சுயம்புவாய் உருவான எங்கள் சிவகுருவே
சுயம் தனில் நிலைத்து
சுளிமுனை அறிந்து
சுடரொளி உணர்ந்து
பரம் தனில் நிலைத்து
பரவொளி அறிந்து
பண்ணிசைப் பாடி
பரமனை உணர்ந்து
முத்தொழில் செய்து
மூவரும் ஆகி
நான்கதில் நலமதை உணர்த்தி
ஒருவனாய் தனித்து
உள்ளொளி அறிந்த
எங்கள் சிவகுருவே
“சிவகுரு சிவசித்த பேரொளியான்”
************************
வைகறையில் வந்திட்டோம் ஸ்ரீ வில்வம் யோக ஒளித்திருத்தலமதிலே
சிவகுரு அருளிய மந்திரமதை முறையாக சொல்லி
மூலமதை அறிந்திட்டோம்!
பயிற்சிகள் பல செய்து, உடல் கழிவதை அழித்திட்டோம்!
உடல் பிணி அகன்று உள்ளமதில் உயர்ந்திட்டோம்!
பெருவாழ்வை நல்கிய சிவகுருவை உணர்ந்திட்டோம்!
பேரின்பம் அருளிய சிவகுருவை பொன்னேட்டில் புகழ்ந்து
புதுக்கவிதையாய் கொடுத்திட்டோம்!
சிவகுரு நல்கிய வாசியால் நலமனைத்தையும் பெற்றிட்டோம்!
நாடு தோறும் நலம் பெற நம் சிவகுருவை வேண்டி
வந்தனை செய்து வாழ்ந்திட்டோம்!
************************
சிவகுருவின் வாசியால்
உண்மையில் விழித்து
ஊனதனை அறிந்து
ஊனமதை போக்கி
உயிர்தனை பெற்று
உண்மைதனில் நிலைத்து
உயிர் ஒலி அறிந்து
உள்ளொளி பெருக்கி
உளம் தனில் நின்ற – எங்கள் சிவகுருவே
“சிவகுரு சிவசித்தன்”
**********************
சிவமாய் தனித்து சிந்தையில் உணர்ந்து
தவமாய் இருந்து தன்னொளி அறிந்து
வரமாய் பெற்ற வாசியோகத் தலைவனே!
உருவாய் வந்தாய் உண்மையாய் நினைப்போருக்கு!
உளமாய் தந்தாய் உண்மையில் நிலைத்தோனுக்கு!
உள்ளொளியால் நின்றாய் உண்மையாய் உரைத்தோனுக்கு!
சிவகுருவின் பக்தை,
K.B.சுபாசினி
வாசியோக வில்வம் எண்: 13 02 106