வணக்கம் சிவகுருசிவசித்தனே!
என் தோழி – 006
கோட்டைக்கு மேல் கோட்டை கட்டி உன் அகஅறையை பூட்டிய சாவியை தொலைத்தாயோ!
அவன் உண்மையைப் அறிந்து கொள்ள யுகங்கள் வேண்டும் அடி,
அகம் அதில் உணர்ந்தால், நொடி போதும் அடி,
உன் அகம் உணர்ந்ததை கேட்டு செயல் படு அடி, என் தோழி!
இயற்கை உண்மையை எண்ணால் மறுக்க, மறைக்கமுடியாதடி,
என்னை எரித்தே இவ்வுளத்துக்கு வெளிச்சம் போட்டு காமித்தேனடி,
இதை விட எனக்கு மறைக்க எதுவும் இல்லை அடி, என் தோழி!
எங்கள் செயலுக்கு நாங்களும் இயற்கையும் காரணம் அடி,
எங்களை மட்டும் தண்டித்துக் கொள் அடி,
சிவசித்தன் சொல்லும் வாக்கும் அதுவே!
உன் கோபம் தனிக்க நாங்கள்
இரையாவோம் அடி, என்_தோழி!
எங்களைச் சேர்த்து வைத்த இயற்கையும் உன் சினத்திற்கு இரையாகும் அடி,
என் தோழி!
நன்றி சிவகுருசிவசித்தனே!