வாசியை இருவழியில் வாசித்து …

ஓம் சிவகுரு தாள் சரணம்

 

Copy of Vilvam  (16)மாயை வழி செல்லும் உயிரை

மாற்றி வாழ்வை மலர வைத்து

நாடி வந்தவரை நாடி பார்த்து

நல்வழி படுத்திய உயர்வாளாரே

வாசியை இருவழியில் வாசித்து

நல்வாழ்வை தந்து கண்டிப்புடன்

உணவைக் குறைத்து உயிரை உண்ணதம்

காணவைத்த எம் சிவகுரு சிவசித்தன் தாள் சரணம்.

 

மந்திரம் உணர்த்துவது

முதலாக நின்ற சிவனை

சிவசித்தன் வழியில் அறிய

உள்ளொளியில் காணக்கிடைக்காத

பேரொளியை சரத்தால் உள்தேடு

தேடிக் கண்டவர் கண் முன்னே இருக்கையில்

நானும் தேடுகின்றேன் சிவசித்தன் அருளினாலே!

 

ஆர் அறிவார் வாசியின் நீளத்தை

ஆர் அறிவார் எங்கள் சிவசித்தனை

உயிர் அறியா விழுப் பொருளை மலத்தால்

வேர் அறிய முற்பாதே விரைந்தலிவாய்.

 

சிவகுரு சேவையில்,

ந.இராமச்சந்திரன்

வாசியோக வில்வம் எண் :1312019

+919790447079

சிவசித்தரின் பாமாலை|003|

சிவகுருவே சரணம்

1. உண்ணா உணவை உண்டு நம் எண்ணத்தை சிதைத்தோமே!
நம் எண்ணத்தில் பலகுறை வைத்து பரிகாரம் தோஷம் என்றோமே,
உண்ணும் உணவை அறிந்தோமே! – சிவகுருவின் வாசியோகத்தால்
நம் எண்ணமும் சீர் பெற்றதே ஒழுக்கமும் நிலை பெற்றதே!

FB_IMG_139234077929618272. உண்ணும் உணவே “கழிவு” என்று அறிந்தோமே,
சிவகுருவின் வாசியோகத்தில்
உண்ணும் உணவால் பல குறை உன் மக்களுக்கும்
என்று உரைக்கச் சொன்னாரே சிவகுரு சிவசித்தர்
பெருஞ்சொத்து சேர்க்க வேண்டாம், உன் மக்களுக்கு
சிவகுருவின் வாசியோகத்தால் உன் கழிவகற்ற
சிவகுருவின் வசியோகத்தால் உள்ள ஒழுக்கத்தை நெறிப்படுத்து
பெருஞ்சொத்தாக மாறுமே உன் சந்ததியினருக்கு.

3. மகளிரே! மாதவிடாய்ப் பிரச்சனையால் துவண்டு போனீர்!
நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் பல வைத்தியரை நாடிச் சென்றீர்!
சந்ததி இல்லாமல் வருந்தி நின்றீர்,
நிரந்தரத் தீர்வு கிடைக்குமே சிவகுருவின் வாசியோகத்தால்
உண்மையை உணர்ந்து சொல்கிறேன் இப்பிரச்சனையில்,
இருந்து மீண்டு வந்தவள் என்பதால்!

******************