ஆடவைக்கும் சிவசித்த திருநாமத்தை உரைக்கையிலே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

#Sivasithan (3)அனுதினமும் அற்புதமும்

அக்னிதற்பரன் வான்வாசியாலே!

அழிக்குமே உடல் கழிவை

அன்றைய தினமே – நீ

அளவை ஊண் எடுக்கையிலே!

அணையாத ஜோதியாய்

ஆத்மநாதனின் ஒளியாற்றல்

அதிகாலை வான்வாசி செய்கையிலே!

அணுவை நல்லணுவாக மாற்றி

ஆற்றலாய் ஆட்டத்தை

ஆடவைக்கும் சிவசித்த திருநாமத்தை உரைக்கையிலே!

ஆழமான மூச்சு அழகாய்

அனுபவித்தோம் சிவசித்தன் நாமத்தை

ஆத்மார்த்தமாய் துதிக்கையிலே!

அக எண்ணத்தை நல்லெண்ணமாய்

ஆக்கி அளவிலா ஆனந்தம்

அருளும் ஆனந்தமூர்த்தியின் வான்வாசியாலே!

அழிக்க முடியாத ஆட்கொல்லியாய்

அகத்திலே தோன்றிட்ட கருமருந்தை

அருட்கொண்டு நாடியறிந்து முறித்திட்ட சிவசித்தனே!

அல்லும் பகலும் ஆலயம் சென்றும்

அருளுணரா உடலை வான்வாசியால்

அணுவாலே ஆற்றல் பெறவைத்தவரே சிவசித்தனே!

அன்பை உடலுக்கு செலுத்தி

ஆற்றலாய் உயிரை உணர வைத்து

அகத்தின் மறைபொருளை அறியவைத்து

ஆற்றலில்லா எம் உடலை நின் வான்வாசியால்

ஆற்றல் அறிய வைத்த

ஆதியானசிவகுருசிவசித்தசங்கரன்

தாள் பணிகின்றேன்!!!!


வாசியோக பக்தன்

ர.சுந்தர்

வாசியோக வில்வம் எண் :  13 09 205

சின்னமனூர்.தேனி மாவட்டம்.

 

உண்மையை உடலிலே அறிய வைத்த சிவசித்தனே!

உண்மையை உடலிலே அறிய வைத்த சிவசித்தனே!

 

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

 

#Sivasithan (4)கால் கொண்டு காலமறிந்து

என்னை உணர்த்திய – சிவசித்தனே!

 

கழிவோடு நான் வாழ்ந்தேன்

எனக்கு கழிவகற்றியது – சிவசித்தனே!

 

நோய் என்பது கழிவே

என உணர்த்தியது – சிவசித்தனே!

 

கரம் பிடித்து கொடியவன் கருமருந்தை

அழித்தெடுத்தது – சிவசித்தனே!

 

முறையற்ற எண்ணமாம் தீயவனாம்

தொக்கமதை அறுத்தெடுத்தது – சிவசித்தனே!

 

பயம் அது நம் எண்ணமே

என எடுத்துரைத்தது – சிவசித்தனே!

 

உயிரின் உண்மை மறைபொருளை

உடலிலே உணர்த்தியது – சிவசித்தனே!

 

உடலே மெய்! அதற்கு ஏற்ற

உணவு முறையை நெறிப்படுத்தியது – சிவசித்தனே!

 

காலமிதை என் உடலிலே உணர்த்தி

இரு நிலையை ஒன்றாய் என்னுள் நிலைப்படுத்தியது – சிவசித்தனே!

 

உடலின் உண்மை சர்ப்பமதை மெய்யாய்

சீற வைத்து மெய்யுணர்த்தியது – சிவசித்தனே!

 

சீரிய சர்ப்பம் சிவசித்த மந்திரத்தால்

சீற்றம் பெற்று சிரசில் ஆட்டம் காண வைத்தது – சிவசித்தனே!

 

உடலிலே ஆற்றல்கள் வலிகளாகக் காட்டி

நிலை கடந்த பேரானந்தம் தந்தது – சிவசித்தனே!

 

இயல்பாய் உடலிலே இயக்கம் தந்து

இறையுணர்வை என்னுள் இயக்க வைத்தது – சிவசித்தனே!

 

வாசிதேகப்பயிற்சியின் உண்மை

மெய்ப்பொருளை உணர்த்தியது – சிவசித்தனே!

 

காணாத உண்மைக்காட்சி என் அகத்தில்

வாசி உள் சென்ற பின் மெய்யாக்கியது – சிவசித்தனே!

 

எண்ணத்தின் வலிமையை வாசிதேகப்பயிற்சியால்

என்னில் விதைத்தது – சிவசித்தனே!

 

கருமையின் உண்மையை கருத்திலே நிறுத்தி

நெற்றி நடுவிலே சுளிமுனை இயங்க வைத்தது – சிவசித்தனே!

 

நிலை தவறா நிலைதனை எனக்கு

என்னுள் உணர்த்தியது – சிவசித்தனே!

என்னுள்ளே என் செயலை என்னுள்

இருந்து எண்ண வைத்தது – சிவசித்தனே!

கழிவாலே கலங்கிய மனதோடும், நோயோடும் சிவசித்தனை சரண் அடைந்தேன். எம் அகத்தை உணர்த்தி உண்மைத் தெளிவை உணர வைத்து என்னை உய்ய வந்த பரம்பொருள் நாயகனே! சிவசித்தனே! எனை உய்வித்த நீயே எனக்கு எல்லாமும் நீயே! என் முழு முதற் பொருளும் நீயே!!!!