தனியே தான்தோன்றிய வாசியோடும் இயற்கையோடும்

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

உருமாறிய கோலம்
உண்மை உயிர் உரையும் காலம்
பலருக்கு காலால் காலனை அழித்தவன்
இன்று காலனை எதிர்நோக்குகிறானோ?

உண்மை அன்பே அறிவே உங்களுக்காகவே
வந்தவன் இன்று உங்களாளே….

மனஎண்ணமதை எரியுங்கள்
அகத்தே சிவசித்தனின் நினைவை எண்ணுங்கள்
உங்களுக்காக அவன் அன்றும் இன்றும் படும் துயர் உணருங்கள்!
அன்பினை எங்களுக்கு உணர்த்தியவன் அன்றும் இன்றும் அன்பிற்காக ஏங்குகிறான்.

தூயவன் விழியில்
துயராய் கண்ணீர்
ஆதவனான முகத்தே
மயான அமைதியாய் இருட்டே
தனியே தான்தோன்றிய
வாசியோடும் இயற்கையோடும்
அகஅரசிகள் இல்லா
சிவசித்த தனியானவனே!

நன்றி சிவசித்தனே!!!

காலனை காற்றால் மிரட்டும்…

சிவகுருவே சரணம்

sivssiththan 2  (39)

காலனை காற்றால் மிரட்டும்

சிந்தாமணியில் சிம்மத்தில்

உதித்த சிவசித்தனே சரணம்!

வேதனைகளை உன் வேதனையாக

ஏற்று உதவிடும் உத்தமனே சரணம்!

உலகம் உய்ய உதித்த உத்தமனே சரணம்!

கடைக்கண்ணால் கடைந்தெடுப்பாய் மெய்யை

உன் பார்வை பட்டாலே விளைந்திடுமே கோடி நன்மை

என்காலறிந்து என்வாசிமாற்றி என் செயல்

மாற்றி இன்பம் விளைத்திரும் குருவே சரணம்!

 

 

   வாசி வாசி என்ற உண்மை யறிய வைத்த சிவகுருவே சரணம்!

அக கழிவை காலால் அறிந்து நீக்கும் சிவகுருவே சரணம்!

வாசி உணர உண்மை உணர்ந்தேன் புதுமை உணர்ந்தேன்.

 

சிவகுருவருளின்றி செயல்பாடில்லை அறிந்தேன்

வாசியால் வாய்மை அறிந்தேன்.

 

சிவகுருவால் அறிவாய் மெய்நிலையே!

சிவகுருவால் அறிவாய் இறைநிலையே!

சிவகுருவால் பெறுவாய் நலமே!

சிவகுருவால் உணவு குறைத்து நோய் நீங்கும்

சிவகுருவை அறி குறை தீரும்

சிவகுருவை அறி உண்மை உண்டாகும்

உன்னுள் வாசியை இழு சிவனை உணர்

உன்னுள் வாசியை இழு மெய்யை உணர்

என் அகம் தூய்மையடைவது உன்னால்

சிவகுருவை அறி சிவம்சித்தியாகும்

சிவகுருவை அறி ஆனந்தமே!

 

**************

 

பார்த்தேன்! கேட்டேன்! தெளிந்தேன்! செயல்பட்டேன்! அறிந்

தொழுகினேன்! பெற்றேன்! மகிழ்ச்சியை!

 

***************

 

அலைந்தேன் அலைந்தேன் என் நோய்விரட்ட

தேடினேன் தேடினேன் பல மருத்துவத்தை

உழன்றேன் உழன்றேன் பலநாள் நோயால்

கண்டேன் கண்டேன் சிந்தாமணியை

பெற்றேன் பெற்றேன் நலத்தை

 

சிவகுரு சேவையில்,

ந.இராமச்சந்திரன்

வாசியோக வில்வம் எண் :1312019

+919790447079

சிவசித்தரின் பாமாலை|002|

சிவகுருவே சரணம்!

செந்தமிழின் வித்தகரே சரணம்!
கலியுக வரதனே சரணம்!
சிந்தாமணியின் சுடரே சரணம்!
காலனை வென்றவரே சரணம்!
ஈசனின் மறு பிறப்பே சரணம்!
பகலவனின் ஒளியானவரே சரணம்!
சிவஞான முக்தியரே சரணம்!
சூட்சுமத்தின் வித்தகரே சரணம்!
சர்வ சக்திகளின் அடக்கமானவரே சரணம்!
சிவகுருவே சரணம்!
சிவசித்தரே சரணம்! சரணம்! சரணம்!
*********************************

பெயர் : சு. சண்முகவள்ளி.
ஊர் : சின்னமனூர்.
வாசியோக வில்வம் எண் : 1309304,