சிவசித்தரின் பாமாலை|005|

சிவகுருவே சரணம்

FB_IMG_139233438622025081. வாசியால் அருள் புரிந்து நம்மை ஆட்கொண்டவரே!
மாய சக்தியால் மாயமான எங்களை மீட்டு – கொணர்ந்தவரே!
விதி எது – மதி எது என எங்களுள் நிரூபித்தவரே!
ஆணவத்தால் பேசினோம் அங்கும் அன்பு உரைத்தீரே!
உணர்ந்த பின் நீயே “இறைவன்” என்றோம்!
உண்மையாய் இருப்பின், நீயும் இறைவன் என்றாய்!

2. விஞ்ஞானத்தால் மெய் ஞானத்தை உணர முடியாது,
அஞ்ஞானத்தால் சிவகுருவை அறிய முடியும்.

3. எங்கள் சிவகுருவே,

வலகலை, இடகலை ஏதும் அறியோம்!
சுளிமுனையை முழுமையாய் உணரோம்!
பல கவி பாடல்கள் ஏதும் புனையோம்!
சூட்சுமம் ஏதும் அறியோம்!

உண்மையை உரைக்க செப்பினோம்!
உங்களை உணர்ந்தோம்!
உங்களருளால் இறை உணர்ந்தோம்!

4. எங்கள் சிவகுருவே,

அன்பால் படைத்தீர் புத்துலகை!
அனைவரும் சிறப்புடன் வாழவே!
அறியாதவர்கள் அன்பையும் ஆணவம் என்றனர்!
அறியாமையால் வாழும் அவர்களும்,
சிறப்புடன் வாழவே,
படைப்பீர் அன்பால் புத்துலகை.

*********************