சிவசித்தன்: வாசியே நிலையான உலகம்

சிவசித்தன்

sivssiththan 2  (30)
* மனிதன் பிறந்து தூய்மையான வழியில் சென்று
உண்மை உணர எம் வாசியோகமே உண்மையை
மனிதனுள் உணர்த்தும்.

* உடல் உண்மையை உணர், உறவுகளின் பற்றை நீக்கு
உடல் பற்றை நீக்கியப்பின் மனித உடல் உண்மையையும்
தன்னுள் செயல்படும் ஆற்றலை எம் வாசியோகத்தால்
உணர வைப்பேன்

* நிலையான வாசி நிலையான உலகம், மனிதன் எப்படி
மாற்றினாலும் உலகம் பிறந்து இறந்து பிறந்து கொண்டே
தான் இருக்கும் அது தானாய் நடக்கும் செயலாகும்.

* வாசியான எண்ணத்தால் உலகம் படைத்தேன்
வாசியே மனித உடலுக்கு உண்மை உணர்த்தும்
வாசியே மனித ஆற்றலை உடலுக்கு செயல்படுகிறது.

* வாசி இல்லையேல் உலகில்லை
உடல்(பிணி) இல்லையேல் அறிவில்லை
உண்மை இல்லையேல் ஆற்றலில்லை

* உடம்பின் அறிவு பயனற்றதாகும்
உடல் உள்ளுறுப்பு உற்பத்தியே உண்மையாகும்
உடலுக்கு வாசிதந்தால் அறிவு பேரறிவாகும்
உண்மை ஆற்றலின் செயலை உடலால் உணர்வாய்.

ஆதியான முதலும் முடிவும்.

– சிவசித்தன்

சிவசித்தன் வாசியோகம்: மகத்துவம் உணர்ந்தோம் மதுரை

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

 

sivssiththan 2 (32)

சில மருந்துகளும் பொய்யே!

சில மருத்துவர்களும் பொய்யே!

உண்மையாய் வாசிவசம் சென்றபின்

இல்லை பிணி என்னும் பிடாரி….

மகத்துவம் உணர்ந்தோம் மதுரை

சிந்தாமணி சிவசித்தன் வசம்

ஏற்றினேன் சிவசித்தனின் வாசி!

மாற்றினார் என் எண்ணமதை

காட்டினார் என்னுள் என் அகமனை!

அந்தோ!

எத்தனை ஆனந்தம் என்னவனைக் கண்டவுடன்..

உடலின் சர்ப்பத்தை சிவசித்த

மந்திரமூலம் சரம் தொடுத்து நர்த்தனமாட வைத்தாய்….

காட்டாத உண்மை உன்னுள் இதுவரை

யாரும் எந்த நிலையிலும்,

எந்தக் கலையிலும் உணர்த்தவில்லை

உண்மை அறியும் ஆற்றலை அறிந்தேன்

எம் சிவசித்தன் வாசியால்…. தானாய்…..

****

 

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

 

உண்மை உன்னுள்ளே உணர

உத்தமனை உன்னுள் காண

ஒரே வழி சிவகுருசிவசித்தரின் வாசியோகமே

மருந்தில்லா மகத்தான வாழ்வு

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

சிவசித்தனின் வாசியோகத்தால்

****

சிவகுரு சிவசித்தரின் ஆசியால்,

 

 குளுமையும் உன்னுள்ளே!

கதிரின் வெப்பமும் உன்னுள்ளே!

ஒன்று சேர உன் சரம் காட்டுமே ஒரே நேரத்தில்

உன் உண்மை உடம்பில்

எம் சிவசித்தனின் வாசிக்காற்றை சுவாசித்ததுமே!

உறங்கிய சர்ப்பம் உயிர் பெறுமே

உயிர்க்காற்று (வாசி) உள் சென்றதுமே!

சிவசித்த மந்திரந்தனை உரைக்கத்

தொடங்கியதுமே ஆட்டம் ஆரம்பிக்குமே!

அழகாய் ஆனந்தமாய் உனைப் படைத்த

உன் அக இறைவனின்

ஆனந்தத் தாண்டவம் உன் அகத்துளே!

சிவசித்தனின் வாசியால்!

உண்மையாய் படைத்தவனைப் பார்ப்பாய்

உன் அகத்துளே! சிவசித்தனின் வாசியால்!

 

வாசியோக பக்தன்

ர.சுந்தர்

வாசியோக வில்வம் எண் :  13 09 205

சின்னமனூர்.தேனி மாவட்டம்.