சிவசித்தன் வாசியோகம்: உண்மையாமே உன் அகஎண்ணமே.

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

 

sivssiththan 2  (31)

சீவனில் உள்ளதடா உன் சிவன்
வெளியே தேடாதே
உள்ளத்தின் உண்மை உணர்வதே
நீ கூறும் உண்மையான ஆன்மீகம்.
கற்றலிலோ, கற்றலிலோஇல்லை உண்மை.
உன் உள்ளமதில் உள்ளது உண்மை.
இறுதியில் உன்னோடு வருவது அந்த
உண்மை மட்டுமே
நீ கற்றதும், உற்றதும், பெற்றதும், சேர்த்ததும் வராது.
மருத்துவக் குருதி இன்றி இயல்பாய்
வரவேண்டும் உன் இறுதி.
இயற்கை அது உன்னை
தன்னோடு பற்றிக்கொள்ள வேண்டும்.
தானாய்.. அதை சிவகுரு சிவசித்தர்
அருளும் வாசியோகத்தல் மட்டுமே முடியும்…

************************************
சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

 

“கூட்டினிலே உள்ளதடா மனிதா!
காட்டினில் இல்லை,
கல்லிலும் இல்லை,
உண்மை உன் மெய்”
அகமனநாதன் உன்னுள்ளே.
அவனைக் கேள்
அவன் சொல்வான் உண்மை!
உண்மையாமே உன் அகஎண்ணமே.
நல்லெண்ணம் நன்மை அடையும்.
தவறினால் தெரியும் தீமையும்
தீச்சுடர் உன்னை சுட்டெடுக்க!
கழிவுள்ள உடல் என்று நல்லெண்ணமாகாது.
அந்த எண்ணம் நெடுநாள் நிலைக்காது.

 

வாசியோக பக்தன்

ர.சுந்தர்

வாசியோக வில்வம் எண் :  13 09 205

சின்னமனூர்.தேனி மாவட்டம்.