சிவசித்தரின் பாமாலை|006|

சிவகுருவே சரணம்

DSC07941படைத்தல், காத்தல், அழித்தலை
நடத்திய, மும்மூர்த்திகளின்
முழு அவதாரமே, எம் சிவகுருவே
மருந்தில்லாத, உலகத்தைப்
படைத்தேன் , என்றான் மானிடன்
அதனினும் அரியது நோயற்ற
உலகத்தைப் படைத்தீர்,
எம் சிவகுருவே
இன்று புதியதாய் பிறந்தேன்
பிணியில்லாத, பெருவாழ்வுடன்
வலியின்றி, நல்வழியோடு
எம்மைப் படைத்தீர்
எம் சிவகுருவே
நோயின் உண்மையறியாமல்
உள்ளம் வாடி
உம்மைத்தேடி, வருபவரின்
நாடி, அறிந்து, உள்ளிருக்கும்
விஷக்கழிவை, நீக்கி (தொக்கம்)
உயிர்காக்கும், திரு நீலகண்டரே
வில்வமையதிருக்கு, விருப்பமுடன்
வருவோரின், உடலில், தீய அணுக்களையும்
உள்ளத்தில், உள்ள, தீயகுணங்களையும்
அளித்து, நலத்துடன், நற்பண்பையும்
கொடுத்து, சிறப்புடன் வாழச் செய்தீர்
எம் சிந்தாமணி வாழ் சிவசித்தரே.