சிவசித்தரின் பாமாலை|002|

பாடல் : 1

 

ஒன்றில் ஓடாமல் மற்றொன்றில் ஓடுவதேனடா!

ஒன்றாய் ஒன்றியம் ஒளிவதேனடா !

ஒளியாய் ஒளிரும் ஒளியேநீயடா ! இதை

ஒன்றாகி ஒருநிலையில் வாசியிலே நீயும் காணடா !”  

  

பாடல் : 2

  

அண்டத்திலும் பிண்டத்திலுமே வாசி !

அகண்ட பரிபூரணத்திலுமே வாசி !

மண்டலஞ்சூழ் இரவிமதிலுமே வாசி !

மதுர தமிழேது யிசையிலுமே வாசி !

எண்டிசையும் புகழுமே வாசி !

வலகலையும், இடக்கலைலுமே வாசி !

சிவசித்த நெருப்பாற்றாலில் அமர்ந்தலுமே வாசி !”