சிவசித்தரின் பாமாலை|002|

சிவகுரு சிவசித்தர் ஆசியால்

FB_IMG_13922478277757260பங்குனியில் பிறந்து
பகுத்தறிந்து
பரம்பொருளை அகத்தில் காட்ட
பார் புகழ வந்த
பரமனே சிவசித்தனே !
பன்னிரு கைகள் இல்லை
பாம்பொன்று உடல்மேல் இல்லை ஆனால்
பலரது விரல் தொட்டு பயிற்சி கொடுத்து கழிவகற்றி
பயிற்சியாளர் உள்ளத்தில் உண்மை
பரத்தை காட்டி
பாம்பாட்டம் படமெடுத்து ஆடவைத்த
பரதத்துவ ஒளியே
பரம்பொருளே எங்கள் சிவகுருவே சிவசித்தனே சரணம்!.