இருளில் ஒளிரும் பிரபஞ்சத்தில் அறிவோம்…

சிவகுருவே சரணம்

444

 

கவிதையாய் அறிவோம் சிவசித்தனை

கண்ணின் மணியாய் அறிவோம் சிவசித்தனை

கலங்கரை விளக்கமாய் அறிவோம் சிவசித்தனை

கரிய இருளில் ஒளிரும் பிரபஞ்சத்தில் அறிவோம் சிவசித்தனை

கட்டவிழ்ந்த மலர்வாசத்தில் அறிவோம் சிவசித்தனை

கற்பக விருட்சமாய் அறிவோம் சிவசித்தனை

கருவறை தெய்வமாய் அறிவோம் சிவசித்தனை

கண்ணீரின் கதகதப்பில் அறிவோம் சிவசித்தனை

கட்டளையின் வடிவில் அறிவோம் சிவசித்தனை

கண்ணியமான வாக்கில் அறிவோம் சிவசித்தனை

கடல் போன்ற தோற்றத்தில் அறிவோம் சிவசித்தனை

கறையில்லா பேச்சில் அறிவோம் சிவசித்தனை

 

___________

 

உண்மையின் உருவம்……

 

உண்மை ஒளியே அனைத்துமாய் ஆக்கியது

உண்மை ஒளியே ஆற்றலின் பாதையென அறிவித்தது

உண்மை ஒளியே இயல்பு இயல்பே இறையெனக் காட்டியது

உண்மை ஒளியே ஈதொரு மாசக்தி தானென தெரிவித்தது

உண்மை ஒளியே உய்வுக்கு வழியென உரைத்தது

உண்மை ஒளியே ஊற்றாம் பேரின்பத்தை காட்டியது

உண்மை ஒளியே எம் “சிவசித்தன்” என பறைசாற்றியது.

 

சிவகுரு பக்தை ,

விக்னேஸ்வரி ராஜேஷ்குமார்.

சின்னமனூர்.

வாசியோக வில்வம் எண்: 12 05 313

 

சிவசித்தரின் பாமாலை|008|

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்,

 

DSC04789பறந்து விரிந்து நாம் வாழும் பிரபஞ்சத்தில்

பல்வேறு சமயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு

சமயமும் வகுத்த வேதநூல்கள் இன்றளவும்

இருக்கின்றன. அவை மனிதனுக்கு எவ்வாறு

பயனளித்து நல்வழி காட்டுகின்றன என்பது

கேள்விக் குறியே! வேள்விகள் பல செய்ய சொல்லும்

வேத நூல்கள் பலஇருக்கின்றன. மனிதனின்

நாடியையும் அது செய்யும் வேலையையும்

துள்ளியமாய் கற்றரிந்து கற்றுத்தர மானுடர்க்கு

யாருண்டு! எந்த நூல் உள்ளது என்றால்

அதுவும் கேள்விக்குறியே! மனிதனின் அங்கத்தை

அணு அணுவாய் ஆராய்ந்து அதற்கேற்ப வாசியெனும்

பயிற்சி தரப்பட்டு அவனது அங்கமும் அகமும்

தூய்மையாகப்பட்டு, பின்னர் இறையை உணரும்

நிலைக்கு கூட்டிச் செல்லப்படுகிறது. சிவசித்தனின்

(வாசியோகமும் – இயற்கையும்) என்ற குறிப்பேட்டில்

சிவசித்தனின் மனித வேதம் என்ற நூல் சிவசித்தனின்

திருநாவால் உதிர்க்கப்பட்ட திருவார்த்தைகளை அதாவது

எம்மதத்தினராய் இருந்தாலும் அவர்கள் சுவாசிப்பது

சுவாசமே அந்த சுவாசமெனும் பிராண சக்தியை

வாசியாய் உணர்த்தி அவர்களின் மனம், எண்ணம்,

உடல் கழிவு, உண்ணும் பழக்கம், வாழும் நெறிமுறை

என்ற பலவகையான நெறிமுறைகளையும்

யாவர்க்கும் பொதுவான வண்ணம் சிவசித்தனால்

உருவாக்கப்பட்ட திருமொழியே இவ்வேதம்.

எவரொருவர் இதைப் படித்து இதில்உள்ள

நல்வழிப்படி நடக்கின்றனரோ அவர்களின்

வாழ்வில் பிணிதீர்ந்து இப்பிறவி தனை இன்புற்று

வாழ்ந்து இறைநிலையையும் அடைந்து அதாவது

நல் இறப்பை அடைந்து மறுமைநிலை இல்லாது

பரமுக்தி அடைவார்கள். இதுவே இறை சித்தரான

சிவகுரு சிவசித்தரின் மெய் கூற்றே!

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

பா.முத்துலெட்சுமி

சிவகுருவே சரணம்

Recovered_JPEG Digital Camera_602உள்ளத்தால் உணர்ந்த உள்ளொளி எங்கள் சிவகுருவே
அகத்தில் பேரொளியை காணச் செய்தவர் எங்கள் சிவகுருவே
சிந்தனையில் எண்ணத்தை விதைத்தவர் எங்கள் சிவகுருவே
நெஞ்சத்தில் இறையுணர்வை தூண்டியவர் எங்கள் சிவகுருவே
தோற்றத்தில் எளிமையாய் இருப்பவர் எங்கள் சிவகுருவே
பிரபஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் எங்கள் சிவகுருவே
என்றும் உன்னை நான் மறவாத நிலை வேண்டும் நின் தாள் சரணங்களே

பா.முத்துலெட்சுமி
வி.எண்: 13 06 132