சிவசித்தன் வாசியோகம்: சரத்தை அறிந்தால் சர்ப்பம் உணரலாம்

சிவகுரு சிவசித்தரின் ஆசியால்,

#Sivasithan (29)

சரத்தை அறிந்தால் சர்ப்பம் உணரலாம்

சரம் நடுவில் இயங்கினால் தானாய்

ஆடும் சர்ப்பம் உன்னுள்ளே!

சர்ப்பம் சீராக சீறிட உன் சரம்

சுத்தமாக இருத்தல் வேண்டும்.

உடலது உணமையாகும் எம் சிவசித்தரின்

வாசி உள் சென்றால்.

வாசியால் நீ உணரும் நெருப்பாற்றல்

உன் சரத்தின் முக்கழிவை அகற்றி

உன் அணுவின் வட்டத்தையும்

தெளிவடையச் செய்யும்.

தெளிந்தபின் தெரியும் அறிவால்

உன்னை உண்மை அகம் கொண்டு

நோக்கினால் தோன்றிடும் மெய்ப்பொருள் உன்னுள்ளே.

சிவசித்தரின் மும்மந்திரந்தனை பிறவாமல்

இரு கையினை நெற்றியின் நடுவில்

அகலாது வைத்து

ஒவ்வொன்றையும் ஈரைந்து முறை

உன் மெயக் கொண்டு நீ கூறும்போது

உன் சரத்தில் சர்வம் கொண்டுள்ள

சர்ப்பம் தானாய் தன் நிலையறியாது

தன்னை வெளிக் கொணருமே.

தன்னை மறந்த நிலையில்

தரித்திடும் சர்ப்பம் – ஆடுமே வலமாக இடமாக

முன்னுமாக பின்னுமாக

ஏதடா அந்த ஆட்டத்தின் இறுதி நிலை!

தனையறியாது எழுப்பும் ஓசையும் அசைவும்

அண்டத்தின் இயற்கை செய்யும்

மின்னலும் இடியும் கூட

நானிடும் எம் சிவசித்த மும்மந்திரத்தின் மகிமைக்கு…

 

 

“ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்

ஓம் சிவசிவ சிவசித்தன் ஓம்

ஓம் சிவய சிவசித்தன் ஓம்”

 

 

அறிவாய் உயிரின் ஓசையை உன் உடலால்,

சிவசித்த மந்திரத்தின் உன்னதத்தால்,

சிவசித்தரின் வாசியோகம் பயின்று,

கழிவகன்று,

உண்மை உணர்ந்த பின் உன் மெய்யாய்

எம் சிவகுருவின் வாசியால்……

 

 

வாசியோக பக்தன்

ர.சுந்தர்

வாசியோக வில்வம் எண் :  13 09 205

சின்னமனூர்.தேனி மாவட்டம்.

சிவசித்தரின் பாமாலை|001|

சிவகுருவே சரணம்

எட்டெட்டு அகவையிலே
எழுதுகிறேன் என் உள்எண்ணமதை
ஓரெட் டெடுக்க இயலாத முடமாகி
தவழ்ந்தேன் நாற்காலில்
இருகாலும் புண்ணாகி முன்னொருகால்

கர்ம வினையோ
செய் வினையோ
எவரெவர் இட்ட சாபமோ
ஏழரைச் சனியின் ஏவலோ
எம்மாதின் கும்பி கொதிப்போ
என்றென்னை கண்மறைந் தேளனம் செய்தனர்.

அங்கமெல்லாம் நொந்து புண்ணாகி
மெய்யெல்லாம் (துர்)நீர் வடியத்
துவண்ட எனை எமனவனும் துரத்த
நம்பி வந்தேன் எம் சிவகுரு
சிவகுரு சிவசித்தரே சரணமென்று
தஞ்ச மடைந்தேன் சிவஒளித் திருத்தலம் தனை

காலால் தாங்கினார்
காலை உணர்த்தினார்
‘கரி’ காலனாய் வந்த என்னை
பொன் காலனாய் மாற்றினார்
பொன், மண், பெண் மூவாசை போக்கினார்
பலரைத்தொழும் புண்ணியனாய் ஆக்கினார்
வேலா யுதனாய் காலனையும் விரட்டினர்
ஆதலின்,
சிவகுருவே என் நாடி
சிவகுருவே என் சுவாசம்
சிவகுருவே என் நரம்பு
சிவகுருவே என் குருதியோட்டம்
சிவகுருவே என் ஆன்மா
சிவகுருவே என் பரமான்மா
சிவகுருவே நட்சத்திரங்கள், நவகோள்கள்
சிவகுருவே சூரிய, சந்திரர்
சிவகுருவே பிரபஞ்சம்
சிவகுருவே என் ஈசன், என் இறை.
சகலமும் சிவகுரு சிவசித்தரே
சர்வமும் சிவகுரு சிவசித்தரே
அனைத்தும் சிவகுரு சிவசித்தருள் அடக்கம்.

குரு வழிபாடு தேவையா?
குருவின் பாதம் தொடலாமா?
குருவும் இறையும் ஒன்றா?
என்பவருக்கு,
சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் பயின்று பார்!
சிவகுரு சிவசித்தரை உணர்ந்து பார்!
உயிரற்ற ஊனுடலில் வாசியேற்றிப் பார்!
சிவபரவொளி நெருப்பாற்றல் சக்தியை சரணடைந்துப் பார்!
குரு வென்பாரெல்லாம் உணர்த்தவில்லை
உணர்த்துபவரே, பாமரனையும் உயர்த்துபவரே
ஒரு நாமமாய், ஓருருவாய்
ஓரிறையாய்
உன்னுள் உறைவார்! உணர்ந்துப் பார்!
****************************************************
M.G.கல்யாண சுந்தரம்
வி.எண்: 11 02 001