உடற்கழிவுகள் வெளியேறிய நிலையில் தற்போது எனக்கு தலைவலி

வணக்கம் சிவகுருவே

சிவசித்தனின் வாசியோகக்கலை

ஸ்ரீ வில்வம் யோகா மையம்

சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, மதுரை

     நானும், என் மனைவியும் மதுரை அனுப்பானடி தெப்பகுளம் பகுதியிலிருந்து கடந்த 1  1/2 ஒன்றரை ஆண்டுகளாக வாசியோகப் பயிற்சிக்கு வருகிறோம்.

     நான் பயிற்சிக்கு சேரும் முன் எனது உடலில் பல்வேறு விதமான உடற் தொந்தரவுகள் இருந்தன. அதாவது எனக்கு பல வருடங்களாகவே இடது பக்க ஒற்றைத் தலைவலி (மைக்ரோன்) சிறுநீரகக் கல் அடைப்பு தொந்தரவு (இடது பக்கம்) மற்றும் 2011 – ம் ஆண்டு முதல் எனக்கு முதுகுதண்டு வடத்தில் கழுத்து எழும்பு தெய்மானமாகி சவ்வு விலகியிருந்தது.

     மேற்காணும் உடற் தொந்தரவுகளுக்கு எல்லா விதமான மருத்துவ முறையில் சிகிச்சை மேற்கொண்டும் பலன் ஏதும் கிடைக்காத நிலையில், நண்பர் ஒருவரின் உதவியில் ஸ்ரீ வில்வம் யோகா மையம் வந்து சிவகுரு அவர்களால் நாடி பார்க்கப்பட்ட அந்த முதல் நாளே எனக்கு முழுநம்பிக்கை வந்தது.

     ஏனென்றால் என் உடலில் உள்ள குறைபாடுகளை சிவகுரு சிவசித்தன் அவர்கள் நாடி பார்க்கும் போது எனக்கு இடது பக்க வலி உள்ளது என்றும், அன்றைய தினம் காலை மலம் கழிக்காததையும், தொண்டை முதல் வயிறு வரை புண்ணாகி உள்ளதையும் மிகச் சரியாக சிவகுரு அவர்கள் கூறியபோது எனக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. பிறகு சிவகுரு அவர்களால் கொடுக்கப்பட்ட வாசியோக மூச்சுப் பயிற்சியினை முறையாக செய்தும், விதிமுறைகளை சரியாகப் கடைபிடித்தும், சிவசித்தனின் திருநாமம் சொல்லியும், என்னுடைய உடற் தொந்தரவுகள் நாளுக்குநாள் நன்றாக குறைவதை என்னால் உணர முடிந்தது.

     அதே போல் பயிற்சியில் சேரும் போது என்னுடைய உடல் எடை 65 கிலோவாக இருந்தது.

     வாசியோகப் பயிற்சி, வாசியோக உணவுமுறை மற்றும் விதிமுறைகள் சரியாக கடைபிடித்ததின் பலனாக என்னுடைய உடற்தொந்தரவு நீங்கியும், உடற்கழிவுகள்  அகற்றியும், உடல் மெலிந்து பஞ்சு போல் லேசாக இருப்பதை கண்ணுரக் கண்டு கொண்டேன்.

     மேலும் மாதா மாதம் ரூ. 4000- வரை மருத்துவ செலவு செய்து வந்தும் உடல் தொந்தரவுகள் நீங்காத நிலையில்,பயிற்சியில் சேர்ந்த பிறகு மாதம் ரூ.100/- மட்டும் மையத்தில் கட்டணமாக செலுத்தி உடற்குறைகள் அனைத்தும் நீங்கி இன்பமாக வாழ்ந்து வருகிறேன்.

     தூக்கம் சரியாக வராது. படுக்கைக்கு சென்று சுமார் 1 மணி நேரம் கழித்து தான் தூக்கம் வரும். பல்வேறு சிந்தனையால் தூக்கம் தடைபடும். மேலும் 7 to 8  மணி நேரம் தூங்கியும், காலையில் எழும் போது அதிக உடல் வலி உள்ள நிலையிலும், அசதியாக இருக்கும்.

     தற்போது சிவசித்தனின் மும்முறைகளை சரியாக கடைபிடித்ததின் பலனாக படுக்கைக்கு சென்றவுடன் ஆழ்ந்த உறக்கம் கொண்டு, அதிகாலை 3.30 மணிக்கு (சுமார் 4 மணி நேரம் தூக்கம்) உற்சாகத்துடன் எழுந்து சுறுசுறுப்பாக காலைக்கடன்களை முடித்து பயிற்சிக்கு வர முடிகிறது.

சாப்பிடுதல் பயிற்சிக்கு வருவது போல் இருக்கும். அந்த நேரத்தில் உடனே கிடைக்கும் உணவை (வாழைபழம், மிட்டாய், ரொட்டி) உண்ணுவேன். மேலும் சாப்பிடும் நேரம் தவறி உண்டும், அதிக உணவை உண்டும், உடலில் கழிவுகள் அதிகமாகி குண்டாக இருந்தேன்.

     தற்போது சிவசித்தனின் வாசியோகப் பயிற்சி மற்றும் உணவு முறைகளை விதிமுறைப்படி உண்பதால், எளிய சைவ உணவை குறித்த நேரத்தில் உண்பதால் உடல் லேசாக காற்று போல் உள்ளதை உணரமுடிகிறது. மேலும் உடற்கழிவுகள் வெளியேறிய நிலையில் தற்போது எனக்கு தலைவலி, சளி, இருமல், காய்ச்சல், இன்றி மிகவும் சந்தோசமாகவும், ஆனந்தமாகவும் பயிற்சியின் மூலம் இன்பமாக அனுபவித்து வாழ்ந்து வருகிறேன்.

     “யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்பதைப் போல் மக்கள் அனைவரும் உடலை தேகமாகவும், எண்ணக் கழிவகற்றி மனதை அகமாக பெற்று தேகசற்ப ஆற்றல் கண்டு, சிவசித்தனின் திருநாம முறையை அகமுணர்ந்து கூறியும் இறைநிலை அடைய வேண்டுகிறேன்.

நன்றி சிவசித்தனே!பெயர்   : க. நீ. ஜெயச்சந்திரன்

வாசியோக வில்வம் எண்  : 14 09 003

வயது : 45