அணு:

அணு:

085

 • உடல் அணுவின் செயல்பாடு தன்னுள் அறிய வாசியே மூலம்.
 • உடலால் தன்னை உணரவைக்கும் அணுவிற்கு உணவே வாசி.
 • இரு வழி நுழையும் வாசி உடலால் அண்டத்தை உன்னுள் காண்பாய்.

 

 • தன்னுள் இருக்கும் அணுவை அறியாமல் இயற்கையை அறிய முடியாது.

 • இயற்கையை அறிய முற்படுவது உடலில் உன் அணுவை அழிப்பதற்கு சமம்.

 • சிவசித்தன் வாசியை உணர்ந்த அணுவை எவரும் உணரமாட்டார்.

 

 • சிவசித்தன் அணுவை அறிய முற்படுவான். அவன் அணுவை அழிப்பவன் ஆவான்.
 • சிவசித்தன் வாசியை உணரும் அணுவை துன்புறுத்தினால் வாசியே உன் உடல் அழிவதை தடுக்காது.
 • பிறந்தாய் வளர்ந்தாய், உன் அணுவை அறியாதவன் நீ. உயிர் கொடுக்கும் அணுவை அறிய முற்படாதே.

 

 • முச்சுடரையும் தன்னுள் அறிவது வாசியால் தான். அதை தன்னுள் உணர வைப்பது சிவசித்தரின் வாசியே.

 • வாசியே தன்னுள் முச்சுடரின் ஒளியாகும். சிவசித்தன் அருளாலே இது மெய்யாகும்.

 • உடல் அறியும் அணுவாலே முச்சுடரின் வழி அறிவாய். வாசியாலே உயிர்பெற்று முவ்வழியை உணர்வாய்.

 

 • காணாத ஒளியை தன்னுள் காணும் வளியால் சிவகுருவின் அருளால் நவதுளையால் ஒரு துளை அறிவாய்.
 • இருக்கும் இடமறிந்து வாசி செலுத்து உன் அகம் வாசியால் ஒளி ஆகுமே.
 • நாவால் கூறும் வார்த்தையை அணு அறியுமே. அறியாமல் பேசி அழிக்காதே உன் உடலை.

 

 • ஆதாரம் இத்தனை என்று அறியாத நீ, வாசியை அறிந்து பார். ஆதாரம் எவை எவை என்று உணர்வாய்.

 • ஆதாரம் கணக்கிட்டு கூறியவன். அணுவை அறியாமல், உடலை அழித்தானே.

 • ஆதாரம் அறிந்து செலுத்தும் வாசியால், அண்டத்தின் பேராற்றலை நீ அறிவாய்.