உயிரறிவித்த ‪ ‎வாசிக்கு என்றும் ஒரே தலைவனே எம் ‪ ‎சிவகுரு_சிவசித்தனே!!!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

1 (1610)

மருள் சூழ்ந்த ‪ ‎மனதின்இருளோடும்
‪ கருமருந்து சூழ்ந்த உடலோடும்
மாற்றானின் ‪ ‎மன_எண்ணத்தோடும்
மதியில்லா  ‪ ‎மாந்தியாய்
இயல்பின்  ‪ ‎நடைபிணமாய்
அடைக்கலம் தேடி ‪ ‎சிவசித்தனின்_வில்வம் வந்தேன்!
கரம் தொட்டு கருமருந்து அறிந்து கலைந்திட
‪ ‎வாசியது மெய்யாய் மேவிட
‪ ‎மேனியது_தேகமாகியது!
உணரச் செய்த ‪ ‎உத்தமன் உள்ளிருக்க
மனமது ‪ ‎சிவசித்தனால்அகமானது!
முக்கனி சுவை போல் ‪ ‎மும்மந்திரமாய்
‪ ‎சிவசித்த திருநாமம்
சிந்தை தவறமால் சிந்தித்து ஓதிட
சிரசில் சீற்றம் ‪ ‎சர்ப்பமாய்.

‪ ‎மெய்நாமத் தாலாட்டில் மெய்யது
‪ ‎பொம்மலாட்டமாய் தானறியாது
உண்மையினை நோக்கி தானாடுதே!
தேகமெங்கும் ‪ ‎அமிழ்தூரிய_வாசியின் உண்மையால்
அகம்முழுவதும் ‪ ‎ஆத்மனனாய் அகஇன்பமருளியே!
பேரின்பத்தின் பெருவழியை தொடங்கி வைத்து
‪ ‎தனதருளை தான் உணர
தனிமனிதனாய் ‪ ‎அகத்தவமேற்றியே!
‪ ‎ஆயக்கண்ணனாய் ‪ ‎அகவிளையாட்டில் ‪ ‎அகங்காரம் நீக்கியே
அற்புத திருவருளை அடியனுக்களித்திட
எம் மெய் நின்னோடு ‪ ‎இரண்டறக்_கலந்திட
நித்தம் உன் மும்முறையை
உண்மையாய் பற்றிடுவேன்!
அருள் தருவாய் ‪ ‎அய்யனே!
அகிலத்தின் ‪ ‎ஆதவனே!
உயிரறிவித்த ‪ ‎வாசிக்கு என்றும்
ஒரே தலைவனே எம் ‪ ‎சிவகுரு சிவசித்தனே!!!

நன்றி ‪ ‎சிவகுருவே.பெயர் : ரா.சுந்தர்

வாசியோக வில்வம் எண் : 13 09 205.

ஊர் : சின்னமனூர்.

சிவசித்தரின் பாமாலை|001|

 சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்.

sivssiththan 2  (10)

 

காயக் கழிவோடு வாழத் தெரியாமல் வாழ்வதனை

வாழ்ந்து கொண்டு உயிரானது உடலில்

இருந்தும் நடைபிணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்

வாசியறியா மானிடர்களே ! எம் ஆசான்

சிவசித்தன் உந்தன் நாடிபார்த்து சிவமாகிய

வாசியை உடலில் ஏற்றி உம்மை தூய்மைப்படுத்தும்

தூயவரான சிவசித்தன் வாசிகலை பயில்மனமே !

 

**************************

 

தேகசக்தியை தந்து தெய்வ சக்தியை

அருளி பரமுக்தியதைக் கொடுத்து நாளும்

பொழுதும் நயம்பட உம்மைக் காத்து

உம்மை உனையே அறியச் செய்யும்

அருள்கலையே எம் ஆசான் சிவகுரு

சிவசித்தனின் உயிர்கலையெனும் வாசிகலையாம் !    

 

**************************

 

அகிலம் காக்க அவதரித்த ஆதியின்

புதல்வரே சிவகுரு சிவசித்தரே ! உந்தன்

மகிமை அறியாமல் அலைகின்றனர் அவனியிலே !

மாந்தர்கள் அங்கமதில் பிணியோடு

பிணிபோக்கும் மருந்தாய் சிவசித்தர் இருக்கையிலே !

 

**************************

 

ஒழுகின்ற விந்துதனை ஒழுங்குறுத்தி

தோய்வான மேனியையும் பொழிவாக்கி

வழுவிழுந்த மனதையும் நிலையாக்கி அறியாது

முன்செய்த வினைகள் அத்தனையும்  

பரிதிமுன் கண்ட பனி போல விலகியதே !

சிவசித்தனின் திருவடி பணிந்து வாசிகலை

அறிந்த தருணமதிலே !

சிவகுரு பக்தன்

 – ம. சண்முகபாண்டியன்.