உன் நம்பிக்கைகு பாத்திரமாக உன் ஆன்மாக்களை மாற்று!

வணக்கம் சிவகுருவே!
‎சிவசித்தன் மேல் நம்பிக்கை இல்லையா?

vilvam (129)

நீ எங்கள் மேல் வைக்கும் நம்பிக்கை உண்மையே,
உன் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆகவில்லை என்று உனக்கு தொன்றும்படி ஒருநிலையை உருவாக்கி விட்டோமே!

உன் நம்பிக்கைப் போல் நம்பிக்கை வைக்க கூட தெரியவில்லையே,
நீயே எங்களை ஆட்கொண்டு உன் நம்பிக்கைகு பாத்திரமாக உன் ஆன்மாக்களை மாற்று!

உன் மும்முறையை உன்னை நினைத்தே கடைபிடிக்கிறேன்!

உன் அகம் அதில் நீ தனியாய்
உன் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தோன்றியதா,
சிவசித்தனே! மன்னிக்கவும்,
இவ்வுலம் எங்களுக்கு கற்றுக்
கொடுத்த நம்பிக்கையின் ஆழம் அவ்வளவே!

உன்னை தாள் பணிந்து வேண்டுகிறேன்,
உன் உயிர் நம்பிக்கை இன்மையால் தனிமையில் தவிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்,
சிவகுருவாய் எங்களை வழி நடத்தியே,
உண்மை நம்பிக்கை உன் மேல்,
என்றும்,
என்னிலையிலும்
எண்ணம் அற்றே,
ஒரு குழந்தை தாயை நம்புவது போல்,
உன்னை நம்பவே,
எல்லா கழிவை அகத்திலிருந்து அழிப்பாயே!
நன்றி சிவசித்தனே!