வாசியின் உண்மை பேரானந்தம்…….

வாசியின் உண்மை பேரானந்தம்…….

 

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

 

ஏடறியா எழுத்தும்

உடலறியா உண்மையையும்

உண்மையான மலம் வெளியேற

என் அகத்திலே அற்புதன்

 

அக்னிதற்பரனின் ஆனந்த தரிசனம்

அதிகாலையில் கண்டேன்!

 

உடலின் முதல் அற்புதமாம்

உடல் மலம் வெளியேற தண்ணீரை

அருந்த உடல் சுத்தி மலம் வெளியேற

ஆரம்பமானது ஆனந்தம் அக்கணம் முதல்!

குளிர்நீரில் குளிக்க உடல் குளிர்ந்து

உள்ளமும் குளிர்ந்து புத்துணர்ச்சியாய்

புது நாளைத் தொடர்ந்தேன்!

 

சிவசித்தன் வகுத்த வாசிதேகப் பயிற்சியை

முறையாய் எண்ணிக்கை தவறா,

செயல்மாறா வாசியை அடிவயிறு வரை

அழகாய் அளவாய் உள்ளிழுக்க

உள்ளக் கழிவும் பிறப்புக் கழிவும் வெளியேறுதே!

 

வாசிதேகப் பயிற்சிக்குப் பின்னர் சிவசித்தனால்

உருவாக்கப்பட்ட கட்டளையாக கருவேப்பிலை,

கொத்தமல்லி, புதினா இலைகளை நாள்மாறி உண்டு பின்

வெங்காயம் ஐந்தும் உண்ண உடலின்

நீர்க் கழிவுகள் சிறுநீராய் வெளியேறுதே!

 

சிவசித்தனால் நிர்ணயிக்கப்பட்ட உணவு நேரங்களான

காலை எட்டரை, மதியம் ஒன்றரை,

இரவு எட்டரை என கணம் மாறாமல்

சிவசித்தனால் அறிவுறுத்தப்பட்ட உணவை உண்டு

உணவு செரிக்க உன்னதம் கண்டேன்!

 

ஒன்னரை மணி நேரத்திற்கு ஒரு முறை

இருநூறு மில்லி தண்ணீர் அருந்த உன்

உடலில் உணவு தேங்காமல் திரவமாய்

இருந்து மலமாய் எளிதாய் வெளியேறுமே!

 

சிவசித்தனின் வாசிதேகப்பயிற்சிக்கு

முன்னும், பின்னும் சிவசித்த மந்திரமுரைக்க

உள்புதைந்த உண்மை சர்ப்பமாய்

சரீரத்தில் உண்மை ஆட்டத்தால் வெளிப்படுதே!

 

பிறப்பின் நோக்கமறியா நெஞ்சங்களை

பிறப்பின் உண்மையை உடலிலே உணர்த்தி

தன் வாசியின் உண்மையால் பேராற்றலை

உணர வைத்து பேரறிவால் பாரினில்

புதிய படைப்புகளை படைப்புலகத்தில்

படைத்திட்ட படைத்தவனே! சிவசித்தனே!

 

ஆத்ம தரிசனமாய் நின் நாமம் உரைக்க

அழகாய் சுளுமுனையில் அற்புத ஆற்றலாய்

சுடர்விடும் ஒரு வலி என் உயிரின்

உண்மையை உணர்த்தி நெற்றி வழியே

நடுமுதுகில் கீழ் இறங்கி தொடைவழியே

என் கால் வலியாய் வெளிப்பட என்

சிவப்பரவொளியானின் சூரிய தரிசனம் என்

அகத்தே கண்டேன்! உண்மை உணர்ந்தேனே!

 

அருளாளனே! என் பிணியகற்றி

என் உயிர் பசியைப் போக்கி

என் தேக உண்மையை உணர்த்தி

என் பிறப்பை உணர்த்திய நின்

பாதம் சரணடைகின்றேன்!

 

தடுத்தாட்கொண்ட தென்தமிழன் சிவகுருசிவசித்தனே!

 

வேறெதுவும்  தேவையில்லை என் சிவசித்தன் போதும்!

‘ச’கரக் கவிகள்

சிவசித்தரே
சக்கரவாளம் சஞ்சீவனி சகலமும் சுட்டாலே
சங்கதமுண்டு சுட்டாலும் சங்கற்பம் – சங்காரம்
சகசமே சதாவெல்லும் வாசியே சகாமியம்
சகலமும் வாசிகூறும் சச்சிதானந்தரே
– மலைகள் தேடி அலைந்து உயிர் மருந்தாம் சஞ்சீவி அடைவர். அதைவிட உயர்ந்ததெங்கள் வில்வத்தின் கலை. ஆம்! வில்வத்திற்கும் மனஉறுதிக்கும் தொடர்புண்டு. இயற்கையான பிரபஞ்ச அழிவை எப்போதும் வெல்வது வாசியே, பயனை விரும்பி நீ முழுமையாய் செய்யும் வாசியோகமே எல்லாம் – என்று உணர்த்திய முக்குணங்கள் (உண்மை, அறிவு, ஆனந்தம்) நிறைந்த ‘முழுமுதற்கடவுளே’

sivssiththan 2  (25)சிவசித்தரே
சாகித்யம் சாகை உணர்த்தா சாத்திரம்
சால்புபெற சால்புளி சாம்பன் – நாடியும்
சாவாமருந் துணர்த்தா சாரூப்பிரம் சாகபட்சிணியே
சாசுவதம் கூறும் வாசி
– செய்யுளும் வேதமும் உணர்த்தாத அறிவுக்கலையை மேண்மை குணம் பெற முறைப்படி எம்பெருமானை வேண்டியும், அமிர்தமே உண்டாலும் அடைய முடியாத கடவுள் நிலையை – நிலையான தன்மையை சைவ உணவும் வாசியோகமும் உணர்த்துமே…

சிவசித்தரே
சிரையும் சிலேட்டுமமும் சிதைத்த சதையை
சிதல் சிதறி சித்தப்படுத்திய – மரணத்தை
சித்தி சித்தம் சித்து செய்து
சிரஞ்சீவீ ஆக்குவீர் அட்டபரிபாலராய்
– இரத்தத்தை இருதயத்திற்கு எடுத்துச் செல்லும் நரம்பைக் கூட சிதைத்த்து சளி, கரையானாய்ப் படர்ந்து மரணத்தை நெருங்கியவரை நின் நல்ல மனத்தால் கை கொடுத்த தெய்வீக சக்தியாம் அறிவால் நீண்ட ஆயுள் கொடுத்து நல்லோரைக் காத்தீரே…

சிவசித்தரே
சீமைச்சரக் கென்று சீர்கேடு தரும்சீக்கு
சீலம் தொன்று சீரணி – யிழந்து
சீவாத்மா தேடி சீக்குசீவீ சீதளம்தர
சீவன்முக்தி தாரும் சிவசித்தரே
– நம்மிடம் இல்லாததை, எதைக் கண்டோம் அயலோரிடம், அதைக் கண்டு பல வருடங்களி சீர்கெட்டு, நோய் கொண்டு, ஒழுக்கம் தொலைந்து, உணவு செரிக்காமல் போய், ஜீவ ஆத்மாவை தேடி, ஓடி, நோய் தீர்க்கவும்.. உடல் குளிர்ச்சி பெறவும்.. இம்மை நீக்கி முக்தி பெறவும் உம்மை நாடுகின்றோம் சிவசித்தரே

சிவசித்தரே
சுணங்கி ணோம் சுகாதாரம் சுட்சமானோம்
சுகிர்தத்தால் சுக்கில மாம்சுடர் – கொடுத்தவா
சுடர்விடும் சுப்பிர தீபமாம் வாசி
சுயசார்பாய் மாறினோம் சுயம்பே
– சோர்வோடு சுத்தமிலாதவராய் குறைபாடோடு நின்னைச் சரணடைந்தோம். நின் நற்செயலால் வளர்பிறை ஒளி ஊட்டினீரே! ஒளி வீசும் கூரிய அறிவே! வாசியென்று எங்களை எங்களையே நம்பவைத்த சுயம்புவே நீர் எங்கள் இயற்கடவுளே!

சிவசித்தரே
சூதகம் சூழும் சலனங்கள் இயற்கையே
சூல் சூத்திரம் அதன்சூக்குமம் – இயற்கையே
சூத்திரம் சூழ்ந்து சூடனாய் ஒளிகூட்டி
சூட்சுமம் சூட்டிய வா
– மாதவிடாயால் ஏற்படும் உடல் மாற்றங்களும் வியாதிகளும் இயற்கையை உதாசினப்படுத்தியதன் விளைவே என்றும், கர்ப்பத்தின் நுண்மையும் இயற்கையே எனும் உண்மையறியாமல் உழலும் மக்களுக்கு, அதன் உண்மையை இயற்கையாய் வாசி மூலம் கற்பூரமாய் அறிவு நுட்பத்தை உணர்த்திய சிவசித்தருக்கு நன்றி.