வாசியை உட்புகுத்தி வாழ்வில் வளம் வந்ததே !!

சிவகுருவே சரணம்

605

சிவகுரு சரணம் !!!

சிவகுருவே சரணம் !!!

சிவகுரு தாள் சரணம் !!!

மானிட உருவம் எடுத்தவரே !!!

ஐம்பூதங்களின் நடுவே !!!

சிம்மாசனம் கொண்டவரே !!!…

 

வாசியோகம் பயின்று

கழிவகற்றி மனிதனாய்

உயிர் பெற்று வாழ்ந்தோமே !!

வாசியை உட்புகுத்தி

வாழ்வில் வளம் வந்ததே !!

சிவகுரு மந்திரம் சொன்னால்

உடலினில் ஆட்டம் வந்ததே

ஒளித்தளம் கண்டோமே !!

சிவகுரு என சொன்னால்

தடை பல நீங்குதப்பா !!

சிவனது உருவம் கண்டால்

சிவகுரு சிவசித்தரே காட்சியளித்தாரே !!

சரணம் சரணம் சிவகுரு சரணம்

சிவகுரு பாதம் பணிந்தோம் !!!!………….

 

 

என் அக எண்ணங்கள்

எண்ணற்ற எண்ணங்கள்

கானல் நீர் ஆக ………..

என் மனத்தீமை அழிய வாசி கற்க வந்தேனா

கழிவகற்றி சிவகுரு காண வரம் பெற்றேனா

உயிர் பெற்று சுளிமுனை சுட்டதப்பா

சிவகுரு அருட்சொற்கள்

எண்ணம் தன்னை மாற்றுதப்பா

ஒளி ஒன்று கண்டேணப்பா

சிவகுரு அருளியதப்பா

 

 

சிவகுருவின் பக்தன்….

                                                ச.வினோத்கண்ணன்

                                                வில்வம் எண்- 1307020

சிவசித்தன் வாசியோகம்: அகத்திலே அனைத்தும் உண்டு

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

sivssiththan 2  (33)

 

கேட்டதும் கொடுப்பதோ

நினைத்தவுடன் எடுப்பதோ இல்லை உண்மை.

உடல் உள்ளத்தின் கழிவகற்றி

உள்ளத்தால் உணர்வதே உண்மை.

உன் மெய்யை உணர நீ

உண்மையாய் இருத்தல் வேண்டும்.

உண்மை என்பதை உன்னுள் உணரும்போது

உன் மெய் தானாய் உனக்கு உணர்த்தும்

உண்மை எதுவென்று .

அதை உணர்வாய் சிவசித்தர் அருளும் வாசியோகத்தால்.

அகம் சொல்வதே உண்மை .

அதை வாசியோகம் செய்து உணர்ந்தால் உனக்கு நன்மை.

 

****

 

சிவகுரு சிவசித்தர் ஆசியால்,

 

வாசியது யாழாய் உள் நுழைந்து

தேமதுரத் தமிழால்

சிவசித்த மந்திரம் உரைக்க

மனதார உரைக்க ஆடிடுமே சர்ப்பம் தானாய்!

தன்னிலை அறியாது

சீறிடும் உண்மை உன் மெய்யாய் தானே!

 

வாசியோக பக்தன்

ர.சுந்தர்

வாசியோக வில்வம் எண் :  13 09 205

சின்னமனூர்.தேனி மாவட்டம்.

சிவசித்தரின் பாமாலை|002|

சிவகுரு சிவசித்தர் ஆசியால்

FB_IMG_13922478277757260பங்குனியில் பிறந்து
பகுத்தறிந்து
பரம்பொருளை அகத்தில் காட்ட
பார் புகழ வந்த
பரமனே சிவசித்தனே !
பன்னிரு கைகள் இல்லை
பாம்பொன்று உடல்மேல் இல்லை ஆனால்
பலரது விரல் தொட்டு பயிற்சி கொடுத்து கழிவகற்றி
பயிற்சியாளர் உள்ளத்தில் உண்மை
பரத்தை காட்டி
பாம்பாட்டம் படமெடுத்து ஆடவைத்த
பரதத்துவ ஒளியே
பரம்பொருளே எங்கள் சிவகுருவே சிவசித்தனே சரணம்!.