இருவழியின் செயல்பாடுகள் அறிவித்து அதை சீராக்கி செம்மையாய்…

“சிவகுருவே சரணம்”

 

இருவழியின் செயல்பாடுகள் அறிவித்து அதை சீராக்கி செம்மையாய் இயங்க வைக்கும் எங்கள் “சிவகுருசிவசித்தனுக்கு” சமர்ப்பணம் இவ்விருவரி பாடல்கள்…

‘ஞ’ வரிசை

_____________

#Sivasithan (8)

ஞயமாய் சொல்லும் செயலும் ஒலிக்கும்

அணுக்களில் சிவசித்தன் வாக்கதுவொலிக்க.

 

ஞண்டதைப் போலெமைக் கவ்விய நஞ்சாம்

மருந்தெனும் மாயை விரட்டினார் சிவகுருசிவசித்தனே.

 

ஞத்துவம் ஏதுமின்றி மாக்களாய் இருந்தவெமக்கு

மடிக்கழிவகற்றி மனிதமுணர்த்துவார் சிவகுருவே”

 

ஞமலிபோல் பரவசமுணர்வர் ஞவல்போல் ஒளிர்வர்

ஆடலுமாற்றலும் அறியும் சிவகுருபக்தரே.

 

ஞஞ்சும் நீங்கும் பேரோளியானின் வாசிவழி

நஞ்சாம் உடற்கழிவு அகலும்போது.

 

*ஞயம் – இனிமை; ஞண்டு – நண்டு; ஞத்துவம் – உணரும் தன்மை; ஞஞ்சு – மயக்கம்

 

*****************************************************************

 

ஞாதிரு அறிவிப்பார் சிவகுருவே சீவனது

சிறப்பாய் வாசியதை சிந்தையிலேற்ற

 

ஞாயம் அறிவர் ஞானம் அறிவர்

ஞானசித்தனிடம் ஞானதீட்சை பெற்றபக்தரே.

 

ஞானார்த்தம் அறிவர் ஞானானந்தம் உணர்வர்

சிவகுருவருள் பெற்ற பக்தரே.

 

ஞானசரீரமது கிட்டும் ஞாயமாய் சிவசித்தன்

உணர்த்தும் உடலொழுக்கம் பின்பற்ற.

 

ஞானப்புதல்வரே ஞானானந்தனாம் சிவகுரு திருவருள்

தினமுணரும் குருகுல வாசிகளே.

 

* ஞாதிரு – ஆன்மா, ஞானசரீரம் –உண்மை அறிவுமயமான சரீரம், ஞானம் – அறிவு; ஞாயம் – நியாயம், ஞானசித்தன் – உண்மையறிவு கைவரப்பெற்றவன்,

ஞானதீட்சை – ஞான உபதேசவகை; ஞானார்த்தம் – மெய்ப்பொருள்; ஞானானந்தம் – பேரின்பம் ; ஞானானந்தன் – கடவுள்; ஞானப்புதல்வர் – மாணாக்கர்.

 

********************************************************************

 

ஞிமிறுகளாம் சிவகுருகுல பக்தர்களே வாசியெனும்

தேனைநாளும் தன்கூட்டில் சேர்ப்பரே.

 

ஞிமிர்தல் அறிவர் ஐம்பூதங்களிலும் ஐம்பொறிகளிலும்

பொறியாளும் பேரோளியானின் ஒளிதொடர்வோர்.

 

ஞிமிறின் சுவை சுவைக்கும்போது வாசியின்வாசம்

நாசியிலதை தினம்முறையாய் ஏற்றும்போது.

 

ஞிமிர்வர் பக்தரே சிவசித்தன் மந்திரத்தை

மனமது வாசியின்மணமதை உணரவே.

 

ஞிமிர்வர் பக்தரே மும்மந்திரத்தை மும்மலமது

பேரோளியானின் பேரருளால் நீங்கப்பெறுவதற்காய்.

 

ஞிமிர் – ஒலி: ஞிமிறு – தேனீ

 

********************************************************************

 

ஞெமிர்த்தி ஞெமிர்தலாகி ஞெப்தி நிறைக்கும்

வில்வநாயகன் உணர்த்தும் விசையதுவே.

 

ஞெரலாய் சிவசித்த மந்திரம் உள்நுழைய

உயிரொளி அறிவர் பேரொளியான்பக்தரே.

 

ஞெள்ளுவோம் சிவசித்தன் விதிக்கும் உண்மைகளுக்கு

உயிரது உன்னதம் உணர.

 

ஞெமர்தலாய் உள்நிறையும் வாசியின் வாசம்

வாழ்வுணர்த்தும் இயல்பாய் இயற்கையாய்.

 

ஞெள்ளுமை பெறுவோம் பக்தரே சிவசித்த

திருவருளால் அழுக்ககற்றி அழுக்காறகற்றி.

 

ஞெமிர்தல் – நெரித்தல், ஒடித்தல், அழுத்துதல், ஞெப்தி _ அறிவு,நினைவு,

ஞெரல் – ஒலி; ஞெள்ளுதல் – உடன்படுதல்; ஞெமர்தல் – நிறைதல்; ஞெள்ளல் – மேன்மை

********************************************************************

 

ஞேயம் வெளிப்படும் வெம்மையும் வெண்மையும்

உண்மையின் ரூபமாய்உள் நின்றியங்க.

 

ஞேயம் உண்மையின் ரூபத்தில் உணர்வர்

சிவசித்தபேரொளியான் திருவருள் பெற்றோரே.

 

ஞேயமாய் சிவகுரு உருவெடுப்பார் கழிவகன்று

கருமையும் வெண்மையுமுணரும் பக்தரெண்ணத்தில்.

 

ஞேயமே சிவகுரு அகமே ஆலயம்

பூஜிப்பர் பக்தரே ஊன்வழி.

 

ஞேயமும் பக்தியும் வெளிப்படும் பக்தரவர்

கண்ணீரெனும் உண்மையின் சொரூபம்வழி.

 

ஞேயம் – அன்பு, கடவுள்

*****************************************************************************

சிவகுரு சிவசித்தரின் பாடல்கள்

 

வாசியோகப் பாடல் : 2

சிவகுருவே சரணம் ! 

sivssiththan 2  (11)காணுலவும் நாள்பல கண்டிராத உன்னதமாய்

கண்டபின் மெய்சிலிர்க்கும் உண்மையாய் உலவும்

கண்கண்ட உண்மைதனை நம்பறியா செயல்தனை

கண்முன் காட்சிக்கனையாய் முன்நிறுத்தி

மெய்ப்பிக்கலானார் ‘சிவசித்தர்’ சிவனருளாலே !

 

*********************

 

சிவகுருவே சரணம் !

 

வானதனில் நானிருக்க தேடாதீர் பூமிதனில்

உனதுலகம் பூமியல்ல உன்னுள்ளம் எனதுணர்த்த

நானாய் வராது உருப்பித்தேன் என்னருளாய்

உனதுலகம் தூய்மையாய் ஐங்கழிவகற்றி சுற்றிவரும்

பூமியாய் உன்புருவில் சுழல்தெரிய – நானடக்கமும்    

உன்னுடலில் வெளிக்கொணர உயிர்ப்பித்தேன்

என் சீடனாம் சிவத்தை சிவசித்தரை !

என்னுமுறையால் மொழிகிறார் சிவபிரானே !

 

*********************

 

சிவகுருவே சரணம் !

 

வாசியெனும் ஈரெழுத்திலோடும் உயிர்த்துடிப்பு

நாசிவழி இருபுரு நடுதலின் நாதன்தன்

இயல்பினால் மேலேறி உள்ளனைத்தும்

ஒன்றாக்கி; துடிப்பதனில் சீராக்கி

எண்ணத்தை ஓராக்கி ! செயலதனை

மெய்யுணர்வாய் ஊட்டும் உருவம் !

மனிதுனுமாய் யாவர்க்கும் ஆசிதனை

அருளிய சிவகுருவாம் சிவனுருவம் !

எம்குருவாம் சிவசித்தன் தாழ்பணிந்தேனே !   

 

*********************

 

சிவகுருவே சரணம் !

 

பொய்யுரையை மெய்பிம்பமாய் பொய்ப்பிக்கும்

மானிடரையெல்லாம் வாயுரையாய் வாழ்த்தி

தினம்தொழுது தாழ்பணிந்து வணங்கினபோதும்

இறையுணர்வை தான்தேடி தினமோடும்

தன்னதனை யுணரா பித்தனாய்வாழ

வழியின்றி திரிந்தோரையும் கண்டெடுத்து

நாள்குறித்து தன் கையாசிதனில்

உயிரூட்டி, வாசிதனில் நிலைநிறுத்தி,

ஊசிநூலாய் உட்புகுந்து மாசெனும்

நோய்களைந்து உள்வேசம்பல

வெளியேற்ற வழிகண்டு அவ்வழியினதாம்

ஆசனம் உரைத்து உடல் நெறிதனை

காலில் கட்டுகிறார் எம் குருநாதர்

சிவசித்தரவர்’ குருநாதர் ‘சிவனேசனவன்’ ஆசியினாலே ! 

– க. முகேஷ்.