்யினுள் மெய்யை வைத்தாய்!
மெய்யாய் இருப்பவனுக்கு வாசி தந்தாய்!
வாசியால் அனைத்தும் பெற்றோம்
(அறம், பொருள், இன்பம், வீடு)
வாசியால் மும்மலத்தையும் இழந்தோம்.
(ஆணவம், கன்மம், மாயை)
வாசி வழி நடத்திச் செல்ல
உன் திருவடி பணிந்தோம்.

சிவசித்தரின் பாமாலை|005|

சிவகுருவே சரணம்

FB_IMG_139233438622025081. வாசியால் அருள் புரிந்து நம்மை ஆட்கொண்டவரே!
மாய சக்தியால் மாயமான எங்களை மீட்டு – கொணர்ந்தவரே!
விதி எது – மதி எது என எங்களுள் நிரூபித்தவரே!
ஆணவத்தால் பேசினோம் அங்கும் அன்பு உரைத்தீரே!
உணர்ந்த பின் நீயே “இறைவன்” என்றோம்!
உண்மையாய் இருப்பின், நீயும் இறைவன் என்றாய்!

2. விஞ்ஞானத்தால் மெய் ஞானத்தை உணர முடியாது,
அஞ்ஞானத்தால் சிவகுருவை அறிய முடியும்.

3. எங்கள் சிவகுருவே,

வலகலை, இடகலை ஏதும் அறியோம்!
சுளிமுனையை முழுமையாய் உணரோம்!
பல கவி பாடல்கள் ஏதும் புனையோம்!
சூட்சுமம் ஏதும் அறியோம்!

உண்மையை உரைக்க செப்பினோம்!
உங்களை உணர்ந்தோம்!
உங்களருளால் இறை உணர்ந்தோம்!

4. எங்கள் சிவகுருவே,

அன்பால் படைத்தீர் புத்துலகை!
அனைவரும் சிறப்புடன் வாழவே!
அறியாதவர்கள் அன்பையும் ஆணவம் என்றனர்!
அறியாமையால் வாழும் அவர்களும்,
சிறப்புடன் வாழவே,
படைப்பீர் அன்பால் புத்துலகை.

*********************