உடம்பு :

உடம்பு :

#Sivasithan (16) 

  • உடம்பை நிலைநிறுத்தினால், பிராணனை வாசியாக மாற்றி ஞானத்தை பெற முடியும்.

 

  • அழியும் உடம்பை அறியும் வழி சிவசித்தரின் வாசியோகமே.

 

  • உண்ணும் உணவின் கழிவுகளே நம் உடம்பை அழிக்கிறது.

 

  • உடம்பு கழிவுகள் தேங்கி அழிவதை உணர்த்துவது அணுக்களே.

 

  • உடம்பு அழியும் நிலையை உணர்த்தும் அணு.

 

  • அழியும் அற்ப உடம்பு என்று நினையாதே. உடம்பே ஞானத்தை பெறும் வழி. அவ்வழி வாசியே.

 

  • அழியாத அணுவை பெற்றவனுள் அண்டமும் இயங்கும்.

 

  • கழிவு அகற்றிப் பார். அணுவின் துடிப்பால் வாசியின் நிலை அறிவாய்.

 

  • வாசியே அணுவின் கூறு. அணுவை பிளந்து வாசியால் உடம்பை நிலை நிறுத்தலாம்.

 

  • வாசியின் நிலையால் அணுவின் நிலையை உணரலாம். அணுவின் நிலையால் உடம்பை உணரலாம்.