வரம் ஒன்று வேண்டும் சிவகுருநாதரே…

 

 

வரம் ஒன்று வேண்டும் சிவகுருநாதரே

வாழ்நாள் முழுவதும் உம் வாசல் சிந்தாமணி வந்திட

வரம் ஒன்று வேண்டும் சிவகுருநாதரே

மக்களின் கவலை மனதை வாட்டிட

நஞ்சில் நிறைந்த வஞ்சகரின் வார்த்தையால்

நெஞ்சம் வெதும்பி உன் திருவடியில் தஞ்சமடைந்தேன்

உன் கருணைப் பார்வையால் என்கவலைகள்

பறந்தோட, வரம் ஒன்று வேண்டும் சிவகுருநாதரே

காலத்தை உணர்ந்து காலத்தில் செய்ய

காலனும் கலங்குவான் எம்மை அணுக

வரம் ஒன்று வேண்டும் சிவகுருநாதரே

பிறப்பின் காரணம் நான் அறியவில்லை

இறப்பின் தத்துவத்தை நான் உணரச் செய்யும்

வரம் ஒன்று வேண்டும் சிவகுருநாதரே

இறைநிலை உணர்ந்த என் இறுதிமூச்சிலும்

இறைவனாம், சிவசித்தனின் புகழ்பாட

வரம் ஒன்று வேண்டும் சிவகுருநாதரே!

 

சிவகுரு சேவையில்,

D.பத்மாசினி

வாசியோக வில்வம் எண் : 12 05 126