நீ கொடுத்த ‎உயிர்மெய் மொழியின் எழுத்தாய் வரைந்தேனே!

வணக்கம் சிவகுருசிவசித்தனே,
‎சிவசித்தன் திருநாமம் எழுதிய உணர்வுகள்,

20131212_112435

சிவசித்தனே,
உன் ‎திருநாமம் அதை அகம்உணர்ந்து
பொறுமையாய்
நீ கொடுத்த ‎உயிர்மெய் மொழியின்
எழுத்தாய் வரைந்தேனே!

பலதிசையில் சென்ற ‎எண்ணம்
அதை ஒன்று திரட்டியே, உன் திசையில்
எண்ணம் அற்று வரைந்தேனே
உன்னை எண்ணியே!

சிவசித்தனே,
எத்தனை முறை எழுதினேன் என்பது
முக்கியம் இல்லை,
என்று புரிந்துகொண்டேன்
எந்த அளவு உணர்கிறேன்
‎உண்மை உயிர்உணர்வின் ஆழம் அதை
அன்பெனும் நம்பிக்கை கொண்டு
ஒவ்வொரு எழுத்திலும்
எவ்வளவு ஆழம் உன்னை உணர்கிறேன்
என்பதையே நோக்கி பயணித்தேனே!
இறை ஆற்றல் அதை பாரமாய்
வலக்கை அதில் உணர்ந்தேனே
‎நெற்றி சுளிமுனை இயக்கினாயே
தலையின் பின்புறம் அழுத்தம் உணர்ந்தேனே
கண்கள் அது சொருகியே
உன் நினைவை உன் திருநாமமாய்
வடித்தேனே!

வடித்தே,
உன்னை ‎இறைஉணர்வாய்,
‎அகம் ‎தேகம் அதில் உணர்ந்தே,
அகநிறைவு காண்கிறேனே!
‎அன்பே சிவசித்தன்!

‪சிவசித்தன் திருநாமம் எழுதினேன் உணர்ந்தேன்.
சிவசித்தன் திருநாமம் அதை அகம் அதில் ஓதியவண்ணம் எழுதி,

தேகஉணர்வுகளை முகநூலில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

‎நன்றி சிவகுருசிவசித்தனே!

“ஒருவனாய் தனித்து உள்ளொளி அறிந்த”

322

சுயம்புவாய் உருவான எங்கள் சிவகுருவே

சுயம் தனில் நிலைத்து

சுளிமுனை அறிந்து

சுடரொளி உணர்ந்து

பரம் தனில் நிலைத்து

பரவொளி அறிந்து

பண்ணிசைப் பாடி

பரமனை உணர்ந்து

முத்தொழில் செய்து

மூவரும் ஆகி

நான்கதில் நலமதை உணர்த்தி

ஒருவனாய் தனித்து

உள்ளொளி அறிந்த

எங்கள் சிவகுருவே

“சிவகுரு சிவசித்த பேரொளியான்”

************************

 

வைகறையில் வந்திட்டோம் ஸ்ரீ வில்வம் யோக ஒளித்திருத்தலமதிலே

சிவகுரு அருளிய மந்திரமதை முறையாக சொல்லி

மூலமதை அறிந்திட்டோம்!

பயிற்சிகள் பல செய்து, உடல் கழிவதை அழித்திட்டோம்!

உடல் பிணி அகன்று உள்ளமதில் உயர்ந்திட்டோம்!

பெருவாழ்வை நல்கிய சிவகுருவை உணர்ந்திட்டோம்!

பேரின்பம் அருளிய சிவகுருவை பொன்னேட்டில் புகழ்ந்து

புதுக்கவிதையாய் கொடுத்திட்டோம்!

சிவகுரு நல்கிய வாசியால் நலமனைத்தையும் பெற்றிட்டோம்!

நாடு தோறும் நலம் பெற நம் சிவகுருவை வேண்டி

வந்தனை செய்து வாழ்ந்திட்டோம்!

 

************************

சிவகுருவின் வாசியால்

உண்மையில் விழித்து

ஊனதனை அறிந்து

ஊனமதை போக்கி

உயிர்தனை பெற்று

உண்மைதனில் நிலைத்து

உயிர் ஒலி அறிந்து

உள்ளொளி பெருக்கி

உளம் தனில் நின்ற – எங்கள் சிவகுருவே

“சிவகுரு சிவசித்தன்”

 

**********************

 

சிவமாய் தனித்து சிந்தையில் உணர்ந்து

தவமாய் இருந்து தன்னொளி அறிந்து

வரமாய் பெற்ற வாசியோகத் தலைவனே!

உருவாய் வந்தாய் உண்மையாய் நினைப்போருக்கு!

உளமாய் தந்தாய் உண்மையில் நிலைத்தோனுக்கு!

உள்ளொளியால் நின்றாய் உண்மையாய் உரைத்தோனுக்கு!

 

சிவகுருவின் பக்தை,

K.B.சுபாசினி

வாசியோக வில்வம் எண்: 13 02 106

வாசியை உட்புகுத்தி வாழ்வில் வளம் வந்ததே !!

சிவகுருவே சரணம்

605

சிவகுரு சரணம் !!!

சிவகுருவே சரணம் !!!

சிவகுரு தாள் சரணம் !!!

மானிட உருவம் எடுத்தவரே !!!

ஐம்பூதங்களின் நடுவே !!!

சிம்மாசனம் கொண்டவரே !!!…

 

வாசியோகம் பயின்று

கழிவகற்றி மனிதனாய்

உயிர் பெற்று வாழ்ந்தோமே !!

வாசியை உட்புகுத்தி

வாழ்வில் வளம் வந்ததே !!

சிவகுரு மந்திரம் சொன்னால்

உடலினில் ஆட்டம் வந்ததே

ஒளித்தளம் கண்டோமே !!

சிவகுரு என சொன்னால்

தடை பல நீங்குதப்பா !!

சிவனது உருவம் கண்டால்

சிவகுரு சிவசித்தரே காட்சியளித்தாரே !!

சரணம் சரணம் சிவகுரு சரணம்

சிவகுரு பாதம் பணிந்தோம் !!!!………….

 

 

என் அக எண்ணங்கள்

எண்ணற்ற எண்ணங்கள்

கானல் நீர் ஆக ………..

என் மனத்தீமை அழிய வாசி கற்க வந்தேனா

கழிவகற்றி சிவகுரு காண வரம் பெற்றேனா

உயிர் பெற்று சுளிமுனை சுட்டதப்பா

சிவகுரு அருட்சொற்கள்

எண்ணம் தன்னை மாற்றுதப்பா

ஒளி ஒன்று கண்டேணப்பா

சிவகுரு அருளியதப்பா

 

 

சிவகுருவின் பக்தன்….

                                                ச.வினோத்கண்ணன்

                                                வில்வம் எண்- 1307020

Sivasithan Vaasiyogam July 07, 2014 at 01:24PM

சிவகுரு சிவசித்தர் அருளும் இறைநிலை:

* வாசியோகப் பயிற்சியில் முதல் ஐந்து கழிவுகள் வெளியேறிய பின் அடுத்தகட்ட கழிவுகள் வெளியேறும்.

* அக்கழிவுகளின் வெளியேற்றத்தினை உணர்ந்து செயல்பட சிவகுரு சிவசித்தர் நமக்கு உறுதுணையாய் இருப்பார்.

* அந்த முக்கியமான பிரபஞ்ச கழிவுகள் நம் உடலிலிருந்து வெளியேறிய உடன் நம்மால் நம் உடலையும், உடலுள் ஏற்படும் அதிர்வலைகள், புருவமத்தி (சுளிமுனை) உணர்தல் போன்றவை வெளிவரும்.

* இந்நிலையில் நாம் சிவகுரு சிவசித்தர் கூறும் அனைத்து விஷயங்களிலும் கவனம் மேற்கொண்டு வாசியோகப் பயிற்சிகள் செவ்வனே செய்ய வேண்டும்.DSC00266

* அப்படி செய்யும்போது நம்மால் சிவகுரு கூறும் குறிப்பிட்ட இடங்களிலெல்லாம் உணர்வுகள் செயல்படுவதை ஆதாரங்களாக உணரலாம்.

* இத்தகைய நிலையிலும் நம்முள் நிதானமாக இறைநிலை புகட்டி அதற்கு அடுத்த நிகழ்வுகளுக்கு நம்மை இயற்கையாய் தயார் செய்கிறார்.

* இறைநிலை எட்டியோர் இயற்கை உணரும் நிகழ்வுகளை சிவகுரு சிவசித்தரின் புத்தகங்களில் காணலாம்.

சிவசித்தரின் பாமாலை|007|

சிவகுருவே சரணம்

DSC079401. கோல் ஏந்தும் கொற்றவரே! நில் கால் வாழ்கவே!
நின் செங்கோல் “காலாகி” பரத்தை அடைந்ததோ!
பரத்தை அடைந்ததினால் பரம்பொருள் ஆனீரோ!
நம் கோலுக்குள் நின் காலேற்றும் – சுடரொளியே,
நம் கோலுக்குள் நின் காலேற்றி இட, வலத்தை பிரித்து அறிந்தீரோ!
தீயதைக் கண்டு அதைக் களைந்து எடுத்தீரோ!
நம் கோலுக்குள் நின் காலேற்றியதால் “நான்” என்று ஆனீரோ!
நின் காலால், நம் கோலும் “நான்” ஏறியதோ!

2. ஒவ்வொரு ஆதாரமும் செயல்படுவதும் உம்மாலே!
உள் உறுப்புகள் இயங்குவதும் உம்மாலே!
கழிவுகள் அகழ்வதும் உம்மாலே!
உடல் உயிர் பெறுவதும் உம்மாலே!
உண்மை அறிவதும் உம்மாலே!
சுளிமுனை இயங்குவதும் உம்மாலே!
சுடரொளிப் பரவுவதும் உம்மாலே!
இயற்கையை அறிவதும் உம்மாலே!
இறைவனை உணர்வதும் உம்மாலே!

3. ஆதாரங்கள் பல உணர்த்தும் எங்கள் சிவகுருவே,
எங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவா!
அனைத்தையும் விட்டு விடு என்றாய்,
ஆதியும் அந்தமும் நீயாகினாய்!
அன்பே சிவம் என்றாய்,
அன்பால் படைத்தாய் புத்துலகை!
அறம் வளர்த்தாய் – எங்கள் இல்லறமும் நல்லறமே!
மெய்ப் பொருளை மெய்யாய் உணர்த்தும்,
– மெய் கண்ட சிவனாரே!

4. மெய்யினுள் மெய்யை வைத்தாய்!
மெய்யாய் இருப்பவனுக்கு வாசி தந்தாய்!
வாசியால் அனைத்தும் பெற்றோம்
(அறம், பொருள், இன்பம், வீடு)
வாசியால் மும்மலத்தையும் இழந்தோம்.
(ஆணவம், கன்மம், மாயை)
வாசி வழி நடத்திச் செல்ல
உன் திருவடி பணிந்தோம்.

சிவசித்தரின் பாமாலை|003|

 

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்sivssiththan 2  (7)

 

அடிமனதில் எழுகின்ற தேவையற்ற ஆசைகளும்

சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கூடத்தின்

படியேறி குருபாதம் தன்னை பணிந்து

பணியும்போது ஆழ்மனது நிறைவுற்று பேரானந்தமது

மனதிலே நிலவுமே ! நித்தம் நித்தம்

காணும் உண்மையன்றோ ! ஸ்ரீ வில்வ குருகுலமதிலே !

 

**********************

 

சிவகுரு சிவசித்தன் உரைக்கின்ற ஒவ்வொரு

வார்த்தையும் ஆழ்மனதில் இருந்து வருகின்ற

உண்மைக்கூற்றே ! உயிர்க்கலையை

பயின்று வாசியை உணர்ந்தவர்க்கு உளமது

சமாதானம் ஆகுமே ! மனநிறைவும் வந்திடுமே !

நிலைமாறும் மனமதுவும் நிறைபெற்று நின்றிடுமே !

சிவசித்தனின் வாசிகலை பயில்பவர்க்கே !

 

**********************

 

வாழ்விலே வரும் உயர்வையும் தாழ்வையும்

சமமாக பாவித்திடுவான், வாசியோகம்

பயின்றவர். சிவகுரு சிவசித்தனின் ஓர்

அறிவாம் வாசியினை உணர்ந்தவர்க்கு

உள்ளமான ஆழ்மனதில் அமைதியானது

எந்நாளும் நிலைத்திடுமே !

**********************

 

அணுவுக்குள் அணுவாய் அணையா விளக்காய்

சுளிமுனை எனும் சிவஜோதியை நெற்றியிலே

மிளிர வைத்த சிவநேசனே ! வாசி அருளும்

சிவசித்தனே ! சிந்தையிலே சிதறுகின்ற

எண்ணமதை நிலைநிறுத்தி ஆழ்மனதில்

அமைதிதனைத் தந்தருளும் சிவகுருவே போற்றி ! போற்றி !

சிவகுருவின் பக்தன்

 – ம. சண்முக பாண்டியன்,

சிந்தாமணி,மதுரை. 

 

சிவகுரு சிவசித்தரின் பாடல்கள்

sivasiththan (june92013) (20)

வாசியோகப் பாடல் : 3

குருவே சிவகுருவே சரணம் !

 

குருவே சரணம் ! சிவகுருவே …. சரணம் !

சரணம் குருவே ! சிவ சிவ சரணம் குருவே ! ….

குருவே சரணம் ! சிவ உருவே சரணம் !

சரணம் சரணம் ……. சுவாமி சிவகுருவே சரணம் !

 

சிவமே குருவாய் என்றும் அருள்தாய் வரமும்

என்றும் நலமாய் வாழச்செய்தாய் எனையும்

கண்டேன் உணர்ந்தேன் தாழ்பணிந்தேனே !

சரணம் சொல்லியே தினம் துதித்தேனே !

(குருவே சரணம் ! சிவகுருவே …. சரணம் !)

 

உலகம் இழிந்து தினம் தினம் அழிந்தபோதும்

வாழ வழியாய் எம்மை ஆளும் சிவமே !

குறைகள் என்ற மக்கள் உம்மை அடைந்து பெற்ற மோட்சமே !

சரணம் குருவே ! சிவசிவ சரணம் குருவே !

உம்மை யடையா போது ஏது இந்த மோட்சமே !

மனவலியில் உள்ள போதுமுண்டு உம்மில் நாட்டமே !

      (குருவே சரணம் ! சிவகுருவே …. சரணம் !)

 

வாழ வழியின்றி வாழ்ந்தவர் எவரும் புதுவாழ்வுதனை

பெறுவார் குருவின் உருவினிலே !

 

இறந்தநிலையில் வாழும் மனிதர்க்கும் சுளிமுனை

என்னும் உயிரால் ஒளிரச் செய்திடுவாரே !

எம் குருவாம் சிவகுருநாதர்  ‘சிவசித்தர்’ அருளாலே !

      (சரணம் சரணம் ….. சுவாமி சிவகுருவே சரணம் )

 

– க. முகேஷ்.