சிவசித்தரின் பாமாலை|007|

சிவகுருவே சரணம்

மனிதப் பிறப்பின் மகத்துவம்
அறியாத மனிதனே
அரிது, அரிது, மானிடராய்ப்பிரப்பதுஅரிது
என்பது சான்றோர் வாக்கு
ஆசையின் அளவறியது
பணம், பணம், என்று
நாயாய் அலைந்து, பேயாய்திரிந்து
பெட்டியை நிறைத்தாய் பணத்தால்,
உள்ளிருக்கும் உன் உயிர்
அழிவதை, அறியாத மூடனே
அதனால் இழந்தாய்
ஆயுளையும், ஆரோக்கியத்தையும்

சீக்கால் சீரழிந்து வந்தாய்
சிந்தாமணிக்கு, வாடிய
மலராய், வந்த உன்னை
வாசி என்னும், நல்ல
நீருற்றி, வண்ண
மலராய் பூக்கச்செய்தார்
வில்வத் தோட்டத்தின்
காவலராம், நாம் சிவகுரு சிவசித்தர்.