வணக்கம் சிவகுருசிவசித்தனே!
எது எதிர்மறை எண்ணம்? – 002
தன் வாழ்வில்
சிலவருடம் படித்த
மேல் படிப்பும்
அதற்க்காக செலவிட்ட
பணத்தை எண்ணி
பிடித்ததோ இல்லையோ!
அந்த பணியைத் தொடர்ந்து
செய்ய விளைகிறாய்!
புவியில் இறைத்தொண்டு
ஆற்ற பிறந்து
மனித நடைமுறையில்
ஓடாமல் வளர்ந்து,
வாழ்வின் உண்மை எது?
உண்மை அன்பு எது?
என்று
அறிய பலதுயரம் அனுபவித்து
வாழ்வனைத்தும்
இந்த தேடலை பின்தொடர
பல தியாகம் செய்து,
கண்டு உணர்ந்து
அகத்தவ வாழ்வு
வாழும் ஒவ்வொரு
உயிரின் வாழ்வின்
நோக்கமே
இயல்பான இயற்கை வாழ்வு!
சிவசித்தன் வழிகாட்டும்
வாழ்வு நேர்மறைஎண்ணம்
செயலாக்கும் வாழ்வு!
இயற்கை இயல்பில்
மாறி தடம்புரண்டு
மனித மனஎண்ணத்துக்கு
ஏற்பவும்,
தன் சுயநலம்
பூர்த்திசெய்யும் வாழ்வு,
அனைத்தும்
எதிர்மறை எண்ணம்
கொண்ட
நடைபிண வாழ்வே!
பலர் எதிர்மறை எண்ணம்
கொண்டு
அதேவழி செல்வதால்
அது சரியாகி விடாது!
இயற்கை
இயல்பான வாழ்வு
சிலர் செல்வதால்
அது தவறாகிவிடாது!
இயற்கை
இயல்பு வாழ்வை
வாழும் உயிர்களின் வாழ்வில்
உன் எதிர்மறைஎண்ணத்தை
திணிக்க எண்ணினால்,
அதற்கான
தண்டனையை
இயற்கை நிச்சயம் அழிக்கும்!
நன்றி சிவகுருசிவசித்தனே!