சிவசித்தரின் பாமாலை|004|

சிவகுருவே சரணம்

1. முழு மதியானவரே எங்கள் சிவகுருவே
சந்திரன் ஒளி பெறுவது சூரியனாலே!
நம் உடல் உயிர் பெறுவது சிவகுருவாலே!
சூரியனின் ஒளி இப்புவியில் பாரபட்சமின்றி!
சிவகுருவின் வாசியும் நம்முள் பாரபட்சமின்றி!

2. வெண்மதியே உனக்குள் களங்கம் வந்ததேனோ!
மக்களின் அறியாமையை கண்டு கலங்கினாயோ!
அறிந்தும் அறியா மானிடரை நினைத்து வருந்தினாயோ!
வெண்மதியே களங்கத்தை உன்னுள் ஏற்று,
குளிர்ச்சியை மட்டும் தந்தாயே!
மானிடன் வாழ தேய்ந்து தேய்ந்து வளர்ந்தாயோ!
காலத்தை வென்ற வெண்மதியே!
நம் காலம் முடிந்தாலும் நின் காலம் என்றும் இப்பிரபஞ்சத்தினுள்!

3. அனைவருக்குள்ளும் உண்மை உண்டு
அதை அறிய சிவகுருவின் வாசி உண்டு
அனைவருக்குள்ளும் வாசி உண்டு
அதை அறிய சிவகுருவின் வாசி உண்டு
அனைவருக்குள்ளும் இறைவன் உண்டு
அதை அறிய சிவகுருவின் வாசி உண்டு

4. சிவகுருவின் வாசியை ஏற்க மறுப்பதேனோ!
ஆணவத்தில் வீழ்ந்ததேனோ!
உண்மையை வாய் வார்த்தையில் செப்பினாயோ!
மாயை உன்னுள் சூழ்ந்ததோ!
ஒளியை மறுத்து உடலைப் பார்த்தாயோ!

5. எங்கும் நிறைய பரப்பிரம்மமே!
உடல் கழிவுகள் அகல்வது எப்போது!
உண்மை உணர்வது எப்போது!
மும்மலத்தை அறுப்பது எப்போது!
வாசியை உணர்வது எப்போது!
பிரம்மத்தில் கலப்பது எப்போது!

****************************