‎சுவாசம் ஆனவனே, வாசியானவனே, என் அவனே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே!
‎சிவசித்தன் திருநாமம் எழுதி உணர்ந்தவை.

20131206_070413_1

சிவசித்தனே,
உன் திருநாமம் அதை
எழுத்தாய் வடிக்க வடிக்க
அகம்
வெற்றிடமானதே!

வெற்றிட நிலை அதில்
உன் திருநாமம் அதை எழுதியே
‎காற்றும் ‎வாசியும் உடல் அதில் செயலாவதை
உணர்ந்தே,
கழிவான வாய்வு ஏப்பமாய் உடல் பிரிந்தே
தேகமானதே!

‎தேகம் ஆன ஆலயத்தில்
‎அகம் எனும் கருவறையில்
உன்னை எண்ணியே உன் திருநாமம் ‎எழுத
என் வல கை பாரமாய் ஆனதே
‎நெற்றி ‎சுளிமுனை இயக்கினாயே!

‎மொழி அது எழுத்தின்
வடிவிலும் உன்னை உணர்கிறேன்
‎சிவசித்தனே!
‎சுவாசம் ஆனவனே,
வாசியானவனே,
என் அவனே!

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

“அனைத்தையும் விட்டுவிடு”

அனைத்தையும் விட்டுவிடு

 

d (155)அனைத்தையும் விட்டுவிடு – சிவசித்தன்

வாசி உணர அனைத்தையும் விட்டுவிடு

வாசியில் நீ கற்ற எதுவும் உண்மையாகாது…

வாசியில் அரிதாரம் பூச முடியாது…

வாசியில் அறியாமைக்கு இடம் கிடையாது…

வாசியில் உண்மைக்கு பலனுண்டு…

வாசியில் பழையன கழிதலே முதல்நிலை…

வாசியில் எதனோடும் எதையும் ஒப்பிடாதே…

வாசியில் சிவசித்தனின்றி செயல்பாடில்லை…

வாசியில் சூட்சுமம் கிளறினால் சூடுபடுவாய்…

வாசியில் விதிமுறையால் முறைப்படுத்தப் படுவாய்…

வாசியில் ஒழுக்கமே உண்மை உணர்த்துமே…

வாசியில் நீயே உண்மையில்லை என்றுணர்வாய்!

வாசியில் நீயாய் நின்நிலை யறிவாய்!

வாசியில் நின் தேகம் நித்தம் மலர்வாய்!

வாசியில் உன் உடல் மெலிதல் உணர்வாய்!

வாசியில் உன் உண்மை சுவாசம் காண்பாய்!

வாசியில் உன் அகம் அகமாவது உண்மை!

வாசியில் உன் உடல் உடலல்ல என்றுணர்வாய்!

வாசியின் உன் உயிர் உன்னுள் தெரிவாய்!

வாசியிடம் உண்மை இல்லையெனில் உன்னையும் வெளியேற்றும்!

 

 

   “அனைத்தையும் விட்டுவிடு

        சிவசித்தனிடம் – அவன்

   அனைத்தையும் காட்டுவானே

        சிவமாய் உன்னுள்”

 

 

சிவகுரு சேவையில்,

ந.இராமச்சந்திரன்

வாசியோக வில்வம் எண் :1312019

+919790447079

சிவசித்தரின் பாமாலை|001|

சிவகுருவே சரணம்

எட்டெட்டு அகவையிலே
எழுதுகிறேன் என் உள்எண்ணமதை
ஓரெட் டெடுக்க இயலாத முடமாகி
தவழ்ந்தேன் நாற்காலில்
இருகாலும் புண்ணாகி முன்னொருகால்

கர்ம வினையோ
செய் வினையோ
எவரெவர் இட்ட சாபமோ
ஏழரைச் சனியின் ஏவலோ
எம்மாதின் கும்பி கொதிப்போ
என்றென்னை கண்மறைந் தேளனம் செய்தனர்.

அங்கமெல்லாம் நொந்து புண்ணாகி
மெய்யெல்லாம் (துர்)நீர் வடியத்
துவண்ட எனை எமனவனும் துரத்த
நம்பி வந்தேன் எம் சிவகுரு
சிவகுரு சிவசித்தரே சரணமென்று
தஞ்ச மடைந்தேன் சிவஒளித் திருத்தலம் தனை

காலால் தாங்கினார்
காலை உணர்த்தினார்
‘கரி’ காலனாய் வந்த என்னை
பொன் காலனாய் மாற்றினார்
பொன், மண், பெண் மூவாசை போக்கினார்
பலரைத்தொழும் புண்ணியனாய் ஆக்கினார்
வேலா யுதனாய் காலனையும் விரட்டினர்
ஆதலின்,
சிவகுருவே என் நாடி
சிவகுருவே என் சுவாசம்
சிவகுருவே என் நரம்பு
சிவகுருவே என் குருதியோட்டம்
சிவகுருவே என் ஆன்மா
சிவகுருவே என் பரமான்மா
சிவகுருவே நட்சத்திரங்கள், நவகோள்கள்
சிவகுருவே சூரிய, சந்திரர்
சிவகுருவே பிரபஞ்சம்
சிவகுருவே என் ஈசன், என் இறை.
சகலமும் சிவகுரு சிவசித்தரே
சர்வமும் சிவகுரு சிவசித்தரே
அனைத்தும் சிவகுரு சிவசித்தருள் அடக்கம்.

குரு வழிபாடு தேவையா?
குருவின் பாதம் தொடலாமா?
குருவும் இறையும் ஒன்றா?
என்பவருக்கு,
சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் பயின்று பார்!
சிவகுரு சிவசித்தரை உணர்ந்து பார்!
உயிரற்ற ஊனுடலில் வாசியேற்றிப் பார்!
சிவபரவொளி நெருப்பாற்றல் சக்தியை சரணடைந்துப் பார்!
குரு வென்பாரெல்லாம் உணர்த்தவில்லை
உணர்த்துபவரே, பாமரனையும் உயர்த்துபவரே
ஒரு நாமமாய், ஓருருவாய்
ஓரிறையாய்
உன்னுள் உறைவார்! உணர்ந்துப் பார்!
****************************************************
M.G.கல்யாண சுந்தரம்
வி.எண்: 11 02 001