சிவசித்தரின் பாமாலை|002|

சிவகுருவே சரணம்!

செந்தமிழின் வித்தகரே சரணம்!
கலியுக வரதனே சரணம்!
சிந்தாமணியின் சுடரே சரணம்!
காலனை வென்றவரே சரணம்!
ஈசனின் மறு பிறப்பே சரணம்!
பகலவனின் ஒளியானவரே சரணம்!
சிவஞான முக்தியரே சரணம்!
சூட்சுமத்தின் வித்தகரே சரணம்!
சர்வ சக்திகளின் அடக்கமானவரே சரணம்!
சிவகுருவே சரணம்!
சிவசித்தரே சரணம்! சரணம்! சரணம்!
*********************************

பெயர் : சு. சண்முகவள்ளி.
ஊர் : சின்னமனூர்.
வாசியோக வில்வம் எண் : 1309304,

சிவசித்தரின் பாமாலை|001|

sivasiththan (june92013) (15)

 

சிவகுரு வாழ்க !
சிவகுருவே சரணம் !

“சிவம் ஆன சித்தனால் உருவான பக்தன் நான்
வினையாவும் போக்கும் எங்கள் சிவசித்தனே
குருவான தெய்வமே எம் குலம் காக்க வேண்டும்
வளமான வாழ்விற்கு வழிகாட்ட வேண்டும்”.

“பகலவனின் ஒளி காணும் முன்னே
பரமனின் ஒளியே ஆதியென அள்ளித்தரும்
என் சிவகுருநாதனின் முக ஒளி காண
வரம் எமக்களித்த என்குருநாதனே
போற்றி ! போற்றி !”

“எம் இன்னலைப் போக்க பல்வேறு
நிலைகளில் யாம் உனைப் பார்க்க
“யாம் இருக்க பயம் ஏன்” எனும்
மந்திரச் சொல்லாக உன் திருமேனி
காட்சியளிக்கின்றதே, என் சிவகுரு நாதனே
போற்றி ! போற்றி !”

“வாசியாய் விளங்கும் இறைவனே
ஓங்காரமாய் இருக்கும் ஈசனே
ஓங்காரத்தை உணர்த்த அவதரித்த சிவசித்தனே”

“உன்னை ஒரு கணமும் மறவாத மனம் வேண்டும்
துன்பம் களைவாய், இன்பம் அருள்வாய்
துயரங்கள் தொடராமல் துணைவருவாய்
குருவே சிவனே அருள்வாய் சிவசித்தனே”.

இரா.ராஜகுரு,

பழங்காநத்தம், மதுரை.