‘ந’ கர கவிகள்

சிவசித்தரே!
நன் நயம் நல்கும் நக்கரூபனே
நகம் நடுக்கும் நமச்சிவாய – நடையால்
நகை காட்டும் நண்பே நின்
நயன் மே வாசியால்
– இனிய சொற்களை மட்டும் பேசும் சிவனின் ரூபனே, மலைகூட அதிர்வு காணும் நின் மந்திரத்தின் இயல்பால், ஒளி வீசும் அன்பு நின் கண்களில் வாசியாய் வெளிப்படுகிறதே…

சிவசித்தரே!
நாடி நாடும்நீர் நாடிதனில் வாசிஏற்றி
நாடி னோம் நாட்டம் – நரம்பில்
நாடோ றும் நாட் காலம்
நாகம் தனில் பரந்தோமே…
– மணிக்கட்டின் துடிப்பின் மூலம் எங்களை உணர்ந்து மூக்கின் வழி வாசி யேற்றினீரே, ஆராய்ந்தோம் வாசியின் சஞ்சாரத்தை எங்கள் உடலின், தினமும் அதிகாலையில் ஆகாயத்தில் பரந்தோமே… பாரமின்றி…

சிவசித்தரே!
நிகம் மாம் வாசி நியமமாய்
நிலா வினால் நிரி – யாமை
நிர வதியாகுமே நி தானமே
நிறைவு தரும் வாசியே
– வாசியெனும் வேதம் தனை அட்டாங்க யோக முறைகளை முறையாகப் பின்பற்றினோல் தியானத்தில் மரணம் அது எல்லையற்றதாகும் (நி) – ஆதி காரணமே அது உண்மையான நிலைப்பாட்டை உணர்த்தும் வாசியே.

சிவசித்தரே!
நீச்சு மல்ல நீர்க் கோலமல்ல
நீத்த லும்மல்ல நீலனே – வாசியது
நீத்தார் காட்டாத நீதி நீரே
நீறு கொண்டு காட்டினீரே.
-நீந்தக் கூடிய ஆலமும் அல்ல, நீரில் வரையப்பட்ட கோலமும் அல்ல வாசி, முனிவர்கள் காட்டாத ஒழுக்க முறையை நீரே உம் திருநீற்றில் காட்டினீரே..

சிவசித்தரே!

நுகர்ந் தோமே நும் நுவல்
நுட்பம் கூட்டுதே எம்மை – நுடங்குதே
நுண் காண நுரை யீரல்வழி
நுதலு தே வாசி…
– உட்கொண்டோமெ உங்கள் சொற்களை .. எங்களை கூர்மையாக்குதே, அது எங்களை வாசியோது ஈடுபடச் செய்கிறதே… அணுக்களை உணர நுரையீரல் தாண்டி கிளர்ச்சி உண்டாக்குதே வாசி..

சிவசித்தரே!
நூத னமாய் நூல் நூற்பா
நூழை யுள் நுழையும் வாசியே
நூக்கு நீரே துன்பமே..
– புதிதாய் சாஸ்திரங்கள் மூலம் இலக்கண அர்த்தங்களை நிச்சயமாய் புரிய வைத்தீரே சிறு நுழைவாயில் போன்ற நரம்புகளுல் கூட நுழையும் வாசி மூலம் எம் துன்பங்களை நீங்கச் செய்தீரே.