சிவசித்தரின் பாமாலை|008|

சிவகுருவே

1) நின் பதம் பணிந்தோம்,
நித்தம் உன்னை தொழுதோம்,
வாசியால், உன்னை அறிந்தோம்,
சுளிமுனையால் உணர்ந்தோம்,
சுகந்தம் தனை அறிந்தோம்,
சுற்றமும் சீர் நினைத்தோம்.

2) சிவகுருவே

வான்புகழ் வாழ வளர்வாயே
வாசியால் எங்களைக் காப்பாயே!


DSC07772சிவகுருவே சரணம்

1) எண்ணத்தில் வாசிதனை வைத்தோம், ஏகாந்தமதை
உணர்ந்தோம்,
சிவகுருவின் பயிற்சியால் உருப்பெற்றோம்,
மந்திரத்தால் உயிர் பெற்றோம்.
உடல் கழிவகற்றி, சிவகுருவின் வாசியால், உடல் உயிர்தனில்
உன்னதம் அடைந்தோம்.

2) நிறைகுடம் தளும்புமோ!
கூற்றவனைக், குறை சொல்லலாகுமோ!
குறையில் இறை நிரப்பும் மனிதர் அன்றோ!
மனிதருள் புனிதம் உணர்த்தும் இறையன்றோ
அவ்விறையே நீயென அறிவோம் சிவகுருவே!
உங்களின் வாசியால்!